போட்டி இல்லாத தொழில்
இன்றைய காலத்தில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பணம் சமபாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் பாதி நம்பர்கள் வெளியில் மாத சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்தாலும் கூட அனைவருடைய மனதிலும் நாமும் சொந்தமாக தொழில் தொடங்கி அதன் மூலம் முதலாளியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சரி அப்படி தொழில் தொடங்கலாம் என்றாலும் அந்த தொழில் போட்டி இல்லாத மற்றும் என்றும் நல்ல வருமானம் தரும் தொழிலாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக யோசிப்பார்கள். ஆகையால் உங்களுடைய 2 யோசனைகளுக்கும் இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். மேலும் என்ன தொழில் தொடங்குவது எப்படி தயார் செய்வது என்று அனைத்தையும் பதிவை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ நல்ல தொழில் நல்ல லாபம் நல்ல முன்னேற்றம் அடைய முடியும்..!
குறைந்த முதலீட்டில் அதிக லாபம்:
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Tomato Powder Business– யை தொடங்கினால் போதும் நல்ல வருமானம் பெறலாம்.
முதலீடு:
இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலீடு 1,000 ரூபாய் மட்டும் போதும். அதுமட்டும் இல்லாமல் இந்த தொழிலின் டிமெண்ட் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
தேவைப்படும் இடம்:
உங்களுடைய வீட்டிலையே இந்த தொழிலை தொடங்கி கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் தனி கடையும் வைத்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- தக்காளி– 6 கிலோ
- Zip Lock Pouch Small- தேவையான அளவு
இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பு FSSAI லைசென்ஸ் வாங்கி கொள்ளுங்கள்.
தொழில் தொடங்குவது எப்படி..?
நீங்கள் 2 கிலோ தக்காளி பவுடர் தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கு 6 கிலோ தக்காளி முதலில் வாங்கி கொள்ளுங்கள்.
அதன் பின்பு அந்த தக்காளியை நன்றாக அலசிக்கொண்டு தக்காளியின் மேலே இருக்கும் காம்பினை நீக்கி விடுங்கள்.
அடுத்து காம்பு நீக்கிய தக்காளியை வட்டமாக நறுக்கி வெயிலில் தனித்தனியாக 3 நாட்கள் நன்றாக காய வைத்து விடுங்கள்.
இப்போது காய வைத்துள்ள பவுடரை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பவுடர் போல தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளுங்கள். இப்போது Tomato Powder தயாராகிவிட்டது.
பேக்கிங் செய்தல்:
நீங்கள் தயாரித்து உள்ள Tomato Powder- யை Zip Lock Pouch-ல் 1 கிலோ மற்றும் 1/2 கிலோ அளவிற்கு பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
நீங்கள் தயாரித்த Tomato Powder தோராயமாக 1/2 கிலோ விலை 160 ரூபாய் மற்றும் 1/2 கிலோ 80 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு நீங்கள் 1 கிலோ பவுடர் பாக்கெட்டில் 10-யும் மற்றும் 1/2 கிலோ பவுடர் பாக்கெட்டில் 10– யும் விற்பனை செய்தால் தோராயமாக 2,400 ரூபாய் சம்பாதிக்கலாம். அப்படி என்றால் ஒரு மாதத்திற்கு 72,000 வரை சம்பாதிக்கலாம்.
இந்த Tomato Powder பெரிய மற்றும் சிறிய ஹோட்டல், Department Store, மளிகை கடை மற்றும் Fast Food கடை ஆகிய இடங்களில் நீங்கள் விற்பனை செய்யலாம்.
இந்த தொழிலை நீங்கள் பார்ட் Time தொழிலாக கூட செய்யலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |