டாப் 30 ஷாப் பிசினஸ் ஐடியாஸ் | Top 30 Shop Business Ideas in Tamil
நீங்கள் எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் உங்கள் இலக்கு தெளிவாக இருந்தால் எந்த துறையிலும் நீங்கள் சாதிக்க முடியும். எந்த தொழிலை நீங்கள் கையில் எடுத்தாலும் அதை செய்வதற்கு முன்பு அந்த தொழிலை முழுமையாக ஆராய்ந்து அதற்குத் தேவையான முதலீடு மற்றும் அதில் உள்ள லாபம் மற்றும் நஷ்டம் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரிக்கவும். இதை நீங்கள் செய்தால் எந்த தொழிலாக இருந்தாலும் நீங்கள் முத்திரை பதிக்க முடியும். அந்த வகையில் இந்த தொகுப்பில் நல்ல Profit தரக்கூடிய தொழில்களை விவரமாக கொடுத்துள்ளோம், அதை படித்து பயன்பெறுங்கள்.
1. Burger Joint:
- இந்த தொழிலுக்கு எப்போதுமே மார்க்கெட்டில் நல்ல demand உள்ளது. இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு 1 லட்சம் 3 லட்சம் வரை தேவைப்படும்.
- இதை நீங்கள் ஸ்கூல், காலேஜ் போன்ற மக்கள் கூடம் அதிகம் உள்ள இடத்தில் செய்ய வேண்டும். Profit 30 – 50% வரை கிடைக்கும்.
2. Eggs Shop:
- முட்டை எல்லா இடத்திலுமே நன்கு லாபம் தரக்கூடியது. நீங்கள் நல்ல முட்டைகளை வாங்கி விற்பனை செய்து லாபம் பெறலாம்.
- முதலீடு Rs.10,000 முதல் 2 லட்சம் வரை தேவைப்படலாம். லாபம் 10 – 15% வரை கிடைக்கும்.
3. Chicken Shop:
- அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவு கோழி. இதை நீங்கள் விதவிதமான முறையில் சமைத்து கொடுத்தோ அல்லது முழு கோழியாகவோ விற்பனை செய்யலாம்.
- முதலீடு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 10 – 15% வரை கிடைக்கும். இதை நீங்கள் Online மூலமும் விற்பனை செய்யலாம்.
4. Cars, Bikes Washing Center:
- இயந்திரத்தின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பதனால் அதை சுத்தபடுத்தும் தேவையும் எப்போதும் இருக்கும் எனவே நீங்கள் இந்த தொழிலை துணிந்து செய்ய முடியும்.
- முதலீடு 30,000 முதல் 2 லட்சம். லாபம் 30 – 45%
5. Ayurvedic Shop:
- இந்த தொழிலை நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
- முதலீடு 80,000 முதல் 3 லட்சம் வரை தேவைப்படலாம். லாபம் 10 – 30% வரை கிடைக்கும்.
6. Documentation Center:
- உங்களுக்கு இந்த தொழிலை பற்றி தெரிந்தால் தாரளமாக செய்யலாம்.
- இந்த தொழிலை நீங்கள் Industrial’s உள்ள இடத்தில் செய்தால் நல்ல வருமானத்தை பெறலாம்.
- முதலீடு 50,000 முதல் 4 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 30 – 50%
7. Wholesale Shop:
- இந்த தொழிலுக்கான demand பற்றி சொல்லவே வேண்டாம் எல்லோருக்கும் தெரியும் மார்க்கெட்டில் எப்போதும் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
- முதலீடு 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 10 – 25%. மக்கள் கூட்டம் மற்றும் கடைகள் நிறைய உள்ள இடத்தில் ஆரம்பித்தால் நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும்.
8. Stationery Shop:
- இந்த தொழிலை நீங்கள் பள்ளிக்கூடம், அலுவலகம், கல்லூரி உள்ள இடங்களில் ஆரம்பித்தால் நிறைய லாபம் கிடைக்கும்.
- முதலீடு 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 10 – 35%
9. Saree Shop:
- பெண்களுக்கு மிகவும் பிடித்த ஆடைகளில் இதுவும் ஒன்று. பண்டிகை காலங்களில் இதற்கு வரவேற்பு அதிகம்.
- பிரபலமான இடங்களில் இந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடு 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 15 – 35%
10. Grocery Store:
- இந்த தொழிலில் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மக்களிடையே எப்போதும் demand இருக்கும் தொழிலில் இதுவும் ஒன்று.
- முதலீடு 2 லட்சம் முதல் 8 லட்சம். லாபம் 15 – 55%
11. Vegetable Shop:
- மக்கள் அன்றாட பயன்படுத்தும் பொருளில் முக்கியமான ஒன்று, அதனால் இந்த தொழிலில் உங்களுக்கு நல்ல வருமானம் வரும்.
- முதலீடு 40,000 முதல் 2 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 10 – 35%
12. Gift Shop:
- பண்டிகை காலங்களில் இதற்கு மவுஸ் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். முதலீடு 1 லட்சம் முதல் 5 லட்சம்.
- லாபம் 15 – 55%. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இதை ஆரம்பிப்பது நல்லது.
13. Clothing Shop:
- இந்த தொழிலுக்கு எப்போதுமே demand இருக்கும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 2 லட்சம் முதல் 8 லட்சம். லாபம் 20 – 55%
14. Cake Shop:
- இனிப்பு வகைகளில் எல்லோருக்கும் பிடித்த உணவு என்பதால் இந்த தொழில் மார்க்கெட்டில் முன்னிலையில் உள்ளது.
- இந்த தொழிலுக்கான முதலீடு 90,000 முதல் 2 லட்சம். லாபம் 15 – 45%
15. Watch Repair Shop:
- இந்த தொழிலை நகரங்களில் ஆரம்பித்தால் நல்ல பொருள் ஈட்ட முடியும். இந்த தொழிலுக்கான முதலீடு 80,000 முதல் 2 லட்சம். லாபம் 10 – 15%
16. HardWare Shop:
- இந்த தொழிலை வளரும் பகுதிகளில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இந்த தொழிலுக்கான முதலீடு 2 லட்சம் முதல் 8 லட்சம். லாபம் 10 – 25%
17. Sweet Shop:
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், இதனால் இந்த தொழிலில் நீங்கள் தினசரி லாபத்தை பெறலாம்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 1 லட்சம் முதல் 4 லட்சம். லாபம் 15 – 40% வரை கிடைக்கும்.
18. Medical Shop:
- மக்களுக்கு எப்போதும் தேவைப்படும் பொருளில் இதுவும் ஒன்று. இந்த தொழிலை நீங்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் கூடம் உள்ள இடத்தில் செய்யலாம்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 2 லட்சம் முதல் 5 லட்சம். லாபம் 10 – 35% வரை கிடைக்கும்.
19. Juice Shop:
- கோடை காலங்களில் மக்கள் அதிகம் வாங்கும் பொருள் ஜூஸ். மற்ற காலத்தில் நீங்கள் பழங்களையும் விற்பனை செய்யலாம்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 40,000 முதல் 2 லட்சம். லாபம் 25 – 65% வரை கிடைக்கும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த தொழிலை செய்யலாம்.
20. Mobile Repair Shop:
- இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது, அதனால் இந்த தொழிலுக்கு எப்போதும் demand இருக்கும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 80,000 முதல் 2 லட்சம். லாபம் 15 – 25% வரை கிடைக்கும்.
21. Second Hand Bikes:
- எல்லோராலுமே புது இருசக்கர வாகனம் வாங்க முடியாது, அதனால் ஒரு சிலர் Second Hand Bikes வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள், அதனால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 30,000 முதல் 7 லட்சம். லாபம் 10 – 35% வரை கிடைக்கும்.
22. Foot Wear Shop:
- காலணிகள் மக்களுக்கு எப்போதும் தேவைப்படும் பொருள் என்பதால் இந்த தொழிலும் நன்றாக சம்பாரிக்க முடியும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 2 லட்சம் முதல் 5 லட்சம். லாபம் 15 – 35% வரை கிடைக்கும்.
23. Toys Shop:
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொருள். இந்த தொழிலை Crowd அதிகம் உள்ள இடத்தில் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 2 லட்சம் முதல் 7 லட்சம். லாபம் 20 – 45% வரை கிடைக்கும்.
24. Bags Shop:
- எல்லோருமே விதவிதமாக பைகள் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே நீங்கள் மக்களுக்கு பிடித்த டிசைன் உள்ள பைகளை விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 2 லட்சம் முதல் 6 லட்சம். லாபம் 20 – 45% வரை கிடைக்கும்.
25. kitchen Items:
- இல்லத்தரசிகளுக்கு எப்போதும் தேவைப்படும் பொருள். இந்த தொழிலை நல்ல விற்பனையாகும் மார்க்கெட், Colonies போன்ற இடங்களில் செய்தால் லாபம் பெறமுடியும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 3 லட்சம் முதல் 6 லட்சம். லாபம் 10 – 25% வரை கிடைக்கும்.
26. Beauty Parlour:
- பெண்கள் பண்டிகை காலங்களில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் அதிகம் செல்லும் இடம் பார்லர் என்பதால் இந்த தொழிலில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது.
- இந்த தொழிலுக்கான முதலீடு 1.5 லட்சம் முதல் 4 லட்சம். லாபம் 18 – 45% வரை கிடைக்கும்.
27. Tailor Shop:
- இந்த தொழிலின் தேவை மார்க்கெட்டில் எந்த அளவிற்கு உள்ளது என்று உங்களுக்கே தெரியும். நல்ல வியாபாரமாகும் இடத்தில் இந்த தொழிலை செய்தால் நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 2.5 லட்சம் முதல் 4 லட்சம். லாபம் 25 – 45% வரை கிடைக்கும்.
28. laptop Repair Shop:
- தொலைபேசியை போலவே இதனுடைய வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. எனவே இதை நீங்கள் டவுன் அல்லது சிட்டி போன்ற இடங்களில் செய்தால் லாபம் கிடைக்கும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 1.5 லட்சம் முதல் 3 லட்சம். லாபம் 25 – 55% வரை கிடைக்கும்.
29. Masala Wholesale:
- மற்ற தொழில்களை விட Wholesale தொழில் நல்ல லாபத்தை பெற்று தரக்கூடியது.
- அந்த வகையில் நீங்கள் மசாலா பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி மற்ற கடைகளுக்கு விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 2 லட்சம் முதல் 4 லட்சம். லாபம் 15 – 35% வரை கிடைக்கும்.
30. Paint Shop:
- வீடுகளுக்கு, பள்ளி கட்டிடம், அலுவலக கட்டிடம் மற்றும் பல கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிப்பது வழக்கத்தில் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதால் இந்த தொழிலை நீங்கள் தைரியமாக செய்யலாம்.
- இந்த தொழிலுக்கான முதலீடு 4 லட்சம் முதல் 10 லட்சம். லாபம் 10 – 35% வரை கிடைக்கும்.
- இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் எந்த அளவிற்கு மார்க்கெட்டிங் செய்கிறிர்களோ அந்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
siru tholil ideas in tamil |