Profitable Business in Tamil
இன்றைய கால கட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள், அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இத காரணமாக அரசும் இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க உணவு துறையோடு சம்பந்தப்பட்ட பொருட்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்கிறது. எனவே நீங்கள் சுற்றுளுக்கு தீங்கு விளைவிக்காத சுய தொழில் செய்ய வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. அதாவது பேப்பர் தொன்னை தயார் செய்து விற்பனை செய்யலாம். இந்த தொழில் சுற்றுசூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆக சந்தையில் அதிகம் வரவேற்கப்படும் பொருட்களில் இன்று தான் இந்த பேப்பர் தொன்னை தயாரிப்பு தொழில். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதற்கு தேவைப்படும் இயந்திரம் என்ன, மாதம் இந்த தொழில் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம்.
இடம் வசதி:
இந்த தொழிலை பொறுத்தவரை இடம் வசதி என்று பார்த்தால் இயந்திரங்கள் நிறுவ 1.5 ஹெச்பி மின் இணைப்புடன் கூடிய 10 அடி நீளம் மற்றும் அகலம் கொண்ட ஒரு அறை, தயார் செய்யப்பட்ட பேப்பர்களை பத்திரமாக வைக்க மற்றொரு அறை தேவைப்படும்.
தேவையான பொருட்கள்:
பேப்பர் தொன்னை இயந்திரம், ஒரு மாதம் உற்பத்திக்கு தேவையான பேப்பர் 1 டன் (100 to 120 GSM) GSM என்பது பேப்பரின் அடர்த்தி மற்றும் பேக்கிங் செய்ய பேக்கிங் கவர் ஆகியவை தேவைப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
இயந்திரம்:
தொன்னை தயார் செய்யும் இயந்திரம் என்று பார்க்கும் போது சந்தியில் பலவகையான மடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சிங்கிள் டை, டபுள் டை, செமி ஆட்டோமேட்டிக், ஆடோமேட்டிக் இது போன்று நிறைய மடல்களில் இயந்திரம் விற்பனை செய்யப்படுகிறது. ஆரம்பித்தில் இந்த தொழிலை தொடங்கும் பொது சிங்கிள் டை கொண்ட இயந்திரத்தை வாங்கி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என்று சொல்லலாம்.
முதலீடு:
- பேப்பர் தொன்னை இயந்திரம் ரூபாய் 32,000/- முதல் 50,000/- ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
- Coated & Non coated Paper 1 டன் 64,000/- ரூபாய்.
- பேபிக்கிங் கவர், இடத்திற்கான அட்வான்ஸ் மற்றும் வடக்கை, போக்குவரத்து செலவு என் மொத்தம் முதலீடாக 2 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
உற்பத்தி செலவு:
ஒரு கிலோ Silver Coated Paper விலை ரூபாய்.64 ஒரு கிலோ பேப்பரில் 350 முதல் 380 தொன்னை தயார் செய்ய முடியும். 350 என்று வைத்துக்கொண்டால் ஒரு தொன்னையில் உற்பத்தி விலை 18 பைசா ஆகும். இது தவிர பேக்கிங் மற்றும் போக்குவரத்து செலவு என மொத்தம் சேர்த்து 20 பைசா அடக்க விலை ஆகும்.
வருமானம்:
- சந்தையில் 100 தொன்னைகள் கொண்ட பேக்கின் விலை 32 ரூபாய் ஆகும். அப்படி என்றால் ஒரு தொன்னையின் விலை 32 பைசா ஆகிறது. ஒரு தொன்னையின் லாபம் 12 பைசா கிடைக்கும்.
- சிங்கிள் டை கொண்ட இயந்திரத்தில் ஒரு நிமிடத்தில் 25 முதல் 30 முதல் தொன்னை கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 1500 தொன்னைகளும் ஒரு நாளுக்கு 12,000 தொன்னைகளும் தயாரிக்கலாம்.
- ஒரு தொன்னைக்கு 12 பைசா லாபம் என்றால் 12000 தொன்னைக்கு 1440 ரூபாய் லாபம் கிடைக்கும்.
- ஒரு நாளுக்கு ஒரு Shift மட்டும் உற்பத்தி செய்தால் 1440 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு ரூபாய் 40,000/- வரை வருமானம் கிடைக்கும். அதுவே கூடுதலாக வேலைக்கு ஒரு ஆளை வைத்து 2 Shift உற்பத்தி செய்தால் கூடுதலாக ஒரு வேலையாளின் சம்பளம் 10,000/- ரூபாய் போக ஒரு மதத்திற்கு 70,000/- வருமானம் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
சந்தை வாய்ப்பு:
பேப்பர் தயாரிப்பு பொறுத்தவரை கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அதிகம் தேவைப்படும். ஆக அவர்களுடன் நேரடியாக நீங்கள் தயார் செய்த தொன்னைகளை விற்பனை செய்யலாம், சில்லறை விற்பனைகடைகளிலும் சாம்பலை செய்யலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |