எக்காலத்திலும் இந்த தொழில் உங்களுக்கு கைகொடுக்கும்..! கைநிறைய லாபம் தரும் அருமையான தொழில்..!

Advertisement

Textile Shop Business Plan in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். யாருமே படித்ததற்கான வேலையை செய்யவில்லை. கிடைத்த வேலையை தான் செய்து வருகிறார்கள். அப்படி வேலை தேடும் பலருக்கும் சொந்தமாக ஓரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன தொழில் செய்வது என்று யோசிப்பீர்கள். சிலர் இந்த தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா அல்லது நஷ்டம் ஏதும் வந்துவிடுமா என்று யோசிப்பீர்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் இந்த பதிவில் பல வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் வணிக யோசனையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl

எக்காலத்திலும் கைகொடுக்கும் ஒரே தொழில்..! 

textile shop business

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆடை என்பது எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த தொழிலுக்கு அன்றும் சரி இன்றும் சரி மவுஸ் குறையவே இல்லை. அதனால் நீங்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்.

அப்படி என்ன தொழிலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. ஜவுளி கடை வைக்கும் தொழிலை தான் கூறுகின்றேன். இந்த தொழிலுக்கு என்றுமே அதிக டிமாண்ட் இருக்கிறது.

ஜவுளி கடை என்றதும் பெரிய கடையாக இருக்குமோ என்று யோசிப்பீர்கள். ஆனால் சிறிய கடையாக கூட தொடங்கலாம். முதலில் ஜவுளி வணிகத்தை தொடங்குவதற்கு சந்தையில் உள்ள அனைத்து தேவைகளையும் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்து சிறந்த துணிகள் மற்றும் ஜவுளிகளுக்கு சரியான சந்தையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கடையை வைத்தால் போதும் விற்பனை தாறுமாறா இருக்கும்..

இடவசதி:  

textile shop business

உங்கள் வணிகத்திற்கு ஒரு சிறந்த இடம் அவசியம் அல்லவா..! உற்பத்தியாளர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் துணிகளை சேமித்து விற்க ஒரு கடையை வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ இருக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தொடங்கும் கடை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களாக இருக்க வேண்டும். அதுபோல மக்கள் விரைவில் அணுகும் இடமாகவும் இருக்க வேண்டும்.

அதுபோல உங்கள் கடையை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல விளம்பரபடுத்த வேண்டும். இப்படி தொடங்கினால் நல்ல லாபத்தை பார்க்கலாம்.

லாபம் தரக்கூடிய தொழில் இதுவும் ஒன்றா.. இந்த தொழில் வருமானம் மட்டுமே 30,000 ரூபாயாம்

எவ்வளவு முதலீடு:  

ஜவுளி கடை வைப்பதற்கு நல்ல முதலீடு தேவைப்படும். ஜவுளி கடையின் வாடகை செலவு, துணிகளின் செலவு மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செலவு போன்ற பல செலவுகள் இருக்கும். எனவே இந்த செலவுகளை கணக்கில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

என்ன உரிமம் தேவை:  

  1. GST சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. அரசாங்கத்திடம் இருந்து வர்த்தக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  3. கடைக்கான ஸ்தாபன உரிமம் பெற வேண்டும்.
  4. வர்த்தக முத்திரை பதிவு செய்திருக்க வேண்டும்.
  5. கடையில் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தால் ESIC பதிவு செய்ய வேண்டும்.

இதுபோல நீங்கள் ஜவுளி கடையை தொடங்கினால் தினம் தினம் நல்ல வருமானத்தை பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement