அதிக லாபம் கிடைக்கும் பாஸ்தா தயாரிப்பு தொழில்..! Pasta Making Business Plan..!
how To Start A Pasta Making Business: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் புதிதாக யாரும் செய்திடாத பாஸ்தா தயாரிப்பு தொழில் ஐடியாவை பற்றித்தான் பார்க்க போகிறோம். இப்போது உள்ள மாடர்ன் உலகில் மேகி உணவிற்கு அடுத்ததாக பாஸ்தா உணவானது சிறந்த இடத்தை பிடித்துள்ளது. இந்த பாஸ்தா தயாரிப்பு தொழிலை பெரும்பாலும் தமிழ்நாட்டில் இதுவரை யாரும் தொடங்கவில்லை. இந்த தொழிலை துவங்கினால் நிறைய லாபத்தினை நாம் பார்க்கலாம். இந்த பாஸ்தா மிஷினில் நீங்கள் பாஸ்தா மட்டும் தயாரிப்பு தொழிலாக செய்யாமல் நூடுல்ஸ், அப்பளம் போன்ற பல உணவுகளை இந்த மிசின் மூலம் செய்யலாம். சரி வாங்க இந்த தொழிலை எப்படி துவங்கலாம், இதற்கு என்னென்ன மூலப்பொருட்கள், இயந்திரம் தேவைப்படும் என்ற முழு விவரங்களையும் விரிவாக தெரிந்துக்கொள்ளவோம்.
இட வசதி:
இந்த பாஸ்தா தொழில் தொடங்குவதற்கு வீட்டில் சிறிய அறை போதுமானது.
மூலப்பொருட்கள்:
இந்த தொழில் துவங்க கண்டிப்பாக பாஸ்தா தயாரிப்பு மிசின் வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக இந்த தொழிலுக்கு ஏற்ற பொருள் செமிலினா(semolina flour) என்ற மாவானது தேவைப்படும்.
அடுத்து white flour, முட்டை, பேக்கிங் கவர் மட்டும் இந்த பாஸ்தா தொழில் செய்வதற்கு தேவைப்படும் மூலப்பொருளாகும்.
தேவைப்படும் இயந்திரம்:
இந்த தொழில் தொடங்க தேவைப்படுவது இந்த பாஸ்தா மிஷின் தான். இந்த இயந்திரமானது அனைத்து ஆன்லைன் ஷாப்பிலும் கிடைக்கின்றது.
இந்த இயந்திரத்தின் ஆரம்ப விலையானது ரூ.1 லட்சம் முதல் கிடைக்கின்றது. தங்களுக்கு பிடித்த டிசைன்களில் பாஸ்தா தயாரிப்பு மிஷினை வாங்கி தொழிலை ஆரம்பிக்கலாம்.
செய்முறை பொருளின் அளவு:
- செமிலினா பவுடர் – 2 கிலோ
- white flour மாவு – 1 கிலோ
- முட்டை – 1
குறிப்பு: உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறும் நீங்கள் அளவினை கணக்கீடு செய்து கொள்ளலாம்.
பாஸ்தா செய்யும் முறை:
பாஸ்தா தொழில் தொடங்க நினைப்பவர்கள் முதலில் அந்த மிஷினில் செமிலினா மாவையும், white flour- மாவு இரண்டினையும் மிஷினில் சேர்த்த பிறகு மிஷினானது வேலை செய்ய ஆரம்பம் ஆகும்.
இந்த மிஷினில் மாவினை சேர்த்த பிறகு மாவானது நன்றாக இணையும். அந்த மாவு சேரும் போதே பாஸ்தா செய்வதற்கான முட்டையினை அதில் ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அடுத்து நல்ல பதத்திற்கு மாவானது வந்துவிடும்.
அடுத்து அந்த மிஷினில் பாஸ்தா வடிவில் மவுல்டிங் போன்று உள்ள இடத்தில் நீங்கள் வைத்த மாவானது அதன் வழியாக வந்துவிடும். நீங்கள் அந்த மிஷினில் அழுத்தம் கொடுக்கும்போது மாவானது தானாகவே கட் செய்து வரும். இதுதான் மிஷினில் பாஸ்தா செய்யும் முறையாகும்.
அதன் பிறகு பாஸ்தாவானது மிஷினில் இருந்து வெளியில் வந்தடையும். பாஸ்தா வெளியில் வந்த பிறகு இவற்றை காய வைக்க வேண்டும். அதன் பிறகு பேக்கிங் செய்ய வேண்டியதாக இருக்கும். இதற்கு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கொடுத்து தயார் செய்து அதன் பிறகு காய வைத்த பாஸ்தாவினை பேக் செய்து விற்பனை செய்யலாம்.
சந்தை வாய்ப்பு:
இந்த பாஸ்தா தொழில் பொறுத்தவரையிலும் நீங்கள் மளிகை கடைகளில், அதோடு மளிகை கடைகளுக்கு distributor செய்பவர்கள் மூலம் விற்பனை செய்தால் தொழில் நல்ல வளர்ச்சி அடையும்.
அதிக போட்டி இல்லாத தொழில். இந்த தொழிலை செய்தால் கண்டிப்பாக நிறைய லாபம் கிடைக்கும். இந்த மிஷினில் இரண்டு விதமான தொழில் கூட தாராளமாய் செய்யலாம். வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில் தரமாக செய்து விற்பனை செய்தால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து லாபம் கூடும்.
யாரும் செய்திடாத இந்த புதிய தொழிலை இப்போதே ஆரம்பித்து அதிக லாபம் அடைந்து வாழ்க்கையில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |