அடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..!

Advertisement

Water Tank Purifier கேக் தயாரிப்பு தொழில்:-

புதிய தொழில்: வீட்டில் இருந்தே ஒய்வு நேரங்களில் ஆண், பெண் என்று இருபாலரும் செய்யக்கூடிய ஒரு புதிய தொழில் வாய்ப்பை பற்றி தான் இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். குறிப்பாக குறைந்த முதலீட்டில், தினமும் வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக Water tank purifier கேக் தயாரிப்பு உள்ளது. இந்த தொழிலை பொறுத்தவரை அதிக போட்டிகள் இல்லை என்பதால், தயங்காமல் துணிந்து இந்த தொழிலை துவங்கலாம்.

சரி இந்த Water tank purifier கேக் எப்படி தயாரிப்பது ? இதற்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதையும், எப்படி தயாரிக்க வேண்டும் என்பதையும் இப்போது நாம் காண்போம்.

மூலப்பொருட்கள்:

  • Chalk powder -1 kg
  • Sodium hypo chloride – 100 ml
  • filter cloth – தேவைக்கேற்ப

மூலப்பொருட்கள் கிடைக்கும் இடம்:

இந்த Chalk powder, Sodium hypo chloride மூலப்பொருட்கள், அனைத்து கெமிக்கல் கடைகளிலும் தாராளமாக கிடைக்கும். Chalk powder ஒரு மூட்டை 500 ரூபாய்க்கு கிடைக்கும். அதேபோல், Sodium hypo chloride ஒரு லிட்டர் 13 முதல் 15 ரூபாய் வரை கிடைக்கும். filter cloth தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ளவும்.

Suyatholil – துணி சோப்பு தயாரிக்கும் முறை..!Soap Seivathu Eppadi in Tamil

Water tank purifier cake தயாரிக்கும் முறை:

ஒரு பிளாஸ்ட்டிக் வாளியில் Chalk powder-ரை ஒரு கிலோ எடுத்துக்கொள்ளவும். அவற்றில் சிறிதளவு தண்ணீர், ஒரு லிட்டர் Sodium hypo chloride  100 மில்லி சேர்த்து, ஒரு குச்சியை விட்டு நன்றாக கலந்து விடவும், இந்த கலவையை கலக்கும்போது நெடியேறும். எனவே முகத்தில் துணி கட்டிக்கொள்ளவும். அதேபோல் கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டால் மிகவும் நல்லது. இந்த கலவையை கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.

அவ்வளவுதான் கேக் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.

ஒரு சிறிய சதுரமான பிளாஸ்ட்டிக் டப்பாவை எடுத்துக்கொள்ளவும் அல்லது சிறிய சோப்பு டப்பாவாக இருந்தாலும் எடுத்து கொள்ளவும். அவற்றில் பிளாஸ்ட்டிக் கவர் வைத்து இந்த கலவையை ஊற்ற வேண்டும். பின்பு ஒரு நாள் முழுவது இந்த கலவையை வெயிலில் வைத்து காயவைக்க வேண்டும்.

மறுநாள் கேக் தயாராகி விடும். பின்பு இந்த கேக்கை பிளாஸ்ட்டிக் டப்பாவில் இருந்து எடுக்கவும், பின்பு அவற்றில் இருக்கும் பிளாஸ்ட்டிக் கவரையையும் எடுத்து, filter cloth-யில் வைத்து, ஷ்ட்ராப்ளர் அடிக்கவும். அவ்வளவுதான் கேக் விற்பனைக்கு தயார்.

சுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம்

முதலீடு:

இந்த புதிய தொழில் துவங்குவதற்கு 5000/- ரூபாய் இருந்தால் போதும். Chalk powder ஒரு மூட்டை வாங்குவதற்கு ரூபாய் 500 செலவாகும், Sodium hypo chloride ஒரு லிட்டர் ரூபாய் 12-13 ரூபாய் வரை கிடைக்கும். மேலும் filter cloth சேர்த்து முதலீட்டுக்கு ரூபாய் 5000/- போதுமானது.

200 கிராம் Water tank purifier கேக்கின் அடக்க விலை ரூபாய் 10, இவற்றின் விற்பனை விலை ரூபாய் 100/-

சந்தை வாய்ப்பு:

இந்த தொழிலில் போட்டிகள் இல்லை என்பதால் சாதாரணமாகவே சந்தையில் அதிக இலாபம் பெற இயலும். மேலும் தங்களுக்கு தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் விற்பனை செய்து அதிக வாடிக்கையாளர்களை பெற முடியும்.

பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement