தினசரி வருமானம் தரும் தொழில்
வணக்கம் நண்பர்களே..! புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவானது மிகவும் உதவியானதாக இருக்கும். இந்து தொழில் செய்வதற்கு அதிக முதலீடு தேவையில்லை. அதுமட்டும் இல்லாமல் ஆண், பெண் இருவரும் இந்து தொழிலை செய்தால் தினசரி வருமானம் பெறலாம். மேலும் இந்த சுய தொழிலை தொடங்குவது எப்படி தொழில் தொடங்குவதற்கான மூலப்பொருட்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
அதிக லாபம் தரும் சிறு தொழில்:
வீட்டில் இருந்தே அதிக லாபத்தை தரக்கூடிய தொழில் Aloe Vera Gel Powder தொழிலாகும். இந்த தொழில் இப்போது அதிக டிமாண்ட் உள்ள தினசரி வருமானம் தரக்கூடிய தொழிலில் ஒன்று. இத்தகைய தொழிலை செய்வதற்கு முதலீடு 2,000 ரூபாய் மட்டும் போதும்.
தேவையான மூலப்பொருட்கள்:
Aloe Vera Gel Powder தொழிலை தொடந்துவதற்கு கற்றாழை 3 கிலோ மற்றும் நீங்கள் தயாரித்த பவுடரை பேக்கிங் செய்வதற்கு Heat Sealing Machine இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும். Heat Sealing Machine-னை நீங்கள் Online ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இந்த மிஷின் விலை 800 ரூபாய் ஆகும்.
தேவையான இடம்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்கள் வீட்டில் 10×10 இடம் இருந்தால் போதும். சிறிய இடத்தில் இந்த தொழிலை செய்து பெரிய அளவில் வருமானத்தை பெற முடியும்.
தயாரிக்கும் முறை:
முதலில் 3 கிலோ கற்றாழையை எடுத்துக்கொண்டு சுத்தமான தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு வடிகட்டிய கற்றாழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் 2 நாட்கள் நன்றாக காய வைத்து விடுங்கள். 2 நாட்கள் களித்து பிறகு கற்றாழை துண்டு சுருங்கி ஒரு பதத்திற்கு வந்து விடும்.
இப்போது காய்ந்த கற்றாழையை உங்கள் வீட்டில் இருக்கும் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் அரைத்த பவுடரை 200 கிராம் அளவிற்கு Packing செய்வதற்கு தேவையான அளவு பாலித்தீன் கவர் வாங்கிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக 200 கிராம் கற்றாழை பவுடரை பாலித்தீன் கவரில் நிரப்பி Heat Sealing Machine வைத்து பாக்கெட் செய்து விடுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
நீங்கள் தயாரித்த 200 கிராம் ஒரு பாக்கெட்டின் விலை 299 ரூபாய் ஆகும். ஒரு நாளைக்கு தோராயமாக 10 பாக்கெட் விற்பனை செய்தால் 2,990 ரூபாய் வரை வருமானம் பெற முடியும். நீங்கள் அதிகமாக தயாரித்து விற்பனை செய்தால் அதற்கு ஏற்றவாறு வருமானமும் கிடைக்கும்.
மேலும் நீங்கள் விற்பனைக்கு ஏற்றவாறு Aloe Vera Gel Powder தொழிலை கிலோ கணக்கில் கூட தயார் செய்து கொள்ளலாம்.
இந்த கற்றாழை பவுடர் நாட்டு மருந்து கடை, மெடிக்கல் ஷாப், பேன்சி ஸ்டோர் மற்றும் பெரிய ஷாப்பிங் மால் ஆகிய இடங்களில் அதிக டிமாண்ட் இருப்பதால் இந்த இடங்களில் விற்பனை செய்யலாம்.
இதையும் படியுங்கள்⇒ 2 மணி நேரம் வேலை தினமும் 4000 ரூபாய் லாபம் அருமையான தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |