சுயதொழில் – பாப்கார்ன் தயாரிப்பு தொழில் (Popcorn Business Ideas)..!
சுயதொழில் துவங்குவதற்கு பல தொழில் வாய்ப்புகள் இருக்கின்றது. இருப்பினும் உணவு பொருள் சார்ந்த தயாரிப்பு தொழில் மூலம் விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம்.
அதிலும் குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய பாப்கார்ன் தயாரிப்பு தொழில் தற்போது அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே பாப்கார்ன் தயாரிப்பு தொழில் செய்து தினமும் அதிக லாபம் பெறலாம்.
அடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..! |
சுயதொழில் – பாப்கார்ன் தயாரிப்பு தொழில் – முதலீடு
வீட்டில் ஒரு ரூம் போதும், இதற்கு ஒரு பாப்கார்ன் மெஷின் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம், கட்டமைப்பு 10க்கு 10 அடி அறை போதும், பயன்பாட்டிற்கு கூடுதலாக ஒரு அறை தேவை.
இந்த பாப்கார்ன் மெஷின் Amazon, Flipkart, Snapdealபோன்ற Online Store யிலும் வாங்கலாம்.
பாப்கார்ன் தயாரிப்பு தொழில் – நிரந்தர முதலீடு:
பேக்கிங் மெஷின் ரூ.1,50,000/- முதல் கிடைக்கிறது. தற்போது மின்சாரம் தட்டுபாடாக உள்ளத்தால் கேசில் சில் பயன்படுத்த கூடிய பாப்கார்ன் மெஷின் வந்து விட்டது. இதையும் பயன்படுத்தலாம்.
இதை IndiaMart போன்ற Online Store யிலும் வாங்கலாம்.
சுயதொழில் – பாப்கார்ன் தயாரிப்பு தொழில் – விற்பனை வாய்ப்பு
சுற்றுச் சூழல் அக்கறை காரணங்களால் பெரும்பாலான பொருள்கள் பாலீதின் கவரில் அடைத்து வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், தியேட்டர்கள், மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர் பிடிக்கலாம்.
நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும் அல்லது சிறு வியாபாரிகளிடம் கொடுக்கலாம், சைக்கிள் வியாபாரம் செய்யலாம். இது மற்றும் பல பொருள் சேர்த்து விற்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்.
சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..! |
பாப்கார்ன் தயாரிப்பு தொழில் தேவையானவை:
இந்த பாப்கார்ன் செய்யும் முறையை மெஷின் இல்லாமல் கூட தயார் செய்து விற்பனை செய்ய முடியும்.
பாப்கான் செய்யும் முறை – உதாரணத்திற்கு:
- காய்ந்த சோளம் – 1 தேக்கரண்டி
- எதாவது ஒரு எண்ணெய்
- உப்பு கொஞ்சம்
- மஞ்சள் தூள் தேவையான அளவு
பாப்கார்ன் செய்முறை :
7.5 அல்லது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய், உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள், சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
‘பட் பட்’ என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும்.
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.
குறிப்பு (Popcorn Business Ideas):
தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்து விடவும்.
பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.இது எடுத்து கட்டாக 50 கிராம்மிற்கு சொல்லாபட்டது.
பாப்கார்ன் செய்முறை – உற்பத்தி செலவு:
பாப்கார்ன் மெஷின் விலை – 3,000/- 15,000/-
Heat sealing machine – 500/- 1,000/-
காய்ந்த சோளம் 1 கிலோ – 65 ரூபாய்
மசாலா பொருட்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப செலவு மாறுபடும்.
ஒருநாள் ஒருமுறை உற்பத்திக்கு ஆகும் செலவு:
சோளம் 250 கிராம் –13 ரூபாய்
எண்ணெய் 250 மில்லி – 20 ரூபாய்
மின்சாரம் செலவு – 10 ரூபாய்
மசாலா பொருட்களுக்கு – 7 ரூபாய்
ஒரு நாளைக்கு ஒரு முறை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு ரூபாய் 50/-
இதன் மூலம் 30 பாப்கார்ன் பாகேடுகள் தயார் செய்ய முடியும்.
ஒரு பாக்கேட் 10 ரூபாய் என்று விற்பனை செய்தால் 300 ரூபாய் கிடைக்கும். செலவு போக நமக்கு இலாபமாக ரூபாய் 250/- ஒருநாள் ஒரு முறை தயார் செய்யும் போது கிடைக்கும்.
சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..? |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2020 |