இப்ப மட்டும் இல்லங்க எப்போதுமே டாப்ல இருக்க போறது இது தாங்க.!

Advertisement

பரோட்டா கடை தொழில்

இன்றைய கால கட்டத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்கின்றனர். ஆனால் கிடைத்த வேலையை செய்தால் அன்றைய பொழுதை மட்டும் தான் கழிக்க முடியும். வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென்றால் சுய தொழில் தான் செய்ய வேண்டும். ஏனென்றால் மற்றவர்களிடம் சென்று வேலை பார்ப்பவர்களை விட சுய தொழில் செய்பவர்கள் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடுவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

பரோட்டா கடை வைப்பது எப்படி.?

profit business ideas in tamil

இந்த பதிவில் பரோட்டா கடை தொழில் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பரோட்டா கடையா என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் இதற்கான டிமாண்ட் எப்போதுமே குறையாது. அதனால் இந்த தொழிலை  தாராளமாக செய்யலாம்.

இடம்:

இந்த தொழிலை நாம் இரு விதமாக செய்வதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். ஒன்று தள்ளுவண்டி முறை, இன்னொன்று ஹோட்டல் முறையில் வைக்கலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

நீங்கள் தேர்வு செய்யும் இடமானது மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் அருகில் இருப்பது போல் கடையை அமைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் கடை வைக்கும் இடத்திற்கு அருகில் வேறு பரோட்டா கடைகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே நிறைய கடைகள் இருந்து நீங்களும் கடை அமைத்தால் வியாபாரம் அந்த அளவிற்கு  இருக்காது.

தேவையான பொருட்கள்:

profit business ideas

பரோட்டா செய்வதற்கு தேவையான பொருட்கள், நாற்காலி, டேபிள், பாத்திரம், Parotta Making Machine போன்றவை தேவைப்படும்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே வாரம் 35,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! இந்த அருமையான தொழிலை உடனடியாக துவங்குங்கள்

முதலீடு:

நீங்கள் தள்ளுவண்டியில் கடை விற்க போகிறீர்கள் என்றால் அதற்கான இடம் தேவையில்லை. அதுவே நீங்கள் ஹோட்டலாக வைக்க போகிறீர்கள் என்றால் தனியாக ஒரு இடம் தேவைப்படும். தோராயமாக 2000 ரூபாய் வைத்து கொள்வோம். இதுவே இடத்தை பொறுத்து மாறுபடும். இந்த தொழிலுக்கு பொருட்கள் வாடகை எல்லாம் சேர்த்து 20,000 ரூபாய் தேவைப்படும்.

மேலும் மெஷினின் விலை என்பது அதனுடைய விலை மற்றும் மாடலை பொறுத்து மாறுபடும். அதனால் மெஷினை வாங்க தனியாக 35,000 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் தேவைப்படும்.

பரோட்டா வகைகள்:

profit business ideas in tamil

வீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா என பல வகைகள் இருக்கிறது.

வருமானம்:

ஒரு பரோட்டா 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனை நீங்கள் ஒரு நாளைக்கு 50 பரோட்டா விற்பனை செய்தீர்கள் என்றால் 750 ரூபாய் வருமானம் கிடைக்கும். அப்போ மாதத்திற்கு 22,500 ரூபாய் சம்பாதிக்கலாம்.

தினமும் 1000 முதல் 5000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2023

 

Advertisement