Part Time Cook For Home Business Ideas in Tamil
மனிதர்களுக்கு உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதற்கு கூட இப்போது பிரச்சனையாக உள்ளது. ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று நினைப்பீர்கள். வாழ்க்கையில் சம்பாதிப்பது எதற்காக உணவு உடைக்காக தானே. ஆனால் அந்த பணத்தை சம்பாதிக்க குடும்பத்தை விட்டு தொலைவில் வந்து வேலைபார்க்கிறார்கள். அவர்களுக்கு வெளியில் சாப்பிடுவது உடலுக்கும் சரி வாய்க்கும் சரி பிடிக்கவில்லை. அவர்களுக்கு உதவிடும் வகையிலும் இன்னொருவருக்கு சம்பளம் கிடைக்கும் வகையிலும் இந்த தொழில் இருக்கும். அது என்ன தொழில் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Part Time Cook For Home Business Ideas in Tamil:
பொதுவாக வீட்டில் நிறைய நபர்கள் இருப்பார்கள் அல்லது இருவர் மட்டும் இருப்பார்கள். இவர் இருவருக்குமே வேலைக்கு செல்வதற்கு மட்டுமே நேரம் சரியாக இருக்கும். அதனால் வீட்டில் ருசியாக சமைத்து சாப்பிட நேரம் இருக்காது. ஏனோ தானோ என்று சமைத்து சாப்பிடுவார்கள்.
அதேபோல் சிலருக்கு காலை உணவு மட்டும் செய்து சாப்பிட்டுவிட்டு மதிய உணவை வேலைபார்க்கும் இடத்தில் சாப்பிடுவார்கள். இவர்களின் வேலையை எப்படி குறைப்பது அவர்களுக்கு மூன்று வேலையும் சரியாக சாப்பிடவும் என்ன செய்வது என்று யோசித்து இந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
இப்போது முழு நேரமும் சமைக்க ஆள் இல்லையென்றாலும் பார்ட் டைம் ஆள் வைத்துக் கொள்ளலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வீட்டில் இருந்தபடியே மாதம் 1,20,000 ரூபாய் வரை வருமானம் தரும் அருமையான தொழில்..!
Part Time Female Cook Business Plan in Tamil:
நீங்கள் நன்றாக சமைப்பீர்கள் என்றால் வருக்காலத்தில் உங்களுக்கு தான் தேவை அதிகம். நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு 100 முதல் 200 வரை சம்பாதிக்க முடியும். அது எப்படி என்றால் நீங்கள் இப்போது ஒருவர் வீட்டிற்கு காலை உணவுகளை மட்டும் சமைத்து கொடுப்பீர்கள் என்றால் அந்த ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் பெறலாம்.
அடுத்து மதிய உணவை சமைத்து கொடுத்தால் அதற்கு 1.1/2 அரை மணி நேரத்திற்கு 150 ரூபாய் வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் தினமும் வருமானம் பார்க்கலாம். சம்பளத்தை மாதம் மாதம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தினம் கூட பெற்றுக் கொள்ளலாம்.
எப்படி இருந்தாலும் காலை மாலை என இரண்டு வேலை மட்டுமே 2 வீட்டிற்கு சமைக்க முடியும் என்று கேட்பீர்கள். இப்போது ஒருவர் வீட்டில் காலை 8 மணிக்கு சாப்பிடுவார்கள். சிலர் வீட்டில் 10 மணிக்கு சாப்பிடுவார்கள். அதற்கு தகுந்தது போல் உங்கள் வேலையை மாற்றி பார்த்து சம்பாதிக்க முடியும்.
லாபம்:
தினமும் 100 என்றால் மாதம் 3,000 அதேபோல் தினமும் 200 ரூபாய் என்றால் மாதம் 4,000 ரூபாய் கிடைக்கும். இதேபோல் மாதம் 4 வீட்டில் செய்தாலும் மாதம் தோராயமாக 15,000 –திற்கு மேல் சம்பாதிக்க முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |