Palkova Business Plan in Tamil
நம் முன்னோர்கள் காலத்தில் பாதியளவு பணம் இருந்தால் கூட சமாளித்து விடலாம். ஆனால் இன்றைய பொருளாதார நிலையில் நம் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் இல்லாத நிலை ஏற்படுகிறது. அதற்கு முழு காரணம் எண்ணற்ற செலவுகளே ஆகும். அதனால் நம் எந்த தொழிலை செய்தால் முன்னேற முடியும் என்று யோசித்து அந்த தொழிலை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துக்கொண்டு நடத்துவதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். அதற்கு இன்றைய பதிவில் பால்கோவா தொழில் எப்படி செய்வதை என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சுயதொழில்:
பெரும்பாலும் ஆண்கள் வேலை தேடி அலைந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதற்கு நம் வீட்டிலிருத்தபடியே ஒரு தொழிலை தொடங்கி அதனை நல்ல முறையில் நடந்துவதன் மூலம் அதிக வருமானத்தை பெற முடியும்.
அதிக வருமானம் தரும் தொழில்:
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து லாபத்தை தரக்கூடிய தொழிலாக பால்கோவா தொழில் உள்ளது. அதிலும் நம் இந்தியாவில் அதிக வரவேற்பை கொண்ட தொழிலாக பால்கோவா மாறிவிட்டது. அதனால் இந்த பால்கோவா வியாபாரத்தை எடுத்து நடத்துவதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.
மூலப்பொருள்:
- பசு பால்
- ஜீனி
- இரும்பு கடாய்
- கரண்டி
- தட்டு
மாதந்தோறும் 10,000 ரூபாய் வருமானம் அதுவும் வீட்டில் இருந்தேவா அப்படி என்ன தொழில்
முதலீடு:
இந்த பால்கோவா தொழிலை தொடங்க ஆரம்ப முதலீடாக 10,000 ரூபாய் கையில் வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நம் தொழிலுக்கு ஏற்றவாறு கையில் பணம் வைத்து கொள்வது அவசியமாகும்.
இடம்:
பால்கோவா தொழில் தொடங்குவதற்கு இடம் முக்கியமானதாகும். அந்த இடமானது நல்ல சுத்தமாகவும், சுகாரமானதாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
ஆட்கள்:
இந்த பால்கோவா தொழிலுக்கு ஏற்றவாறு ஆட்கள் அவசியம். பால்கோவா வியாபாரம் பெரிதாக தொடங்க போகிறோம் என்றால் மிகாமல் 10 ஆட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பால்கோவா செய்யும் முறை:
முதலில் இரும்பு கடாயை எடுத்து கொண்டு, அதனுடன் 8 லிட்டர் பாசு பால் மற்றும் 1 கிலோ ஜீனி சேர்த்து நன்றாக கலக்கவும். அந்த பசும் பாலை 20 நிமிடம் நன்றாக காய்க்கவும். அதன் பின்பு பாலானது நல்ல கெட்டியாக வந்தவுடன், இப்போது அதனை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற விட வேண்டும். அவ்வளவு தான் பால்கோவா தயார்.
இப்போது தயார் செய்துள்ள பால்கோவாவை உங்களுக்கு வேண்டிய அளவுகளின் படி Packing செய்தால் செய்து கொள்ள வேண்டும்.
இந்த தொழிலில் இவ்வளவு வருமானமானு தோனுதா அப்போ லாபத்தை கொஞ்சம் யோசிங்க
வருமானம்:
ஒரு கிலோ பால்கோவா விலையானது 230 ரூபாயாக உள்ளது. ஒரு நாளைக்கு தோராயமாக 15 கிலோ பால்கோவா விற்பனை செய்தாலும் கூட 3,450 ரூபாய் வருமானம் பெறலாம்.
இதனை போல தொடர்ச்சியாக விற்பனை செய்தால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 1,03,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |