Paper bag Making Business at Home in Tamil
இன்றைய காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இனி வேலை தேடி அலைய அவசியமில்லை. ஏனென்றால் நாம் வீட்டிலேயே இருந்து கொண்டு சுலபமாக ஒரு தொழிலை செய்யலாம். நமது கையில் இருக்கும் குறைந்த முதலீட்டை வைத்து அதிகம் லாபம் தரும் தொழிலை அறிந்து அதனை செய்யலாம். அதற்கு இன்றைய பதிவில் வீட்டிலேயே இருந்து கொண்டு தொழில் செய்வதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பேப்பர் பை தொழில்:
இந்த பேப்பர் பை தொழிலானது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருவருக்கும் ஏற்ற தொழிலாக உள்ளது. அதிலும் இந்த பேப்பர் பை அதிகம் கடைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
பேப்பர் தொழில் பயன்கள்:
தற்போது மக்கள் அனைவரும் இந்த பேப்பர் பைக்கு மாறி வருகிறார்கள். இந்த பேப்பர் பையானது பல்வேறு இயந்திரங்கள் மூலம் தயார் செய்து ஏற்றுமதி செய்து இந்தியாவிற்கு வருகிறது. அதனால் நமக்கு லாபம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. அதற்கு கிராமத்தில் இருந்து பேப்பர் பை தொழிலை செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.
தேவையான மூலப்பொருள் முதலீடு
பேப்பர் தொழிலுக்கு முக்கியமான பொருள் News Pepar, அல்லது வண்ணம் நிறைந்த பேப்பர், Punching Machine, பசை மற்றும் சணல் போன்றவை தேவைப்படுகிறது.
இந்த தொழிலை துவங்குவதற்கு தோராயமாக 600 ரூபாய் தேவைப்படும்.
மாதந்தோறும் 10,000 ரூபாய் வருமானம் அதுவும் வீட்டில் இருந்தேவா.. அப்படி என்ன தொழில்..
பேப்பர் பை செய்யும் முறைகள்:
முதலில் பேப்பரை எடுத்து கொண்டு, அதனை இரு பக்கமும் சமமாக மடித்து கொண்டு பசையினை வைத்து ஒட்டி விட வேண்டும். அதன் பின்பு அந்த பேப்பரின் ஒருபுறத்தில் மட்டும் பசையை தடவி பேப்பரின் உள்ளே கை விடும் அளவிற்கு இடைவெளி விட்டு ஒட்டிவிட வேண்டும். அதன் பின்பு Punching Machine வைத்து ஓட்டை போட்டு சணலை கட்டிவிட்டால் பேப்பர் பை தயார்.
பேப்பர் தொழில் முதலில் 25 பைகள் வரை செய்து வரலாம். அதன் பிறகு ஒரு நாளைக்கு தோராயமாக 100 பேப்பர் பைகள் கூட செய்யலாம்.
வருமானம்:
ஒரு News Papar கிலோ 13 ரூபாய்க்கு வாங்கினால், அதனை பேப்பர் பையாக விற்கும் போது கிடைப்பது 6 அல்லது 8 ரூபாய்க்கு லாபம் கிடைக்கும். அதனால் 100 அல்லது 200 பைகள் விற்கும் போது 108 ரூபாய்க்கு மேல் தோராயமாக லாபம் வரும். ஒரு மாதத்திற்கு 10,000 மேல் லாபம் கிடைக்கும்.
வண்ணம் நிறைந்த பையாக இருந்தால் தோராயமாக ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்.
இன்றைய கால பெண்கள் வெளியே வேலைக்கு சென்று கஷ்டப்படாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு இந்த தொழிலை செய்து வெற்றி பெறுங்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |