whatsapp மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி..!

Advertisement

வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க எளிய வழி – Business Ideas for Whatsapp in Tamil

புதிதாக தொழில் செய்ய நினைக்கும் அனைவருக்கும் பொதுநலம்.காம்-யின் அன்பான வணக்கங்கள். நமது www.pothunalam.com-யில் பலவகையான Business Ideas-ஐ பதிவு செய்து வருகின்றோம் அந்த வகையில் இந்த பதிவில் WhatsApp மூலம் பணம் சம்பாதிக்க சில தகவல்களை பதிவு செய்துள்ளோம் அவை தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ட்ரை செய்து பாருங்கள். சரி வாங்க Whatsapp செயலி மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல்:

வாட்ஸ்அப்பில் அஃப்பிலேட் மார்கெட்டிங் (Affilate Marketing) வழியாக எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்து பார்க்கலாம். இதன் மூலம் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் இணையதளம் மூலம் பணம்சம்பாதிக்கலாம். இதில் அமேசான் உள்ளிட்ட தளங்கள் 10 சதவீதம் வரை கமிஷனை வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

WhatsApp மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க தூண்டும் ஒரு முறையே இந்த Affiliate Marketing முறைமை ஆகும். இது நாம் வீட்டில் இருந்தே Online மூலம் பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் முறைமை ஆகும்.

இவற்றினை செய்வதற்கு நீங்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் உங்களுக்கு கடை ஒன்று இருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஒருவரிடம் உள்ள பொருளை அந்த பொருள் தேவைப்படும் வாடிக்கையாளருக்கு பெற்றுகொடுக்க ஒரு தரகராக செயல்படுவதாகும். இதனையே Affiliate Marketing என்று குறிப்பிடுகின்றோம்.

இவ்வாறு பொருட்களை விற்பனையாளரிடம் இருந்து வாடிக்கையாளருக்கு கைமாற்றுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு சிறந்த ஊடகமே WhatsApp ஆகும். அது எப்படி என்று பார்க்கலாம்.

நீங்கள் Affiliate Marketing சேவைகளை வழங்கும் அநேகமான Online Shopping வழங்குனர்களை இணையத்தில் காணலாம்.

நாம் அந்த பொருட்களை WhatsApp Group ஒன்றினை ஆரம்பித்து அவற்றில் Affiliate மூலம் வழங்கப்பட்ட பொருட்களை பதிவு செய்யலாம். அந்த குரூப்பில் உள்ளவர்கள் அந்த பொருட்களை கொள்வனவு செய்யும் போது எமக்கு அவற்றிற்கான Commission வந்து விடும். ஒவ்வொரு விற்பனையிலும் உங்களுக்கு நல்ல பணம் கிடைக்கும்.

சைடு பிசினஸில் சம்பாதிக்க சில எளிய வழிகள்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement