Classical Dance Classes For Beginners in Tamil
நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு கலை மீது ஆர்வம் இருக்கும். நம்முள் நிறைய திறமைகள் ஒளிந்திருக்கும். அதை நாமே புரிந்துகொள்வதற்கு நாள் ஆகும். அதேபோல் நாம் கற்றுக்கொள்ளும் அனைத்தும் நமக்கு இப்போது பயன் கிடைக்கவில்லை என்றாலும் பின்பு நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். அது எதுவாக இருந்தாலும் சரி முதலில் நாம் நன்றாக படித்தால் 20 வயதிற்கு மேல் டியூசன் எடுக்கலாம்.
நன்றாக வரைய தெரிந்தால் அதனை வைத்து அதற்கு தகுந்த படிப்பு படித்து அதற்கு தகுந்த வேலைக்கு செல்ல முடியும்..! ஆனால் நம்மில் இருக்கும் சில திறமைகள் நமக்கு உதவியாகவும் மற்றவர்களுக்கும் உதவி செய்து அதன் மூலம் வருமானம் பார்க்க முடியும். அது என்ன தொழில் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Start a Dance Studio With No Money in Tamil:
முதலில் டான்ஸ் கிளாஸ் துவங்குவதற்கு பல வகையான ஸ்கூல்கள் உள்ளன. ஆனால் குறைந்த செலவில் தரமான டான்ஸ் ஸ்டூடியோ ஆரம்பிக்க என்ன தேவை என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
முதலில் நீங்கள் எங்கு துவங்க போகிறீர்கள் என்று தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அதன் பின் அது வாடகையாக இருந்தாலும் சரி சொந்தமாக இருந்தாலும் சரி அதற்கும் நிறைய பொருட்கள் தேவைப்படும். ஆகவே அதனை முக்கியமாக தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
அந்த இடத்திற்கு நிறைய நிறத்தில் பெயிண்ட் செய்வதை விட இரண்டு நிறத்தில் பெயிண்ட் செய்தது போல் இருக்கவேண்டும்.
அதன் பின் அங்கு கண்ணாடிகள் தேவைப்படும். அதற்கு என்ன அளவுகள் என்று தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அதன் பின் அந்த இடத்தை சுற்றியும் அப்படியே வைக்கவும். அதன் பின் அந்த இடமானது எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் இருக்கவேண்டும்.
வித்தியாசமான இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்கள் லாபம் சும்மா கொட்டோ கொட்டுனு கொட்டும்..!
சரியான பெயர்கள்:
உங்கள் டான்ஸ் ஸ்டூடியோ எந்த வகையை சார்ந்து உள்ளதோ அதற்கு ஏற்றது போல் பெயர் வைக்கவும். அதேபோல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பெயர்கள் வைக்கவேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் பரதநாட்டியம் பயிற்சி செய்வீர்கள் என்றால் அதற்கு ஏற்றது போல் பெயர் வைக்கவும்.
அதேபோல் நீங்கள் பயிற்சி வகுப்பு துவங்குவீர்கள் என்றால் உடனே உங்கள் கிளாஸிற்கு வாரமாட்டார்கள். ஏனென்றால் உங்கள் டான்ஸ் ஸ்டூடியோ எங்கு உள்ளது என்று அறிந்துகொள்ள நீங்கள் தான் விளம்பரம் செய்யவேண்டும்.
முதலீடு:
மொத்தமாக 2 லட்சத்திற்கும் அதிகமாக தேவைப்படும். அதேபோல் நீங்கள் உங்களின் டான்ஸ் ஸ்டூடியோவை அரசு இதற்கு என்று தனியாக ஒரு பதிவு செய்யும் இடத்தில் உங்கள் பயிற்சி வகுப்பின் பெயரை பதிவு செய்யவேண்டும்.
அதன் பின் உங்கள் பயிற்சி அளிக்கும் வயது மற்றும் அதற்கான ஆவணத்தை கொண்டு உங்கள் வகுப்பில் சேர முடியும். இதுபோல நிறைய கோட்பாடுகளுடன் மட்டும் நடன பயிற்சி வகுப்பை துவங்க முடியும்.
இதுபோல் ஒரு குழந்தைக்கு மாதம் மாதம் 500 வீதம் ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு கட்டணம் வசூலிக்க வேண்டும். உங்களின் பயிற்சி சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருந்தால் உங்கள் திறமை உங்களை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும்.
சொல்லி கொடுத்தால் போதும்.. அளவில்லாமல் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |