சிறுதொழில் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு..!

சிறுதொழில் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு..!

வீட்டில் இருந்த படியே தினமும் வருமானம் பெற வேண்டுமா? அப்படி என்றால் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரித்து விற்பனை செய்யலாமே. வீட்டில் இருந்த படியே குறைந்த செலவில் அதிக இலாபம் பெற வேண்டும் என்றால் டிட்டர்ஜன்ட் பவுடர் (Washing Powder) தயாரிப்பு மிகவும் சிறந்த தொழிலாகும். இவற்றை செய்வதற்கு வேலையாட்கள் ஒன்றும் தேவையில்லை. ஒரு நபர் இருந்தாலே போதும். டிட்டர்ஜன்ட் பவுடர் போலவே பாத்திரம் துலக்கும் பவுடர் மற்றும் துணி துவைக்கும் லிக்யூட் ஆகியவற்றையும் தயாரித்து விற்பனை செய்தால் அதிக இலாபம் பெற இயலும்.

newபெண்களுக்கு ஏற்ற தொழில் இட்லி மாவு வியாபாரம்..!

வாஷிங் பவுடர் (Washing Powder) தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  1. குளோபல் சோடா – 1 கிலோ
  2. வாஷிங் சோடா – 3 கிலோ
  3. பேக்கிங் சோடா – 2 கிலோ
  4. TSP (tri sodium phosphate) – 1/2 கிலோ
  5. free flow salt – 2 1/2 கிலோ
  6. டினோபால் – 100 கிராம்
  7. ACID SLURRY – 1 லிட்டர்
  8. colour granules – தேவையான அளவு
  9. வாசனை திரவம் – உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவை

துணி சோப்பு தயாரிக்கும் முறை – செய்முறை:

குளோபல் சோடாவானது ஒரு கிருமி நாசினி பொருளாக விளங்குகிறது. இவற்றை பெரிய பிளாஸ்ட்டிக் டப்பாவில் கட்டிகள் நீக்கி அதாவது (சல்லடையில் கட்டிகளை நீக்கிய பிறகு) நிரப்ப வேண்டும்.

பின்பு அவற்றில் வாஷிங் சோடாவை சேர்க்க வேண்டும். வாஷிங் சோடாவானது காரத்தன்மையுடையது. எனவே உப்பு தண்ணீராக இருந்தாலும் அழுக்கு நன்றாக போகும் என்பதற்காக வாஷிங் சோடாவை பயன்படுத்துகிறோம்.

பிறகு அதேபோல் பேக்கிங் சோடாவையும் சலித்து அந்த டப்பாவில் சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் துணி நீண்ட காலம் வரை நன்றாக உழைப்பதற்காக பேக்கிங் சோடாவை பயன்படுத்துகின்றோம்.

பின்பு TSP சேர்க்க வேண்டும். எதற்காக பயன்படுத்துகின்றோம் என்றால் அனைத்து கறைகளை நீக்குவதற்காக TSP கலவையை இவற்றில் பயன்படுத்துகின்றோம்.

அதை தொடர்ந்து free flow சோடாவை இவற்றுள் சேர்க்க வேண்டும்.

இப்போது கலவைகளை ஒன்றாக கலக்குவதற்கு உங்கள் கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ள வேண்டும். பின்பு அவற்றை உங்கள் கைகளால் நன்றாக கலந்து விட வேண்டும்.

அடுத்தது ஆசிட் சிலரி சேர்க்க வேண்டும். ஆசிட் சிலரி எதற்காக பயன்படுத்துகின்றோம் என்றால் துணியை எப்போதும் வெளுப்பாக மற்றும் பளிச்சென்று கட்டுவதற்காக இந்த ஆசிட் சிலரியை பயன்படுத்துகின்றோம்.

ஆசிட் சிலரி கலவையில் சேர்க்கும் போது நெடி ஏறும். எனவே அப்போது உங்கள் முகத்தில் துணியை காட்டிக்கொள்வது மிகவும் நல்லது.

கலவைகள் அனைத்தையும் ஒன்றாக கலந்த பிறகு ஒரு குச்சியால் இந்த கலவையை ஒன்றாக கலக்க வேண்டும்.

கடைசியாக இந்த கலவையில் வாசனை பொருளை கலந்து திரும்பவும் குச்சியால் நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்பு உங்கள் விருப்பத்திற்கு colour granules 50 கிராம் இந்த கலவையில் சேர்த்தால் உயர்தர Washing Powder தயார். இவற்றை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யலாம்.

newசுயதொழில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு..!

இனி வீட்டிலேயே தயாரிக்கலாம் வாஷிங் பவுடர்.

மூலப்பொருட்கள் கிடைக்கும் இடம்:

அனைத்து கெமிக்கல் கடைகளிலும் இந்த மூல பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு:

கலவைகளை கலக்கும் போது கண்டிப்பாக கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டுதான் கலவைகளை கலக்க வேண்டும்.

மேலும் ஆசிட் சிலரி சேர்த்த பிறகு கலவைகளை கைகளால் கிளறக்கூடாது. குச்சியில் தான் கிளற வேண்டும்.

newதயாரிப்பு தொழில் – கவரிங் நகை தயாரிக்கும் முறை..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil