இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

Business Ideas 2023 

புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தொழில் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுபவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள். இன்று இந்த பதிவின் மூலம் ஒரு சிறந்த தொழிலை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Play School in Tamil: 

How To Start Play School Business in Tamil

நீங்கள் கற்பிப்பதில் ஆர்வமாக இருந்தால் மற்றும் குழந்தை பருவ கல்வியில் முன் அனுபவம் பெற்றிருந்தால் நீங்கள் தாராளமாக இந்த தொழிலை தொடங்கலாம். விளையாட்டுப் பள்ளிகள் கல்வித் துறையில் மிகவும் பிரபலமான வணிக யோசனையாக செயல்பட்டு வருகிறது. அதனால் நீங்கள் இந்த தொழிலை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தொடங்கலாம்.

Play School என்பது விளையாட்டுப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்வியானது முக்கியமாக 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கபடுகிறது. இந்த விளையாட்டுப் பள்ளியில் மிகச் சிறிய குழந்தைகளுக்கு கற்றல் மற்றும் விளையாடுதல் அதேபோல சமூக திறன்கள் மற்றும் கற்றல் திறன்களை வளர்க்க உதவுகின்றன. அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்.

இந்த தொழில் செய்ய பொருள் வாங்க வேண்டாம், விற்க வேண்டாம் வீட்டில் இருந்தபடியே மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

How To Start Play School Business in Tamil: 

Play School in Tamil

தனி இடத்திலோ அல்லது உங்கள் வீட்டிலேயோ இந்த தொழிலை நீங்கள் தொடங்கலாம். நீங்கள் ஆரம்பிக்கும் இந்த பள்ளி குடியிருப்பு அதிகம் இருக்கும் இடத்தில் அமைப்பது நல்லது. ஏனென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள விளையாட்டுப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நீங்கள் தொடங்கும் இடம் குறைந்தது 30 குழந்தைகள் படிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். நீங்கள் இந்த Play School தொடங்கி நடத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழை (என்ஓசி) பெற வேண்டும். 

அதுபோல குழந்தைகளை பார்த்து கொள்வதற்கும் அவர்களை வழிநடத்துவதற்கும் 10 குழந்தைகளுக்கு 1 ஆசிரியர் அல்லது பயற்சி பெற்றவர் இருக்க வேண்டும்.

மேலும், நீங்கள் தொடங்கும் சொந்த பள்ளியில் கற்பிக்க விரும்பினால், உங்களுக்கு B.Ed பட்டம் அல்லது முன்பள்ளி கற்பித்தல் திட்டத்தில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கொஞ்சம் இடம் இருந்தால் போதும் 30 நாளில் 2,00,000/- சம்பாதிக்கலாம்.. அருமையான தொழில்..!

முதலீடு எவ்வளவு: 

இந்த தொழில் தொடங்குவதற்கு ஆரம்ப முதலீடு தேவைப்படும். அதாவது பொம்மைகள் மற்றும் பிற விளையாட்டு பொருட்கள் அதேசமயம் கல்விப் பொருட்கள் மற்றும் கற்றல் கருவிகள் மற்றும் மற்ற செலவுகள் போன்றவற்றிற்கு 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

மாத வருமானம் எவ்வளவு..?  

உங்கள் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தைக்கு மாதக்கட்டணம் 2000 லிருந்து 2,500 ரூபாய் வரை வசூலிக்கலாம். அதுபோல நீங்கள் பகல்நேர பராமரிப்பு சேவைகள் மற்றும் உணவை வழங்க விரும்பினால், ஒரு மாணவருக்கு 3,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கலாம்.

ஒரு குழந்தைக்கு 3,500 ரூபாய் என்றால் 10 குழந்தைக்கு 35,000 ரூபாய் என்று மாத வருமானமாக உங்களுக்கு கிடைக்கும். அதுபோல 15 குழந்தைகளுக்கு மேல் சேர்ந்தால் மாதம் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம்.

2023 இல் நீங்களும் முதலாளியாக மாற வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement