Ready to Cook Food Business Ideas in Tamil
இன்றைய காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிப்பதற்காக தான் உழைக்கிறோம். ஆனால் இந்த பணம் அன்றைய நாள் செலவுக்கே சரியாகி விடுகிறது. பலரும் பணத்தை சேமிக்க முடியவில்லையே என்று கவலை அடைவார்கள். இன்னும் சிலர் இந்த வேலை இல்லாமல் வீட்டில் கொண்டே ஏதும் வேலை செய்யலாமா என்று யோசிப்பார்கள்.
இன்னும் சிலர் சொந்தமாக தொழில் செய்யலாமா என்று சிலரிடம் யோசனை இருக்கும், அதற்கான முதலீடு. முதலீடு இருக்கும் ஆனால் அதற்கான யோசனை இருக்காது. நம்முடைய பதிவில் பல்வேறு வகையான தொழில் பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான யோசனையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Ready to Cook Food Business Ideas:
இன்றைய காலத்தில் நன்றாக சமைத்து சாப்பிடுகிற அளவுக்கு யாருக்கும் நேரம் இல்லை. வீட்டில் இருக்கின்ற கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் பாக்கெட்டில் விற்கும் லெமன் பவடர், புளிசாதம் பவுடர், ரசம் பவுடர் வாங்கி வாங்கி வந்து சாதத்தை வடித்து அதனை கிளறி விட்டு சாப்பிடுகிரார்கள்.
நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது, இப்போ கூட நாம அதை வாங்கி தான சமைக்கிறோம். ஆமாங்க இதனை வாங்கி வந்து சமைப்பதால் நேரம் மிச்சமாகிறது என்பதால் அனைவரும் விரும்புகிறார்கள். இந்த தொழில் நீங்கள் எடுத்து செய்தால் லாபம் நன்றாக இருக்கும். இப்போது இதனுடைய வளர்ச்சி குறைவாக காணப்பட்டாலும் வருங்காலத்தில் இதனுடைய வளர்சி அதிகரித்திருக்கும். அதனால் இப்போதே உங்களுக்கான இடத்தை நிர்வகியுங்கள்.
ரெடிமேடு பேஸ்ட் தொழில் :
இன்றைய காலத்தில் சுவையாகவும், ஆரோக்கியமான சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதனை நிதானமாக சமைப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. அதனால் தான் ரெடிமேடு பேஸ்ட்டை விரும்புகிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
இந்த தொழிலுக்கு முக்கியமானது நீங்கள் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் விற்பனை செய்வது முக்கியமானது. இது இரண்டும் இருந்தாலே உங்களின் பிராண்ட் விளம்பரமாகி விடும்.
இனி வரும் காலங்களில் இந்த தொழிலுக்கு தான் மவுஸ்..
என்னென்ன பேஸ்ட் செய்யலாம்:
- வெஜிடேப்ளே சாலட்
- பானி பூரி கிட், Bhel பூரி கிட்
- கோதுமை சப்பாத்தி
- சாம்பார் பவுடர்
- புளி சாதம் பவுடர்
- சட்னி பவுடர்
எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்:
இந்த பேஸ்ட்டை நீங்கள் மல்லிகை கடை., சூப்பர் மார்க்கெட், ஹாஸ்டல் போன்ற இடங்களில் நீங்கள் விற்பனை செய்யலாம்.
மேல் கூறப்பட்டுள்ள ரெடிமேடு பேஸ்ட்டில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்து கூட செய்யலாம். ஆனால் அதற்கு முன்பு நீங்கள் அதனை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு செய்ய வேண்டும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |