மக்களிடையே Demand எப்பொழுதும் இருக்கும். இந்த தொழிலை செய்தால் நீங்கள் தான் ராஜா

Perfume Business Ideas in Tamil

Perfume Business Ideas in Tamil

ஹாய் நண்பர்களே.! தினமும் உங்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதுப்புது ஐடியாக்களை சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அனைவர்க்கும் பயன்பட கூடிய வாசனை திரவியம் மூலம் சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம். மக்கள் வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு வாசனை திரவியத்தின் பயன்பாடு அதிகம் உள்ளது. இனிமேலும் அதன் பயன்பாடு அதிகம் ஆகுமே தவிர குறைந்து போகாது. அதனால் இந்த தொழிலை செய்தால் எக்காலத்திலும் நஷ்டமே ஆகாது. வாங்க இந்த தொழில் எப்படி தொடங்குவது என்று பார்பபோம்.

இந்த தொழிலையும் பண்ணுங்க ⇒ மாதம் 20,000 வரை சம்பாதிக்கும் அருமையான தொழில்

வாசனை திரவியங்கள் வணிக சந்தை அளவு:

வாசனை திரவியங்கள் இந்தியாவில் மட்டும் இல்லை. வெளிநாட்டிலும் இதன் பயன்பாடு அதிகமாக தான் இருக்கிறது. இப்போதும் மட்டும் இல்லை என்றுமே இதன் பயன்பாடு அதிகமாக தான் இருக்கும்.

2021 ஆம் ஆண்டு இதன் வளர்ச்சி 33.5  Billion வளர்ச்சி அடைந்தது. வரும் வருடங்களில் அதாவது 2022 முதல் 2027 குள் 6.1 % வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசனை திரவியம் தொழில் தொடங்குவது எப்படி.?

முதலில் என்ன வகையான வாசனை திரவியங்கள் உள்ளது. மக்கள் அதிகம் வாங்க கூடியதாகவும் உள்ளதாக பார்க்க வேண்டும். அதில் சிலவற்றை பார்க்கலாம்.

  • Body deodorant
  • Celebrity perfume
  • Exotic fragrances
  • Anti-sweat roll-ons and perfumes

வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்க கூடிய வாசனை திரவியங்களை சேமிக்க வேண்டும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்களை Wholesale  இடத்தில் வாங்கவும். Wholesale -யில் வாங்கினால் தான் லாபம் கிடைக்கும்.

Wholesale கடையில் நீங்கள் வாங்கும் போது மொத்தமாக வாங்கி கொள்ளவும். அதற்கான நிதியை வைத்து கொள்ள வேண்டும்.

வாசனை திரவியம் விற்பனை செய்ய சில பதிவுகள் செய்ய வேண்டும் அவை

ISO சான்றிதழ்
MSME பதிவு
நீங்கள் இறக்குமதி-ஏற்றுமதி வணிகத்தில் இருந்தால், இறக்குமதி குறியீடு மற்றும் AD குறியீடு பதிவு

போன்றவை பதிவு செய்திருக்க வேண்டும்.

விளம்பரம் செய்தல்:

எந்த பொருளையும் விளம்பரம் செய்யாமல் வாடிக்கையாளர்கள் கிடைக்க மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் மக்களிடையே கொண்டு சேர்க்கும். அந்த வகையில் வாசனை திரவியத்தை Social Media-வில் தெரியப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

விற்பனை:

நீங்கள் இதனை Amazon இணையதளத்தில் விற்பனை செய்யலாம். மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த நிறுவனத்தை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
SHARE