Summer Season Business Ideas in Tamil
நண்பர்களே உங்களில் யாருக்கு சுய தொழில் செய்ய ஆசையாக உள்ளதா..? யாருக்கு தான் ஆசை இருக்காது அனைவருக்குமே இந்த ஆசை தான் இருக்கும்..! நம்மில் ஒவ்வொருவரும் சுயதொழில் செய்ய மிகவும் ஆசை இருக்கும். அப்படி என்ன தொழில் செய்தாலும் அதில் எவ்வளவு லாபம் கிடைக்கும், அல்லது தொடங்கி நஷ்டம் ஆகிவிட்டது என்றால் என்ன செய்வது என்று நினைத்து யாரும் பயம் கொள்ளவேண்டாம். ஏனென்றால் நாம் சரியான ஒரு தொழிலை பற்றிய தகவலை தெரிந்துகொண்டு தொழிலை செய்தால் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆகவே நீங்கள் ஒரு தொழிலை தொடங்க நினைத்தால் கண்டிப்பாக அதனை செய்துவிடுங்கள்..!
ஆகவே நாம் தினம்தோறும் ஒவ்வொரு வகையான தொழில்களை பற்றி தெளிவாக பதிவிட்டு வருகின்றோம். இன்றைய பதிவின் மூலம் அருமையான இரண்டு தொழல்களை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்..! வாங்க அதனை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Summer Season Business Ideas in Tamil:
வெயில்காலம் என்றால் மக்கள் அனைவருமே ஆசைபட்டு குடிப்பது என்னவென்றால் இளநீர், நீர்மோர், ஜூஸ் என்று இது மாதிரியான பானங்களை குடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருக்கும். ஆகவே இது தொடர்பான குடிநீர் பானங்களை ஒரு கடையாக துவங்கலாம்.
நாம் அனைவரும் வைத்திருக்கும் ஒரு விதமான ஜூஸ் கடைகளை திறக்க கூடாது. அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு சில இடங்களில் இருக்கும் கடைகளை போல் நாமும் தொடங்க வேண்டும். ஆகவே அது என்ன கடை எவ்வளவு முதலீடு என்பதை பற்றி பார்க்கலாம்..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
எவ்வளவு முதலீடு:
நீங்கள் ஒரு இளநீர் கடை திறக்க போகிறீர்கள் என்றால் அதற்கு தேவை 1000 ரூபாய் தான். அதேபோல் நீங்கள் நொங்கு தொழிலோ அல்லது நீர் மோர் தொழிலோ தொடங்கலாம். இது இரண்டும் வெறும் 1000 ரூபாய் முதலீடு இருந்தால் போதுமானது ஆகும்.
எங்கு துவங்கலாம்:
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திலும், கடைகள் அதிகம் உள்ள இடத்திலும் இந்த தொழிலை தொடங்குவது நல்லது. High Way ரோட்டிலும் தொடங்கலாம். ஏனென்றால் அங்கு பைக்கில் செல்பவர்கள் வெயிலில் காரணமாக அங்கு கடைகள் இருந்தால் அங்கு நின்று குடிப்பதற்கு வசதியாக இருக்கும்.
லாபம்:
ஒரு கப் 20 ரூபாய் நீர்மோர் விற்றால் 200 கப் விற்பனை செய்தால் உங்களுக்கு 4,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதேபோல் முக்கியமாக மக்கள் காலையில் வாக்கிங் செய்யும் இடங்களில் விற்பனை செய்வது மிகவும் நல்லது.
அங்கு கூட்டம் அதிகம் வரும். வெயில்காலத்தில் இளநீர், நீர்மோர் குடிப்பது மிகவும் நல்லது. ஒரு இளநீர் 40 ரூபாய் விற்பனை ஆகிறது 50 இளநீர் விற்றால் கூட நல்ல லாபம் பார்க்க முடியும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |