Watermelon Shop Business Plan in Tamil
சுயமாக தொழில் செய்வர்களுக்கு நமது பதிவில் தினந்தோறும் பல வகையான தொழில்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். சில நபர்களுக்கு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான யோசனையும், முதலீடு இருக்காது. இன்னும் சில நபர்களுக்கு முழு நேரம் வேலை பார்க்காமல் 2 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் வேலை செய்வது போல் ஏதவாது தொழில் இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள். அதனால் இந்த 3 மணி நேரம் மட்டும் வேலை செய்ய கூடிய அளவில் என்ன தொழில் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Watermelon Business Plan in Tamil:
வெயில் காலத்தில் அனைவரும் தேடுவதை நீங்கள் தொழிலாக செய்தால் வருமானம் கிடைக்காமல் இருக்குமா.! தர்பூசணி கடையை போட்டால் வருமானம் சும்மா தாறுமாறா சம்பாதிக்கலாம். இந்த தொழிலுக்கு நீங்கள் முழுநேரம் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. 11 மணி முதல் 2 மணி நேரம் கடையை வைத்தால் போதுமானது.
இடம்:
நீங்கள் இந்த தொழில் சிறிய அளவில் தொடங்க போகிறீர்கள் என்றால் இடம் தேவையில்லை. இந்த மூலப்பொருட்களுக்கு தள்ளுவண்டி, தர்பூசணி போன்றவை மட்டும் இருந்தால் போதுமானது.
நீங்கள் கடை போடும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாக பார்த்து போட வேண்டும். உதாரணமாக பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயிலடி போன்ற பகுதிகளில் போட வேண்டும்.
இப்படி ஒரு தொழிலா.! வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.! இது தெரியாம போச்சே..
முதலீடு:
இந்த தொழிலுக்கு தள்ளுவண்டி மற்றும் தர்பூசணி வாங்குவதற்கு 5000 ரூபாய் தேவைப்படும். ஆனால் நீங்கள் தினமும் தர்பூசணி வாங்க வேண்டியிருக்கும். அதற்கான தொகை தேவைப்படும். எடுத்துக்காட்டாக ஒரு நாளைக்கு 100 தர்பூசணி வாங்குகிறீர்கள் என்றால் 2000 ரூபாய் தேவைப்படும். முக்கியமாக நீங்கள் தர்பூசணியை மொத்த வியாபாரிகளிடம் வாங்க வேண்டும். அப்போது தான் தர்பூசணியின் விலை குறைவாக இருக்கும்.
வருமானம்:
நீங்கள் ஒரு நாளைக்கு 50 தர்பூசணி விற்பனை செய்கிறீர்கள் என்றால் ஒரு தர்பூசணியில் விலை 30 என்றால் 50 தர்பூசணியை விற்பனை செய்தால் 1500 ரூபாய் கிடைக்கும்.
தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |