Business Ideas in Tamil
இன்றைய காலத்தில் உள்ள பொருளாதார பிரச்சனை இல்லாமல் சமாளிக்க வேண்டுமென்றால் இருவருமே வேலை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும். உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அருமையான சுயதொழில் பற்றிய யோசனை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Stationery Business Ideas in Tamil:
ஸ்டேஷனரி ஷாப் தொழில் எப்பொழுதுமே Demand இருந்து கொண்டே இருக்கும். கல்வி எப்படி அழியாதோ அப்படி தான் இந்த தொழில் அழியாத தொழிலாக இருக்கும்.
நீங்கள் ஸ்டேஷனரி ஷாப்பை பள்ளி மற்றும் கல்லூரி, அலுவலகங்கள் போன்ற பகுதிகளுக்கு அருகில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் நன்றாக இருக்கும். முக்கியமாக நீங்கள் வைக்கும் இடத்தில் அருகில் வேறு எந்த கடையும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் உங்களுக்கு 50% தான் வியாபாரம் நடக்கும்.
முதலீடு:
நீங்கள் தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் சிறிய கடையாக எடுக்கிறீர்கள் என்றால் 3000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.
நோட், புத்தகம், பேனா, பென்சில், லபர், சார்பினர், ஸ்கெட்ச் இன்னும் பல பொருட்கள் மாணவர்களுக்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம். இந்த மூலப்பொருட்கள் எல்லாம் வாங்குவதற்கு 50,000 ரூபாய் தேவைப்படும்.
லாபம்:
இந்த தொழிலில் 20 முதல் 25% வரை லாபம் கிடைக்கும். பேனாவில் குறைந்த லாபத்தை பெற முடியும். ஆனால் நோட்களில் கூடுதல் லாபத்தை பார்க்க முடியும்.
வருமானம்:
இந்த தொழிலில் எவ்வளவு வியாபாரம் ஆகின்றதோ அதை பொறுத்து தான் வருமானத்தை ஈட்ட முடியும். தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் தேர்வு செய்த இடத்தை பொறுத்து 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
யாரும் நினைத்து பார்க்க முடியாது அளவிற்கு வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை சும்மா செஞ்சு பாருங்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |