2023-ஆம் ஆண்டின் 5 லாபகரமான Part Time Small Business

Advertisement

Part Time Small Business Ideas in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. இன்றைய பதிவு Part Time Small Business Ideas பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் பகுதி நேரமாக ஏதாவது சிறு தொழில் தொடங்க வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கு நாம் 5 வகையான லாபகரமான சிறு தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். அவற்றில் உங்களுக்கு எந்த தொழில் யோசனை ஏற்றதாக இருக்குமோ அதனை தேர்வு செய்து நீங்கள் பார்ட் டைமாக தொழில் தொடங்கி லாபம் பெறலாம். சரி வாங்க அந்த 5 லாபகரமான Part Time Business ஐடியா பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Social Media Consultant:Social media Consultant

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை பயனர்களிடம் சென்றடைய சமூக வலைத்தளங்களில் மார்கெட்டிங் செய்யலாம். இதற்காக Face book, Twitter, Google plus, Linked in, Pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்கள் உள்ளது. இந்த சமூக வலைத்தளங்களில் தொழில் பற்றி நிறைய விஷயங்களை பதிவிடலாம் அல்லது ஆலோசனை சொல்லலாம். இதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இருப்பினும் Social Media Marketing பற்றிய முழுமையான விவரங்களை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
முதலீடு குறைவாக இருந்தால் போதும் மாதம் மாதம் நல்ல லாபம் கிடைக்கும்..!

Personal Trainer:Personal Trainer

இப்போதெல்லாம் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்தும் நபர்கள் அதிகமாகிவிட்டனர். அதிலும் பலர் தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற வேண்டும் என்று விரும்புகின்றன. ஆக உங்களுக்கு உடலை ஃபிட்னஸ்-வுடன் வைத்துக்கொள்ள பயிற்சிகள், டயட் முறைகள் இவையெல்லாம் தெரியும் என்றால், நீங்கள் பகுதி நேரமாக மட்டும் Personal Training கொடுக்கலாம். இதன் மூலம் நீங்கள் அவர்களிடம் இருந்து இதற்கான கட்டணம் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

Freelance Writer:Freelance Writer

நீங்கள் ஒரு Freelance Writer-ஆக வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கலாம். இதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. அதாவது ஒருவருடைய வலைதளத்தில் அதற்கு சம்பந்தமான உள்ளடக்கத்தை உருவாக்கி பதிவிடலாம். நீங்கள் செய்யும் பணிக்கு ஏற்றவாறு உங்களுக்கு பணம் கிடைக்கும்.

Start a Blog:Start a Blog

நீங்களே சொந்தமாக ஒரு Blog ஆரம்பிக்கலாம். அவற்றில் உங்களுக்கு தெரிந்த அல்லது பிடித்த விஷயங்களை தினமும் பதிவு செய்து வரலாம். இருந்தாலும் இவற்றில் உடனே வருமானம் பெற முடியாது சில மாதங்கள் அல்லது வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை தினமும் அவற்றில் போஸ்ட் போட்டுக்கொண்டே இருங்கள். உங்களுடைய பதிவு நல்ல பதிவுகளாக இருந்து கூகுளில் இன்டெக்ஸ் ஆகிவிட்டது என்றால், அதன் பிறகு மாதம் மாதம் நீங்கள் அதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
எந்த காலத்திலும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

Event Planner:Event Planner

இந்த Event Planner ஒரு சிறந்த தொழில் ஆகும். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சரி, அந்த விழாவிற்கு A to Z தேவையான அனைத்து விஷயங்களையும் நீங்கள் செய்து கொடுக்கலாம். அந்த விழாவிற்க்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நீங்கள் செய்துகொடுத்த பிறகு  உங்களுக்கு பணம் வழங்கப்படும். அல்லது முன்கூட்டியே நீங்கள் அந்த விழாவிற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் கேட்டு வாங்கி கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் சரி அந்த விழாவை நீங்கள் சிறப்பாக செய்துகொடுக்க வேண்டும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement