வீட்டு மாடியில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும் மாதம் 75,000/- ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 100 விற்பனை விலை 1000 அரசு பயிற்சி அளிக்க கூடிய தொழில் அதிலும் பெண்களுக்கு சிறப்பு மானியம் வழங்கப்படும் தொழில்..!

Small Business ideas – புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான வணக்கம் இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். பெண்கள், ஆண்கள் இருபாலரும் இந்த தொழிலை செய்யலாம், அதிலும் இந்த தொழில் செய்ய இருக்கும் பெண்களுக்கு 60 சதவீதம் சிறப்பு மானியம் வழங்கப்படுத்து என்றும் சொல்லப்படுகிறது. சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் படித்தறியலாம்.

என்ன தொழில்?

அது ஒன்றும் இல்லை Solar Dryer பயன்படுத்தி வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பூ மற்றும் காய்கறிகள் பழங்களை Dehydrate செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். Solar Dryer வாங்க பெண்களுக்கு 60 சதவீதம் வழங்கப்படுகிறது.

குறிப்பாக Dehydrate செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. Dehydrate செய்யப்பட்ட வாழைப்பூவிலும், வாழைத்தண்டில் ஊறுகாய் செய்யப்பட்டு அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன, அது தவிர்ந்து சந்திகளிலும் விற்பனை செய்கின்றன இதனை மூலம் பெண்கள் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானத்தை பெறுகின்றான்.

இயந்திரம்:

Dehydrate செய்வதற்கு Solar Dryer தான் தேவைப்படும் இதன் விலை 45 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த Solar Dryer -க்கு  பெண்களுக்கு 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

பயிற்சி:

பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்படி Dehydrate செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிக்க படுகிறது. ஆக இந்த தொழில் பற்றி எந்த ஒரு முன்னனுபவம் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்  👉👉 முதலீடு 5000 வருமானம் 30000 பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சிறுதொழில்..!

வருமானம்:

Drying செய்யப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை 100 கிராமிற்கே 100 ரூபாய் வருமானம் கிடைக்கும். உதாரணத்திற்கு நீங்கள் பப்பாளி பழத்தை ட்ரயிங் செய்து பிறகு பவுடர் செய்து தரமாக பேக்கிங் செய்து விற்பனை செய்தால் 100 கிராம் பப்பாளி பவுடருக்கு 100 முதல் 150 ரூபாய் வரை லாபம் பெற முடியும்.

Dehydrate செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் அமேசானில் விற்பனை செய்யலாம், மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானத்தை பெற முடியும். ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பா நீங்கள் அதற்கு ஏற்றுமதி உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Dry செய்த வாழைப்பழங்களை பவுடர் செய்யாமலும் சந்தையில் விற்பனை செய்யலாம். ஒரு கிலோ Dry செய்த வாழைப்பழத்தை நீங்கள் 500 ரூபாய்க்கு மேலும் கூட விற்பனை செய்யலாம்.

ஒரு நாளைக்கு 5 கிலோ வாழைப்பழங்களை Drying செய்து விற்பனை செய்தலே ஒரு நாளுக்கு 2500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ஒரு மாதம் என்றால் 75,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

வாழைப்பழங்களை தேர்வு செய்யும்பொழுது நாட்டு வாழைப்பழங்களை தான் தேர்வு செய்ய வேண்டும். அதாவது பூவம், கற்பூரவள்ளி வாழைப்பழம், செவ்வாழை போன்ற பழங்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022
SHARE