லாபம் தரக்கூடிய தொழில் இதுவும் ஒன்றா..! இந்த தொழில் வருமானம் மட்டுமே 30,000 ரூபாயாம்..!

Advertisement

Wholesale Dress Business 

உங்களுக்கு சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தற்போது வரை அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது அனைவருக்கும் அத்தியாவசியமாக கருதப்படும் டிரஸ் கடை தொழிலை தான் பார்க்கபோகிறோம். ஆடை என்பது நாம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக இருந்தாலும் கூட அதை நாம் அனைவரும் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியாக தான் அணிந்து கொள்கிறோம். அதுமட்டும் இல்லாமல் இந்த தொழில் நாம் நிறைய முறைகளில் வருமானம் பெறலாம். அத்தகைய வகைகளில் ஒன்றாக Wholesale Dress Business  தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

  உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

துணி மொத்த வியாபாரம்:

துணி மொத்த வியாபாரம்

மனிதர்கள் அனைவருக்கும் உண்ணும் உணவு, உடுத்தும் உடை என இந்த இரண்டும் மிகவும் முக்கியமான ஒன்று. இதில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும் கூட நம்முடைய வாழ்க்கை ஆனது முழுமையாக பூர்த்தி அடையாது.

இவ்வாறு இருக்கையில் சுயதொழிலை பொறுத்தவரை அந்த பொருள் பயன்பாட்டிற்கு அதிகமாக தேவைப்படுகிறதோ அதுவே டிமாண்ட் உள்ள தொழிலாக மாறிவிடுகிறது. மேலும் அழிவில்லாத தொழிலாகவும் மாறிவிடுகிறது. ஆகவே இன்று மொத்த துணி வியாபாரம் எப்படி செய்வது என்று பார்க்காலாம்.

தேவைப்படும் மூலப்பொருள்:

  • புடவை
  • வேஷ்டி
  • சட்டை
  • பிளவுஸ்
  • சுடிதார்
  • பட்டுப்பாவாடை
  • நைட்டி
  • பேண்ட் சட்டை
  • கைலி
  • துண்டு

மேலே சொல்லப்பட்டுள்ள மூலப்பொருட்கள் இல்லாமல் இதர மற்ற சில மூலப்பொருட்களும் தேவைப்படும்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் 2 மணிநேரம் வேலை செய்தாலே 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் 

முதலீடு:

இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு தோராயமாக முதலில் முதலீடாக 1,00,000 ரூபாய் வைத்து கொள்ள வேண்டும். பின்பு அந்த தொழிலை செய்வதற்கு ஒரு குடோன் அல்லது கடை தேவைப்படுகிறது.

ஜவுளி வியாபாரம் செய்வது எப்படி..?

ஜவுளி வியாபாரம் செய்வது எப்படி

ஜவுளி மொத்த வியாபாரத்தை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. அதாவது முதலில் உங்களுடைய ஊர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளிலும் ஆர்டர் எடுத்து கொள்ள வேண்டும்.

அதன் பின்பு உங்களுக்கு தேவைப்படும் துணி ரகங்களை Wholesale முறையில் வாங்கி கொள்ள வேண்டும். இப்போது ஆர்டர் எடுத்து கடைகளில் துணி ரகங்களை சரியாக டெலிவரி செய்து விடுங்கள்.

ஆனால் ஆரம்ப காலத்தில் எடுத்தவுடன் உங்களுக்கு அதிகப்படியான ஆர்டர் கிடைக்காது. அதனால் குறிப்பிட்ட காலங்களுக்கு ஆர்டர் எடுக்கும் கடைகளுக்கு சில தள்ளுபடியினை கொடுத்து ஆர்டர் பெறுங்கள்.

வருமானம்:

இந்த தொழிலை பொறுத்தவரை வருமானம் என்பது நீங்கள் கடைகளுக்கு துணி ரகங்களை டெலிவரி செய்யும் முறையினை பொறுத்து தான் அமையும். ஆனால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 30,000 ரூபாய் வருமானம் பெறலாம்.

அதேபோல் லாபமும் நீங்கள் விற்கும் துணியின் மாடல் மற்றும் ரகங்களை பொறுத்து அமையும்.

ஒரே ஒரு மெஷின் வாங்கினால் மட்டும் போதும் மாதம் 1,32,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement