தினமும் 1 மணி நேரம் வேலை பார்த்தால் 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Small Business Tea Shop in Tamil

பணம் சம்பாதிக்க வழிகள் | Small Food Business Ideas in India

இன்றைய கால கட்டத்தில் பணம் இல்லாமல் ஏதும் செய்ய முடியாது. குழந்தைகளின் படிப்பு செலவு, திருமண செலவு என்று பார்த்தால் ஒருவரின் சம்பளத்தில் ஒன்றும் செய்ய முடியாது. இருவரும் வேலை பார்க்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். சில நபர்கள் படித்திருப்பார்கள் அதனால் வெளியில் சென்று வேலை பார்ப்பார்கள். இன்னும் சில நபர்கள் ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். வெளியில் சென்று வேலை பார்க்க முடியாதவர்கள் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கவலைப்படுவார்கள். இனி கவலை படாதீர்கள். இந்த பதிவில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் யோசனைகளை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Tea Shop Business Plan in Tamil:

டீ கடை தொழில்

டீ கடை தொழில் தொடங்க வேண்டுமென்றால் ஒரு சிறிய கடை தேவைப்படும். கடையை பொறுத்து வாடகை மாறுபடும். ஆரம்பத்தில் சிறிய கடையாக பார்ப்பது நல்லது. இந்த கடையும் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் நன்றாக நடக்கும்.

எடுத்துக்காட்டாக பேருந்து நிலையம், கல்லூரி, ரயிலடி, கோவில்கள், பார்க் போன்ற இடத்தில் வைக்கலாம். ஆரம்பத்தில் டீ, காபி, பால் போன்றவை மட்டும் போடுங்கள். நாளடைவில் வியாபாரம் எப்படி நடிக்கிறது என்று பார்த்துவிட்டு பஜ்ஜி, வடை, பிஸ்கட், ஸ்நாக்ஸ் போன்றவை வியாபாரம் செய்யலாம். இதற்கு முதலீடு 15,000 ரூபாய் தேவைப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழிலை பார்ட் டைமாக செய்தாலே தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Small Business Tea Shop in Tamil:

Small Business Tea Shop in Tamil

கடை பார்த்து என்னால் வியாபாரம் செய்ய முடியாது என்றால் உங்கள் ஊர் அல்லது பக்கத்து ஊரில் நிறுவனம் ஏதும் இருந்தால் அங்கு டீயை சப்லை செய்யலாம். எப்படி என்று கேட்கிறீர்களா நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு காலை 11 மணி மாலை 4 மணி டீ கண்டிப்பாக கொடுப்பார்கள்.

அதனால் அந்த நிறுவனத்தின் ஓனரிடம் பேசி கொள்ள வேண்டும். இந்த மாதிரி 2 நேரமும் டீ தருகிறேன் என்று அதற்கான விலையையும் பேசி கொள்ளலாம். இது போல் செய்வதினால் கடை வாடகை இருக்காது. டீ போடுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும்.

உதாரணத்திற்கு நீங்கள் டீ கொடுக்கும் நிறுவனத்தில் 100 நபர்கள் வேலை செய்கிறார்கள். அப்போ தினமும் இரண்டு வேலையும் 200 டீ கொடுக்க வேண்டியிருக்கும். 1 டீ 10 ரூபாய் என்றால் 2000 ரூபாய் சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் என்றால் மாதத்திற்கு 60,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள் ⇒ வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு Demand எப்போதுமே இருக்கும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil