Upcoming Future Business in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய சூழலில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகவே உள்ளது. அதனால் அனைவருமே ஏதாவது ஒரு தொழில் அல்லது வியாபாரத்தை ஆரம்பிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் ஏதாவது ஒரு தொழில் அல்லது வியாபாரத்தையோ தொடங்குவதற்கு முன்னால் அதனை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக எதிர்காலத்தில் நாம் தொடங்கும் தொழிலுக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்று எந்த காலத்திலும் அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றிய முழு தகவலையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
என்ன தொழில்:
நாம் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுவது உணவு, உடை மற்றும் உறைவிடம் அதாவது நாம் நிலையாக வாழ்வதற்கான இடம். இந்த மூன்றில் நாம் எதனை நம்பி தொழில் செய்தாலும் அதில் நமக்கு நஷ்டமே ஏற்படாது.
அதிலும் குறிப்பாக நாம் இன்று பார்க்க இருக்கும் தொழில் மூன்றாவதாக உள்ள உறைவிடத்தை பொறுத்தது. அதாவது நாம் ரியல் எஸ்டேட் தொழில் பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.
அதாவது இந்த ரியல் எஸ்டேட் தொழிலுக்கான மதிப்பு தற்போது உள்ளதை விட எதிர்காலத்தில் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று பல வகையான ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அதனால் நீங்கள் இந்த தொழிலை துவங்கினீர்கள் என்றால் இப்பொழுது கிடைக்கும் லாபத்தை விட எதிர்காலத்தில் பன்மடங்கு அதிகமாகவே லாபம் கிடைக்கும்.
தேவையான மூலப்பொருள் மற்றும் முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படும் மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல தரமுள்ள இடங்கள் தான். நீங்கள் வாங்கும் இடம் மற்றும் வருங்காலத்தில் அங்கு வரப்போகும் வசதிகளை பொறுத்து அதனை விலை மாறுபடும்.
தோராயமாக இந்த தொழிலை துவங்குவதற்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
உங்க கையில் 1000 ரூபாய் இருந்தாலே போதும் நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்கலாம்
தொழில் செய்யும் முறை:
முதலில் நீங்கள் நல்ல நிலையில் உள்ள நிலத்தை வாங்கி கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் விளைச்சல் அதிகம் இல்லாத விவசாய நிலங்கள் அனைத்துமே குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட நிலங்களை நீங்கள் வாங்கினீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
வருமானம்:
நீங்கள் தோராயமாக ஒருவரிடம் இருந்து ஒரு விளைச்சல் இல்லாத விவசாய நிலம் அதுவும் மிகவும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் ஏரியாவில் உள்ளதை நீங்கள் 10 லட்சம் ரூபாய்க்கு வாங்குகின்றீர்கள்.
பின்னர் அதனை 10 சிறிய வீட்டு மனைகளாக பிரித்து 10 பேருக்கு விற்பனை செய்கிறீர்கள். அதுவும் ஒருவருக்கு தோராயமாக 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 50 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இப்பொழுது உங்களுக்கு லாபமாக 40 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்
இந்த தொழிலை இரண்டு முறையில் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |