வாங்கி விற்கும் தொழில்
சுயதொழில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் போதும் சிலர் அதற்கான மூலப்பொருட்கள், தேவையான இடம் மற்றும் வேலைக்கு ஆட்கள் என அனைத்தினையும் தயார் செய்யும் வேலையினை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் இதற்கு மாறாக எந்த விதமான கடினமான செயலையும் செய்யாமல் ஈஸியாக வேலையினை செய்து முடித்து விடுவார்கள். அது என்னவென்றால் மூலப்பொருட்கள் எதுவும் வாங்காமல் வாங்கி விற்கும் தொழிலினை செய்து விடுவார்கள். அந்த வகையில் இப்போது நாம் இன்றைய பதிவில் ஒரு அருமையான வாங்கி விற்கும் தொழிலினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அது என்ன தொழில் எப்படி இந்த தொழிலை செய்வது போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
High Demand Business Ideas:
இப்போது பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து இன்னும் சில வாரங்களில் கோடை விடுமுறை அளிக்கப்படும். இத்தகைய கோடை விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் போதும் மாணவர்கள் அனைவரும் நோட், பேனா, பென்சில், Lunch Bag மற்றும் School Bag போன்ற அனைத்தினையும் வாங்குவார்கள்.
அந்த வகையில் இன்றைய பதிவில் School Bag Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதுமட்டும் இல்லாமல் இந்த தொழிலை நீங்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் இந்த தொழிலின் மூலம் நல்ல லாபம் மற்றும் வருமானம் என இரண்டினையும் பெறலாம்.
முதலீடு எவ்வளவு:
இத்தைகைய தொழிலை செய்வதற்கு ஒரு 20,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
மூலப்பொருள் என்ன:
நீங்கள் செய்யப்போகும் இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் Lunch Bag மற்றும் School Bag இவை இரண்டும் மட்டும் தான்.
மேலும் இந்த Bag-ல் நிறைய வகைகள் இருப்பதால் அதில் எது உங்களுக்கு வேண்டுமோ அதனை பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
எந்த இடத்தில் தொடங்குவது:
எந்த ஒரு தொழிலை செய்தாலும் அதற்கு கட்டாயமாக இடம் என்பது அவசியம். மேலும் அத்தகைய இடம் ஆனது மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடமாக இருக்கு வேண்டும். ஏனென்றால் அப்போது தான் வியாபாரம் அதிகரிக்கும்.
இதையும் படியுங்கள்👇👇
வீட்டிலிருந்து இது ஒன்றை மட்டும் வளர்த்தால் போதும்.. 16,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
எப்படி தொழிலை தொடங்குவது:
முதலில் நீங்கள் Wholesale முறையில் நல்ல தரமுள்ள Lunch Bag மற்றும் School Bag என இந்த இரண்டினையும் பார்த்து வாங்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களுடைய கடையில் வாங்கும் Bag-ற்கு பேனா பாக்ஸ் மற்றும் பென்சில் பாக்ஸ் போன்றவற்றையினை சில குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் இலவச பொருட்களாக குடுத்தீர்கள் என்றால் இன்னும் வியாபாரம் அதிகரிக்கும்.
மேலும் இந்த Bag-னை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலமாகவும் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
வருமானம் எவ்வளவு:
சாதாரணமாக ஒரு Bag-ன் விலை ஆனது 500 ரூபாய் முதல் இருந்து ஆரம்பம் ஆகிறது. அதுவே 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான Bag என்றால் அதனுடைய 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை இருக்கும்.
Lunch Bag-ம் இதனை போல தான் அதனுடைய அளவினை பொறுத்து தான் விலை என்பது இருக்கும்.
ஆகையால் இந்த தொழிலை பொறுத்தவரை வருமானம் என்பது நீங்கள் விற்பனை செய்யும் Bag-னை பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
4 பீஸ்லேயே 25,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த சீசனிற்கு ஏற்ற அருமையான தொழில்னா அது இதாங்க..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |