Small Business Packaging Orders
வணக்கம் நண்பர்களே இன்றைய கொரோனா தொற்று காலத்தில் பலரும் வேலை இல்லாமல் வருமானத்திற்கு மிகவும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழலில் வெளியில் சென்று வேலை பார்ப்பதைவிட வீட்டில் இருந்தபடியே சம்பாரிக்க பலரும் நினைக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையானது அப்படி மாறிவிட்டது. இன்றைய தொழில் சார்ந்த பகுதியில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே வீட்டிலே செய்யக்கூடிய அருமையான பிசினெஸ் தான் நாங்கள் பதிவிட்டுள்ளோம். அப்படி என்ன தொழில் என்று கேட்கிறீர்களா வாங்க தெரிஞ்சிக்கலாம்..
வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க |
அட்டை பெட்டி தயாரிப்பு தொழில் | பேக்கிங் வேலை:
வேலையாட்கள்:
இந்த தொழிலை செய்வதற்கு வீட்டில் நிறைய ஆட்கள் வேண்டுமென்று அவசியம் இல்லை. இரண்டு ஆட்கள் போதுமானது.
இந்த தொழிலானது ஜவுளி கடைகளில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஒன்றுதான். டெக்ஸ்டைல் ஷாப்பில் மிகவும் முக்கியமாக இருப்பது துணிகளை வைப்பதற்கான அட்டை பெட்டி.
ஆர்டர்ஸ் எப்படி பெறலாம்?
இந்த துணிகளை வைக்கும் Box தயாரிப்பு ஆர்டர்ஸ்களை சிறிய சிறிய கடைகள் முதல் Manufacturing கம்பெனிகளில் ஆர்டர்ஸ் பெறலாம்.
இந்த தொழில் செய்வதற்கு எந்த கல்வி தகுதியும் தேவையில்லை. மொத்தமாக அட்டைகளானது மடிப்புகள் இல்லாமல் வெளியில் கிடைக்கும்.
Box தயாரிப்பு:
packing orders jobs from home: அந்த Field-ல் அனுபவம் இல்லாதவர் ஒரு மணி நேரத்தில் 100 பாக்ஸ் தயாரிக்கலாம். நல்ல அனுபவம் உள்ளவர்கள் ஒரு மணி நேரத்தில் 300 பாக்ஸ் தயாரிக்கலாம்.
வகைகள்:
பாக்ஸ் வகைகளில் பிளைன் பாக்ஸ், கலர் பாக்ஸ், நிறுவனத்தின் பெயர் ஒட்டிய பாக்ஸ், ப்ரிண்டட் டைப் இது போன்ற பல வகையான பாக்ஸ் டைப்கள் உள்ளன. இதற்கான சந்தை விலை Charges-ஐ சரியாக தெரிந்துக்கொண்டு நாம் செய்தால் இந்த தொழிலில் நாம் முழுமையாக லாபத்தை பெறலாம்.
வருடம் முழுவதும் அதிக டிமாண்ட் இருக்கும் தொழில்..! |
விலை மதிப்பு:
- மெட்டீரியல் விலை – ரூ. 20/-
- லேபர் சார்ஜ் – ரூ. 2/- (1 மணி நேரத்திற்கு 200 பாக்ஸ் செய்தால் 200 ரூபாய் கிடைக்கும், அதுவே 5 மணிநேரம் செய்தால் 1,000 கிடைக்கும்) இந்த விலையானது பீஸ் கணக்குதான்.
- போக்குவரத்து செலவு – ரூ. 3
- மார்க்கெட்டிங் செலவு – ரூ. 5/-
- மொத்த செலவுகள் – ரூ. 30.00/-
மொத்த செலவுகள் 30 என்றால் நாம் கடைகளில் பாக்ஸை விற்கும் போது 50 ரூபாய்க்கு விற்கலாம். இதிலிருந்து ஒரு பாக்ஸிற்கு லாபமானது ரூ. 20 கிடைக்கும்.
வாரத்திற்கு 500 பாக்ஸ் என்றால் ரூ. 10,000/- லாபமானது சிறிய டெக்ஸ்டைல் கடைகளிலிருந்து தொடங்கினால் லாபம் பெறமுடியும்.
உதாரணத்திற்கு ஒரு கடையில் நீங்கள் 20 பாக்ஸ் விற்பனை செய்கிறீர்கள் என்றால் 30 நாட்களுக்கு அந்த கடையில் குறைந்தபட்சம் 600 பாக்ஸ் விற்பனை ஆகும். சராசரியாக மாதத்திற்கு 500 பாக்ஸ் விற்பனை ஆகி லாபம் கிடைக்கும்.
10 கடை அல்லது நல்ல பெரிய அளவில் ஆர்டர்ஸ் ஒரே இடத்தில் 5000 பீஸ் கிடைக்கிறது என்றால் 1 லட்சம் லாபத்தை பார்க்கலாம்.
இந்த தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. வேலையாட்களை வைத்தே நல்ல லாபத்தை பெறலாம்.
நீங்கள் முதலில் இந்த தொழிலுக்கு நல்ல தரமான பாக்ஸை தேர்வு செய்ய வேண்டும். உங்களுடைய தரத்திற்கேற்ற லாபம் உங்களை தேடி வரும்.
சமூக வலைத்தளத்தில் தெரியப்படுத்த:
நீங்கள் இது போன்ற Packing செய்து தருகிறீர்கள் என்பதை இன்ஸ்டா (instagram), முகநூல் (FB), வாட்சாப் (Whatsapp) போன்ற சமூக ஊடகங்களில் ஒரு விளம்பரம் செய்தால் போதும். உங்களை தேடி லாபம் வரும். உங்களுடைய பொருளை நல்ல தரத்துடன், நல்ல மாடர்னாகவும் செய்து கொடுத்தால் தயக்கம் இல்லாமல் வாங்கிக்கொள்வார்கள். இந்த தொழிலை ட்ரை பண்ணி பாருங்கள்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |