லாபத்தை அள்ளித்தரும் போட்டியில்லாத தொழில் | Waffle Business Plan
Small Business Ideas in Tamilnadu Villages in Tamil: புதிதாக தொழில் துவங்க இருக்கும் இளைய தலைமுறையினருக்கு பொதுநலமின் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் பல மடங்கு லாபத்தை கொடுக்கும் Wafflle Business பற்றித்தான் பார்க்கப்போகிறோம். தனித்துவம் பெற்ற இந்த வேஃபில் தொழிலை யாரு வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தொழில் செய்வதற்கு எந்த முன் அனுபவமும் தேவையில்லை. இந்த தொழிலுக்கு இந்தியாவில் போட்டியானது கம்மியான நிலையில் இருப்பதால் Wafflle Business தொழிலை நீங்களும் தொடங்கினால் எதிர்ப்பாராத லாபம் கிடைக்கும். இந்த தொழில் துவங்குவதற்கு முதலில் waffle செய்ய தெரிந்திருக்க வேண்டும். waffle செய்வது மிகவும் கடினமான விஷயம் இல்லை. வேஃபில் எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதற்கு நிறைய youtube சேனலில் செய்முறை மற்றும் தேவையான அளவுகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். சரி இப்போது இந்த தொழிலுக்கு தேவைப்படும் மூலப்பொருள், இயந்திரம், தொழில் முதலீடு போன்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரித்துக்கொள்ளுவோம் வாங்க..!
நம்ம ஊரில் இதுவரை யாரும் செய்யாத புதிய தொழில்..! |
Waffle Business Ideas in Tamil | How to Start a Waffle Business in Tamil:
தேவைப்படும் இயந்திரம்:
இந்த தொழில் துவங்குவதற்கு முதலில் நாம் இந்த வேஃபில் மிஷினை வாங்க வேண்டும். இந்த இயந்திரமானது ரூ.6,900 முதல் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது.
தேவைப்படும் மூலப்பொருள்:
- மைதா மாவு
- முட்டை
- பால்
- சர்க்கரை
- பேக்கிங் பவுடர்
- ஆயில்
- வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்
வேஃபில் செய்முறை விளக்கம்:
- வேஃபில் தயார் செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் மேலே கூறப்பட்டுள்ள மைதா மாவு, முட்டை, வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட், பால், சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஆயில் அனைத்தையும் தேவையான அளவுடன் எடுத்து பவுலில் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
- அடுத்து வேஃபில் மிஷினை மீடியமான அளவிற்கு ஹீட் செய்து கொள்ளவேண்டும். இந்த மிஷினை நாம் கரண்ட் அல்லது பேட்டரி மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- மிஷினை ஹீட் செய்த பிறகு பவுலில் கலந்து வைத்துள்ளதை இந்த மிஷினில் ஊற்றி மிஷினின் மேல் மூடியை அழுத்திய பின் மூடி வைக்கவும்.
- அடுத்து 2 முதல் 3 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின் வெளியில் எடுத்துக்கொள்ளலாம். இப்போது வேஃபில் ரெடி.
- ரெடியான வேஃபிலில் வாடிக்கையாளர்கள் கேட்கும் சாக்லேட், வெண்ணிலா போன்ற எஸ்சென்ஸை சேர்த்து கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
லாபத்தை அள்ளித்தரும் சுயதொழில்..! தினமும் வருமானம் 3,500..! |
முதலீடு:
- இயந்திரத்தின் விலை ரூ.6,900+
- மூலப்பொருள் ரூ.5,000/-
- மொத்த முதலீடு தொகை = ரூ.12,000/- இருந்தால் இந்த தொழிலை தொடங்கலாம்.
சந்தை லாபம்:
வேஃபில் பிசினெஸ்ஸை டிபார்ட்மென்டல் ஸ்டார், வணிக வளாகம், தெரு முனைகளில், மக்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த தொழிலை ஆரம்பித்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
விற்பனை முறை:
ஒரு வேஃபில் செய்வதற்கு ரூ.25 ஆகும். 25 ரூபாய்க்கு செய்த வேஃபிலை ரூ.50/- வரை விற்பனை செய்யலாம்.
Small Business Ideas in Tamilnadu Villages in Tamil – லாப விவரம்:
- ஒரு வேஃபில்க்கு ரூ.25/- லாபம் கிடைக்கும். தினமும் 100 வேஃபில் செய்தால் 100*25= ரூ.2,500/- லாபம் கிடைக்கும்.
- மாதத்திற்கு ரூ.75,000/- லாபம் பார்க்கலாம்.
- கடை மூலமாக மட்டும் அல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வந்தால் நிறைய லாபம் கிடைக்கும்.
- மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில் இந்த வேஃபில் பிசினெஸ் தொழிலை துவங்கினால் எதிர்ப்பாராத அளவிற்கு தினமும் லாபத்தை அடையலாம். சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் யோசிக்காமல் இப்போதே தொடங்குங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |