நஷ்டம் இல்லாத தொழில்கள்
சுயதொழில் செய்ய நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான வணக்கங்கள். நாம் இன்னொருவரிடம் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது கஷ்டமாக உணர்வீர்கள். ஏன்னென்றால் நேரம் மற்றும் விதிமுறைகள் எல்லாம் கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் என்ன தான் வேலை நாம் முதலாளி அல்ல தொழிலாளி தான். அதுவே சுயதொழில்கள் செய்தால் நாமே ராஜா நாமே மந்திரி. இது மாதிரியான தொழில்களை தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ 1 ரூபாய் கூட முதலீடு இல்லாமல் செய்யும் சூப்பரான தொழில்
Tea and Coffee Business ideas in Tamil:
அனைவர்க்கும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். அதிலும் வீட்டில் இருப்பவர்களை விட வேலைக்கு செல்பவர்களுக்கு காலை 11 மணி, மாலை 4 மணி என இந்த இரண்டு வேளையும் கட்டாயம் டீ குடித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள். நீங்கள் செய்யும் நிறுவனத்தில் உங்களுக்கு கடையில் தான் டீ வாங்கி கொடுப்பார்கள். அதனால் அந்த நிறுவனத்தின் முதலாளிடம் நீங்கள் சென்று பேச வேண்டும். இரு வேலையும் டீ போட்டு தரும் தொழிலை செய்கிறேன். உங்களுடைய எதுவும் Order வேணும் என்றால் என்னிடம் தெரியப்படுத்துங்கள்.
உதாரணமாக அவர்களின் நிறுவனத்தில் 50 நபர்கள் வேலை பார்க்கிறார்கள். அப்பொழுது நீங்கள் தினமும் 100 டீ கொடுக்க வேண்டியிருக்கும். அப்போ ஒரு டீ 10 ரூபாய் என்றால் 100 டீ 1,000 ரூபாய் தினமும் சம்பாதிக்கலாம். மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.Tea Shop Business ideas in Tamil:
நீஙகள் டீ கடை வைத்தீர்கள் என்றால் நிச்சயமாக நஷ்டம் ஆகாது. மக்கள் டீயை அதிகம் விரும்புவார்கள். இந்த நேரத்தில் தான் டீ குடிக்கணும் என்று விதிமுறை இல்லை. காலை 4 மணிக்கும் குடிப்பார்கள். இரவு 12 மணிக்கும் குடிப்பார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது Main ஆக உள்ள இடமாக பார்த்து டீ கடை வைக்க வேண்டும். கோவில், பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை அருகில் போன்றவற்றில் மக்கள் அதிகமாக வருவார்கள். அதனால் இந்த இடத்திlல் வைப்பது சிறந்தது. ஒரே மாதிரியான டீ கொடுக்காமல் இஞ்சி டீ, ஏலக்காய் டீ, சுக்கு டீ இன்னும் பல டீகளை போடலாம். காப்பியில் பில்டர் காப்பி, சுக்கு காப்பி, பாலில் ஏலக்காய் பால் இந்த மாதிரி வித்தியாசமான டீயை, காப்பிகளை போடும் போது வாடிக்கையாளர்கள் உங்க கடையை தேடி வருவார்கள். இந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.
டீ கடை தொழில் செய்வதற்கு 20,000 ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 80,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.Juice Shop Business Ideas in Tamil:
மக்களிடையே எப்பொழுதும் Fresh ஜூஸ்க்கு Demand இருக்கும். வெளியில் சென்றால் நல்ல உச்சி வெயில் அடிக்கும் நேரத்தில் மக்கள் தேடுவது ஜூஸை தான். சில நபர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஜூஸ் குடிப்பார்கள்.
மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக வைக்க வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில் அருகில் போன்ற இடங்களில் ஜூஸ் ஷாப் வைத்தால் நல்லா விற்பனை ஆகும்.
எல்லாரும் செய்வது போல் ஜூஸ் போடாமல் கொஞ்சம் வித்தியாசமாக போட்டு கொடுத்தால் உங்களை தேடி தான் வருவார்கள். அதனால் இந்த தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |