எந்த காலத்திலும் நஷ்டம் ஆகாத இந்த தொழிலை செய்து தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

thallu vandi kadai business ideas in tamil

நஷ்டம் ஆகாத தொழில்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் செய்ய கூடிய தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழில் செய்தால் லாபம் கிடைக்குமா..! இல்லை அந்த தொழிலை செய்யலாமா என்று நினைத்து கொண்டிருப்பீர்கள். எல்லா தொழிலையும் நம்பிக்கையோடு செய்தாலே வெற்றி தான். தொழிலை தொடங்கியதும் லாபம் கிடைக்காது அதற்காக தீவிரமாக உழைக்க வேண்டும். யாரோ ஒருவருக்காக இன்னொரு நிறுவனத்தில் மாடாக உழைப்பதற்கு நாமே சுயமாக தொழில் செய்து உழைக்கலாம். இப்படி சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க என்ன தொழில் என்று தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ ஒரு நாளுக்கு 5000 ரூபாய் சம்பாதிக்ககூடிய அருமையான தொழில் இது..!

தள்ளுவண்டி டிபன் கடை:

இந்த உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் உணவு ரொம்ப முக்கியமானது. அதனால் உணவு தொழிலை செய்தால் நிச்சயம் நஷ்டம் ஆகாது. ஊருக்கு ஊர் ஹோட்டல் இருக்கும். ஆனால் அதில் சென்று சாப்பிடுபவர்களை விட ரோட்டு கடையில் சாப்பிடுபவர்கள் அதிகம். எதனால் தெரியுமா.? ஹோட்டலில் ஏற்கனவே செய்து வைத்திருப்பதை பரிமாறுவார்கள். ஆனால் ரோட்டு கடையில என்ன கேக்கிறோமா அதை நமக்கு நேரடியாகவும், ருசியாகவும் செய்து கொடுப்பார்கள். இதனால் தான் ரோட்டு கடையில் சாப்பிட விரும்புவார்கள்.  அதுமட்டுமில்லாமல் நிறைய நேரம் ஆகாது போற போக்கில் சாப்பிட்டுவிட்டு போய்டலாம்.

இந்த தொழிலில் முழு நேரம் இருக்க வேண்டிய அவசியமில்லை. காலை மற்றும் மாலை செலவிட்டாலே போதுமானது.

இதில் என்ன மாதிரியான உணவுகள் செய்யலாம்:

நீங்கள் காலை மற்றும் நேரங்களில் சாப்பிடும் வகையிலும் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் செய்து கொடுக்க வேண்டும். அதில் இட்லி, தோசை, பொங்கல், பனியாரம், இடியாப்பம், வடை மற்றும் இதற்கு தேவையான சைடிஸ் போன்றவை செய்யலாம். ரொம்ப முக்கியமானது உடலுக்கு ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் உங்களது கடையை தேடி தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

இல்லையென்றால் ட்ரெண்டிங்கில் இருக்க கூடிய பானி பூரியை மட்டும் செய்து கொடுக்கலாம். இதை நீங்கள் மாலை மட்டும் செய்தாலே நல்லா விற்பனை ஆகும். மனிதர்களுக்கு பானி பூரியில் பிரியம் அதிகமாகிவிட்டது. அதனால் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.

எந்த இடத்தில் தொழில் செய்யலாம்:

இந்த தொழில் செய்வதற்கு Bustand, கோவில்கள், Hospital, Railway station, பூங்கா போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள  இடங்களில் வைத்தால் வியாபாரம் ஆகும்.

இந்த உணவுகளை செய்வதற்கு மட்டும் 1,400 ரூபாய் செலவு செய்தால் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த தொழிலை செய்து ஈஸியான வகையில் செய்து நல்ல லாபத்தை பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022