ஸ்டேஷனரி ஷாப் தொழில் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்..!

stationery business

ஸ்டேஷனரி ஷாப் (Stationery business ideas in tamil) தொழில்:

ஒரு சிறந்த தொழில் துவங்க வேண்டுமா? அப்போது இது உங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும். ஒரு புதிய தொழில் துவங்க இந்த ஸ்டேஷனரி ஷாப் (stationery business) தொழில் மிகவும் சிறந்தது.  இந்த ஸ்டேஷனரி ஷாப் (stationery business) தொழில் பொறுத்தவரை உற்பத்தி கிடையாது. அதனால் இயந்திரங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் முதலீடு குறைவு என்பதால் இந்த தகவல் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மூலதனம்:

இந்த தொழிலை பொறுத்தவரை சுமார் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை பல விதங்களில் பண்ணலாம். கிராமப்புறமாக இருந்தால் குறைந்த முதலீடு இருந்தால் போதும். அதுவே நகர்ப்புறமாக இருந்தால் உங்களால் முடிந்தால் அதிக முதலீடு செய்யலாம்.

சுயதொழில் – பேப்பர் கவர் தயாரிப்பு

வியாபார வாய்ப்பு:

ஸ்டேஷனரி(stationery business) பொருட்களின் தேவையை ஓரளவிற்குக் கணக்கிட்டுவிடலாம். ஆனால், அது மட்டும் போதாது. வேறு சில சேவைகளையும் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இப்போதெல்லாம் கூரியர் சேவை தருபவர்கள் சிறிய கடைகளைக்கூட தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்கள். அதாவது ஃபிரான்சைஸ். ஒரு அஞ்சல் உறைக்கு ரூ.15 கட்டணம் என்று வைத்துக்கொள்வோம். அக்னாலெட்ஜ்மென்ட் ஸ்லிப்பை நமக்கு ரூ.12 க்கு தருவார்கள்.

10 ஸ்லிப்பை வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாள் மாலையிலும் கூரியர் நிறுவனத்திலிருந்து ஆள் வருவார். எவ்வளவு கவர் நம்மிடம் இருக்கிறதோ அவற்றை வாங்கிக்கொள்வார். நாம் வசூலித்த பணத்தில் நம் கமிஷனை கழித்துக்கொண்டு மீதியை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். இருந்த இடத்திலேயே ஒரு உபரி வியாபாரம்.

Stationery business லாபம் எப்படி இருக்கும் :

20 முதல் 25 சதவீதம் வரை இலாபம் கிடைக்கும் இரு ஒரு உதாரண கணக்குதான்.

அதாவது, பேனாவில் குறைவாகக் கிடைக்கும். பேப்பரில் கூடுதலாக இருக்கலாம். அதனால் சராசரியாக 20 முதல் 25 சதவிகிதம் என்று வைத்துக்கொள்ளலாம்.

வியாபாரத்தை பெருக்க இது ஒரு சிறந்த வழி:

உதாரணத்திற்கு ஜெராக்ஸ். சாதாரண மெஷின் ரூ.70,000-ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதில் வெவ்வேறு வகைகள் உள்ளன. நம் சக்திக்கு ஏற்ப வாங்கலாம். இதில் இன்னொரு வழியும் இருக்கிறது.

ஜெராக்ஸ் மெஷின் வாடகைக்குக்கூட கிடைக்கிறது. மாதம் ரூ.5,000 முதல் உண்டு. லீஸுக்கும் கொடுக்கிறார்கள். மாதத் தவணையிலும் மெஷினை வாங்கலாம். இது கூடுதல் வருமானத்திற்கு வழி வகுக்கும். ஆனால், மாத பட்ஜெட்டில் மாத வாடகை அல்லது இஎம்ஐ தொகையைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

இந்த தொழில் தொடர்து நடந்து வர மாதம் எவ்வளவு வியாபாரம் செய்ய வேண்டும்?

நஷ்டம் ஏதுமில்லாமல் இருக்க, குறைந்தபட்சம் செலவுகளையாவது ஈடுகட்ட வேண்டுமே? அதாவது, ரூ16,000-மாவது கல்லாவில் வந்து விழவேண்டும் அல்லவா? இப்போது ஒரு எளிய கணக்கைப் போடுவோம். 20 சதவீத லாபம். அது ரூ.16000 என்றால் 100 சதவீதம் எவ்வளவு? 80,000 அல்லவா? அதுவே மாத பில்லிங் தொகையாக இருக்க வேண்டும். மாதத்தில் 4 நாட்கள் வார விடுமுறை என்று கொண்டால் 25 நாட்கள் சுமாராக. 16,000ஐ 25ஆல் வகுத்தால் 3200. குறைந்தது 3200 ரூபாய் வியாபாரம் நடக்க வேண்டும்.

இது பெரிய தொகையாக இருக்காதா?

ரூ.10,000 வாடகை உள்ள இடத்தில் ஏராளமான அலுவலகங்கள் இருக்கும். அதனால் இந்த விற்பனையை அடைய முடியும். வாடகை குறைந்தால் விற்பனையையும் குறைத்துக் கணக்கிடலாம். அதனால்தான் கூடுதல் முதலீடு தேவையில்லாத கூரியரையும் சேர்த்துக்கொண்டுள்ளோம்.

போட்டியைச் சமாளிப்பது எப்படி?

தொடர்புகளை விரிவாக்குவது. வாடிக்கையாளர்களின் தேவையைத் தெரிந்துகொண்டு கூடுதல் சேவையையும் அளிக்கலாம். டைப்பிங் வேலை முதல் லேமினேஷன் வரை செய்துகொடுக்கலாம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

குடிசைதொழில் – பினாயில் தயாரிப்பு

குறைந்தபட்ச மூலதனமாக ஒருவர் எவ்வளவு தொகையைக் கொண்டு வர வேண்டியிருக்கும்?

மினிமம் ரூ. 1 லட்சம். இது அடிப்படை தேவைகளான ரூ.25,000 ஸ்டாக் வாங்க. கடை அட்வான்ஸ் கொடுக்க ரூ.50,000. பிறகு அறைகலன்கள் வாங்க ரூ.25,000.

சரி ஒரு நாளைக்கு ரூ.3500 சேல்ஸ் நடக்கிறது. அதில் வரவும் செலவும் போக தொழில்முனைவோர்க்கு ஏதும் இருக்காதே?

மேலே நாம் பார்த்தது பிரேக் ஈவன் பாயின்ட். அதாவது, லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்கிற புள்ளி. ஆனால், சராசரியாக ஒரு வாடிக்கையாளர் ரூ.50-க்கு பொருள் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். நாள் ஒன்றுக்கு 100 வாடிக்கையாளர் வந்தால் ரூ.5,000 பில் போடுவோம். ஆக, நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1,000 மீதமாகும். அதாவது, பிரேக் ஈவன் பாயின்டுக்கு மேலே இருக்கும் தொகையே லாபம். 25 நாளில் ரூ.25,000 லாபம். ஆனால், நாள் ஒன்றுக்கு 3,500 ரூபாய்க்கு விற்பனையை அடைந்தே தீர வேண்டும்.

வங்கிக் கடன் வசதிகள்:

இது(stationery business) ஒரு டிரேடிங் பிசினஸ். அதனால் முதலில் ஸ்டாக் வாங்க கடன் கிடைக்கும். முத்ரா என்ற திட்டத்தில் கடன் வசதிகள் உள்ளன. வங்கியோடு நல்ல உறவு இருக்கும்பட்சத்தில் அறைகலன்களுக்கும் கடன் கிடைக்கும்.

இந்த(stationery business) வியாபாரத்தில் ஒருவர் மாதம் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்க வழியுண்டு என்று சொல்லலாமா?

சிறிய கடையாக இருந்தாலும் ஆரம்பத்தில் ரூ.10,000 வரை லாபம் கிடைக்கும். போகப் போக நாம் போட்ட கணக்கு மாதம் ரூ.25,000 வரை சாத்தியமாகும்.

குறிப்பு:

இந்த தொழில்(stationery business) எந்த பொருட்கள் அதிகம் வியாபாரம் ஆகுமோ அந்தப் பொருட்களை பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அதில் உடனடி லாபம் பார்க்கலாம்.

புதிதாக வேறு என்ன தொழில் செய்யலாம் 2019 – சிறந்த சிறு தொழில்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE