இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? அரிசியை வைத்து வீட்டில் இருந்தே கைநிறைய சம்பாதிக்க முடியும்..!

Rice Flour Business

ஹலோ நண்பர்களே..! இன்றைய கால கட்டத்தில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் இந்த பதிவின் வாயிலாக சிறந்த பல வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் வணிக யோசனையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். வாங்க நண்பர்களே அது என்ன தொழில் என்று தெரிந்து கொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதலீடு:

இந்த தொழில் செய்வதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது. பச்சரிசி வாங்கும் விலையை பொறுத்து தான் முதலீடு இருக்கும். அதனால் இந்த தொழிலுக்கு செலவு செய்யும் பணத்தை முதலீடு என்றே சொல்ல முடியாது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கி நல்ல வருமானத்தை பெறலாம்.

மூலப்பொருட்கள்:

இந்த தொழில் தொடங்குவதற்கு பச்சரிசி இருந்தால் போதுமானது. அதன் பின் பேக்கிங் கவர்ஸ் வாங்கி கொள்ளவும்.

பச்சரிசியை வைத்து என்ன தொழில் தொடங்குவது என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. வீட்டிலேயே அரிசி மாவு தயார் செய்து அதை கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் பார்த்து கொண்டிருக்கின்றோம். சரி வாங்க  அரிசி மாவு தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

இன்றும் சரி வருங்காலத்திலும் சரி கைநிறைய சம்பாதிக்கலாம்..! அப்படி ஒரு மவுஸ் இந்த தொழிலுக்கு இருக்கு

Rice Flour Business Plan in Tamil: 

how to make rice flour at home in tamil

முதலில் அரிசி மாவு தயார் செய்வதற்கு தேவையான அளவு பச்சரிசியை ஊறவைக்க தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பின் அதை எடுத்து தண்ணீரை மட்டும் வடிகட்டி அரிசியை ஒரு துணியில் வைத்து  காயவைக்க வேண்டும். இந்த அரிசியை வெயிலில் காயவைக்க கூடாது. நிழலில் தான் காயவைக்க வேண்டும். அதுவும் 1 மணிநேரம் வரை நன்றாக காயவைக்க வேண்டும்.

பின் அதை ஒரு மிக்சி ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின் அரைத்த மாவை ஒரு சல்லடையில் வைத்து சலித்து எடுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது அரிசிமாவு தயாராகி விட்டது.

வீட்டில் இருந்தே தொழில் செய்ய வேண்டுமா..? அப்போ கைநிறைய லாபத்தை அள்ளித்தரும் அருமையான தொழில் இது தான்

விற்பனை செய்யும் முறை:

how to make rice flour at home

இந்த அரிசி மாவை கவர்களில் வைத்து பேக் செய்ய வேண்டும். கவர்களில் உங்களுடைய முகவரிகளை அச்சிட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் உங்களை அதிகமாக தொடர்பு கொள்வார்கள்.

இந்த அரிசி மாவு பாக்கெட்களை நீங்கள் உங்கள் பகுதிகளில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்யலாம். சூப்பர் மார்க்கெட், மால், மளிகை கடை மற்றும் பெட்டிக்கடை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். பின் கடைகளில் இருந்து உங்களுக்கு நிறைய ஆர்டர் வரும். அதன் மூலம் தினமும் கைநிறைய லாபம் பார்க்கலாம்.

அரிசி மாவு இன்றைய நிலையில் அதிகளவு பயன்படுத்தபட்டு வருகிறது. அதனால் வீட்டில் இருந்து அரிசி மாவு தயார் செய்து விற்பனை செய்தால் மக்கள் கட்டாயம் வாங்க முன்வருவார்கள். அதனால் இந்த தொழிலை வீட்டில் இருந்த படியே செய்து கைநிறைய சம்பாதியுங்கள்.

யாருமே சொல்லிருக்க மாட்டாங்க இந்த தொழிலை தொடங்க சொல்லி அப்படி என்ன தொழில் தெரியுமா அது

 

இதையும் படியுங்கள்⇒ லட்சக்கணக்கில் சம்பாதிக்க இந்த தொழில் ஒன்று போதும்…! காலத்திற்கும் நிலைத்து நிற்கும் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil