Textile Business Ideas in Tamil..!
வணக்கம் நண்பர்களே.. தீபாவளி இன்னும் சில நாட்களில் வர உள்ளது. ஆக இந்த தீபாவளிக்கு ஏற்றது போல் நீங்கள் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நிச்சயம் நல்ல வருமானத்தை பெற முடியும், தீபாவளிக்கு என்ன தொழில் செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. அதாவது நீங்கள் Textile Business ஆரம்பிக்கலாம், அதுவும் உங்கள் வீட்டில் இருந்தபடியே. Textile Business என்பது ஒன்றும் இல்லை ஜவுளி கடை தாங்க.. ஜவுளி கடை சொல்லிட்டு எப்படி வீட்டில் செய்ய சொல்றன்னு நெனைக்கிறிங்களா?.. ஆமாங்க இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் எந்த ஒரு நஷ்டமும் வராது. இந்த பிசினஸ் பல் பெண்கள் வீட்டில் இருந்து செய்து நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றன. சரி இதை எப்படி ஆரம்பிக்கலாம். எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு முதலீடு தேவைப்படும் போன்ற விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
வீட்டிலேயே ஜவுளி கடை:
இந்த தீபாவளிக்கு நிறைய மாடல்களில் ஆடைகள் வந்திருக்கும். ஆக சுடிதார் மெட்டிரியல், புடவை, பெண் குழந்தைகளுக்கான ஆடை இது போன்றவற்றை மொத்தமாக வாங்கி நீங்கள் வீட்டில் இருந்தபடியே விற்பனை செய்யலாம். நீங்கள் விற்பனை செய்யும் ஆடை தனித்துவமாகவும், அழகானதாகவு, விலை மழிவதாகவும் இருந்தால் மிகவும் சிறந்தது. அப்பொழுது தான் உங்களிடம் மக்கள் வாங்குவார்கள்.
ஏன் ஆடைகளை வங்காளம்:
மதுரை, ஈரோடு, சென்னை, திருச்சி, தஞ்சாவூர் இது பெரிய நகரங்களில் உள்ள ஜவுளி கடைகளில் நீங்கள் ஆடைகளை மொத்தமாக வாங்கி கொள்ளலாம். நீங்கள் மொத்தமாக வாங்கிய ஆடைகளில் சில விற்பனை ஆகவில்லை என்றால் அதனை அந்த கடைக்காரர்கள் திரும்ப பெற்று கொள்வார்கள். ஆக நீங்கள் இந்த தொழிலை பொறுத்தவரை பயப்பட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை. நீங்கள் மொத்தமாக வாங்கும்பொழுது உங்களுக்கு டிஸ்கவுண்டும் வழங்கப்படும்.
முதலீடு:
குறைந்தபட்சம் உங்களிடம் 20 ஆயிரம் இருந்தால் போதும் தாராளமாக இந்த Textile Business-ஐ வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
சந்தை வாய்ப்பு:
உங்கள் தெருவில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தலாம், மேலும் உங்கள் உறவினர்கள், நண்பர்களிடமும் நீங்கள் ஆடைகளை விற்பனை செய்கிறீர்கள் என்று தெரியப்படுத்தலாம். மேலும் உங்கள் WhatsApp Status-யில் Status போடலாம், மேலும் Face Book, Telegram, Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்தலாம் இதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.
இதையும் படியுங்கள் 👉👉 பெண்களே வீட்டில் Table Size இடம் இருந்தால் போதும் தினமும் 1500 ரூபாய் சம்பாதிக்கலாம்..
வருமானம்:
ஒரு முறைவையின் விலை 350 ரூபாய் என்றால் நீங்கள் அந்த புடவையை கூடுதலாக 50 முதல் 100 ரூபாய் சேர்த்து 400 அல்லது 450 என்று விற்பனை செய்யலாம். ஒரு புடவைக்கே உங்களுக்கு 50 அல்லது 100 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதேபோல் ஒரு சுடிதாரின் விலை 500 ரூபாய் என்றால் அதனை நீங்கள் 600 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
குறிப்பு:
நீங்கள் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு சென்று ஆடைகளை விற்பனை செய்யலாம். இப்படி செய்தீர்கள் என்றால் கண்டிப்பா ஒரு புடையவது வாங்கிவிடுவார்கள்.
உங்களிடம் பேச்சுத்திறமை இருக்க வேண்டும். இது உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக நல்ல லாபம் பெற முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |