நம்ம ஊரில் இதுவரை யாரும் செய்யாத புதிய தொழில்..! Business Plan in tamil

tomato ketchup making business

Tomato Ketchup Business Plan..!

Small Business Ideas Tamil:– புதிதாக தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு எனது அன்பான வணக்கம். இந்த பொதுநலம் பதிவில் குறைந்த முதலீட்டில் லாபம் தரக்கூடிய அதுவும் யாரும் அதிகம் செய்திடாத ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதாவது Tomato Ketchup தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரது உணவு முறையிலும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டது. அந்த வகையில் மக்கள் உணவுகளில் அதிகளவு Tomato Ketchup பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். எனவே நாம் வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் தயாரித்து விற்பனை செய்யும்பொழுது நல்ல லாபம் பார்க்க முடியும். சரி வாங்க இந்த Tomato Ketchup Business Idea-ஐ பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Small Business Ideas Tamil..!

மூலப்பொருட்கள்:-

இந்த Tomato Ketchup செய்ய தேவைப்படும் மூலப்பொருட்கள் தக்காளி, சீரகம், வெங்காயம், பூண்டு, கிராம்பு, சின்ன ஏலக்காய், பட்டை, sodium benzoate, சர்க்கரை மற்றும் பேக்கிங் கவர் இவை அனைத்தும் தேவைப்படும்.

14 கிலோ Tomato Ketchup செய்வதற்கு மூலப்பொருட்களின் அளவுகள் 

  1. தக்காளி – 50 கிலோ
  2. சீரகம் – 20 கிராம்
  3. வெங்காயம் – 750 கிராம்
  4. பூண்டு – 300 கிராம்
  5. கிராம்பு – 50 கிராம்
  6. ஏலக்காய் – 30 கிராம்
  7. பட்டை – 50 கிராம்
  8. Sodium Benzoate6.5 or 7 கிராம்
  9. Acetic Acid65 கிராம் முதல் 75 கிராம் வரை செய்து கொள்ளலாம்.

எனவே வீட்டில் இருந்து இந்த தொழிலை செய்வதாக இருந்தால் இந்த மூலப்பொருள்களுக்கு குறைந்தபட்சம் 5000 ரூபாய் தேவைப்படும்.

பெண்களுக்கு ஏற்ற தொழில் இட்லி மாவு வியாபாரம்..!

செய்முறை:-

50 கிலோ தக்காளி பழத்தினை நன்றாக சுத்தம் செய்து பெரிய பாத்திரத்தில் நன்றாக வேகவைத்து எடுக்க வேண்டும்.

பின் தக்காளியை வடிகட்டி நன்றாக ஆறவைக்கவும்.

இந்த தக்காளி ஆறுவதற்கு முன் நாம் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சீரகம் இவை அனைத்தையும் நன்றாக இடித்து ஒரு சுத்தமான வெள்ளை துணியில் கொட்டுங்கள், பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை நன்றாக இடித்து இத்தனையும் அந்த துணியில் சேர்த்து நன்றாக கொட்டிக்கொள்ளுங்கள்.

தக்காளி நன்றாக ஆறியதும் நன்றாக கரைத்து கொள்ளுங்கள், பிறகு அதனை வடிகட்டி ஜூஸை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

இந்த ஜூஸினை திரும்ப அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்ச வேண்டும், தக்காளி ஜூஸினை காய்ச்சும் பொழுது இடித்து கட்டி வைத்துள்ள பொருட்களை அந்த துணியுடன் அப்படியே தக்காளி ஜூஸில் சேர்த்து காய்சவேண்டும். இவ்வாறு துணியில் கட்டி காய்ச்சுவதினால் அவற்றில் உள்ள எசன்ஸ் தக்காளி சாறுடன் சேர்ந்து Tomato Ketchup சுவை கிடைக்கும்.

அதன் பிறகு ஜூஸ் கொதிச்சி கொண்டிருக்கும்பொழுது அதனுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் உப்பினை சேர்த்து நல்ல கெட்டியாக காய்ச்ச வேண்டும்.

இந்த Tomato Ketchup-ஐ எந்த பதத்திற்கு காய்ச்ச வேண்டும் என்றால் ஒரு பிளேட்டில் இதனை கொட்டினால் அப்படியே பசை மாதிரி இருக்கனும். அந்த பதத்திற்கு இந்த Tomato Ketchup-ஐ நன்றாக காய்ச்ச வேண்டும்.

இறுதியாக Sodium Benzoate, Acetic Acid சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த Acetic Acid எதற்காக சேர்க்கப்படுகிறது என்றால் Tomato Ketchup கெட்டு போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தபடுகிறது.

இவ்வாறு காய்ச்சினால் Tomato Ketchup தயார். இதனை தாங்கள் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

பேக்கிங் செய்வதற்கு என்று அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் sauce packaging bottles விற்பனை செய்யப்படுகிறது. எனவே அங்கு ஆர்டர் செய்து பேக்கேஜ் கவரினை பெற்று கொள்ளலாம்.

முதலீடு:-

இந்த தொழில் துவங்க குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் முதலீடாக தேவைப்படும்.

விலை நிர்ணயம்:-

small business ideas tamil – தாங்கள் பேக்கிங் செய்வதை பொறுத்து விலை நிர்ணயம் மாறுபடும் அதாவது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதாக இருந்தால் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

அதுவே பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதாக இருந்தால் 25 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil