Suya Tholil Ideas in India
சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் அனைவரும் படித்து விட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். அப்படி வேலை தேடி கொண்டிருப்பவர்கள் சொந்தமாக தொழில் ஆரம்பிக்கலாம் என்று நினைப்பீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் மூலம் தினமும் சிறந்த தொழில்களை பற்றி கூறி வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Sangu Poo Business in Tamil:
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சியும் நாம் எடுக்க வேண்டும். அப்படி சொந்தமாக ஒரு சிறந்த தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.
இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் ஒரு நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். அதனால் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் இந்த தொழிலை தொடங்குங்கள். இந்த தொழில் தொடங்குவதற்கு தேவையான மூலப்பொருட்கள், முதலீடு மற்றும் இடம் பற்றி இங்கு பார்ப்போம்.
முதலீடு தேவையில்லை தினமும் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! |
இடம்:
இந்த தொழில் தொடங்குவதற்கு தனியாக ஒரு இடம் எல்லாம் தேவையில்லை. உங்கள் வீடே இதற்கு போதுமானது. உங்கள் வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும். இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழில் செய்வதற்கு மூலப்பொருட்கள் சங்கு பூ தான். இதை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சங்கு பூ நம் வீட்டு பகுதிகளில் அதிகமாக காணப்படும். இதை நீங்கள் பறித்து வந்து இதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
Sangu Poo Powder in Tamil:
முதலில் நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் சங்கு பூக்களை பறித்து வந்து தண்ணீரில் நன்றாக அலசி கொள்ளுங்கள்.
பின் அதை ஒரு சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பரில் ( Tissue Paper ) வைத்து 3 நாட்கள் வரை காயவைக்க வேண்டும். அதாவது இந்த பூக்களை வெயிலில் காயவைக்க கூடாது. நிழலில் தான் காயவைக்க வேண்டும்.
வெயிலில் காயவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் நீங்கிவிடும். ஆகவே 3 நாட்கள் வரை நிழலில் காயவைத்து கொள்ளுங்கள்.
3 நாட்கள் கழித்து இந்த பூக்கள் நன்றாக காய்ந்ததும் அதை பேக் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் Green Tea பவுடர் இருக்கும் கவர்களை நீங்கள் வாங்க வேண்டும். அதாவது Dip Tea Pouches நீங்கள் வாங்க வேண்டும். இது ஆன்லைனில் அதிகமாக கிடைக்கின்றன. அதை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள்.
அரைத்து வைத்தால் மட்டும் போதும் தினமும் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! |
விற்பனை செய்யும் முறை:
இந்த பவுடரை நீங்கள் உங்கள் ஊர்பகுதிகளில் இருக்கும் மளிகை கடை, பெட்டிக் கடை, ஷாப்பிங் மால் மற்றும் ஆர்கானிக் ஸ்டோர் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு என்று ஒரு Website ஆரம்பித்து ஆன்லைன் மூலமாகவும் இந்த பவுடரை நீங்கள் விற்பனை செய்து நல்ல வருமானம் பெறலாம்.
இந்த தொழிலை தொடங்குவதற்கு நீங்கள் FSSAI உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இந்த பூ பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. கண் மற்றும் மூளை சம்மந்தப்பட்ட நோய்களை சரி செய்ய உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதனால் மக்கள் கட்டாயம் இந்த பவுடரை வாங்குவார்கள்.இந்த பவுடர் ஆன்லைனில் 1 கிலோ 8000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த தொழிலை இன்றே தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் படியுங்கள்=> முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |