Solar Business Ideas in Tamil
இன்றைய இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது எந்த தொழில் செய்தால் வருமானம் கிடைக்கும் என்று பல யோசனைகள் உள்ளது. இந்த யோசனைக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும். இளைஞர்கள் மட்டுமில்லை சுயமாக தொழில் செய்து எதிர்காலத்தில் லாபத்தை கொடுக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவில் கூறியுள்ள தொழிலை செய்து வாழ்வில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Solar Business Opportunities in India:
எதிர்க்காலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வது என்று கஷ்டமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அரசாங்கமே சோலார் இன்ஸ்டாலேஷன்க்கு மானியத்தை வழங்குகிறது.
அதே போல் விவசாயம் செய்பவர்களுக்கும் சோலார் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சோலார் லைட், சோலார் பேன், சோலார் வாச் என்று பல பொருட்களை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
அதனால் சோலார் சார்ந்த பொருட்களை வியாபாரம் செய்வதால் எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். உங்களுக்கு உதவும் வகையில் சில சோலார் சார்ந்த சில ஐடியாக்களை கீழே காண்போம்.
சோலார் பொருட்களை வியாபாரம் செய்தல்:
சோலார் பொருட்களை விற்பனை செய்வது சிறந்ததாக இருக்கும். அதவாது, சோலார் கேஜெட்டுகள், சோலார் ரீசார்ஜர்கள், சோலார் லைட் போன்றவற்றை விற்பனை செய்யலாம். இதற்கு குறைந்த முதலீடு இருந்தாலே போதும்.
இதையும் படியுங்கள் ⇒ எதிர்காலத்தில் பணக்காரராக மாற்றக்கூடிய 3 தொழில்கள்..!
சோலார் பேனல் பழுது பார்ப்பது:
சோலார் பேனல் அமைப்பது மற்றும் பழுது பார்ப்பது லாபகரமான தொழிலாக இருக்கும்.
எந்த ஒரு பொருளையும் முறையாக பராமரிப்பது என்பது அவசியமான ஓன்று. அந்த வகையில் சோலார் சிஸ்டம் பராமரிப்பது, ரிப்பர் செய்வது என்பது தேவையான ஒன்றாகும். அதனால் இந்த தொழில் இந்தியாவில் லாபகரமான தொழிலாக இருக்கும்.
சோலார் பேனலை சுத்தம் செய்தல்:
சோலார் பேனல்கள் அழுக்காக இருந்தால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. சுத்தமாக இருந்தால் மட்டும் தான் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
சோலார் பேனல்கள் வைத்திருப்பவர்கள் தானாக சுத்தம் செய்வதை விட ஆட்கள் வைத்து சுத்தம் செய்வதை விரும்புகின்றனர். அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ இன்று இல்லை நாளை இல்லை என்றுமே மக்களிடையே Demand உள்ள தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |