இந்த தொழிலை மட்டும் செய்தால் வாரம் 1,19,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Wood Pellet Manufacturing Business in Tamil

Wood Pellet Manufacturing Business in Tamil

பொதுவாக அனைவருக்குமே பணம் சம்பாதித்து சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக ஒரு சிலர் வேலைக்கு செல்வார்கள். ஆனாலும் அவர்களுக்கு தேவையான பணம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது ஏதாவது ஒரு வகையில் செலவாகிவிடும். அதனால் அவர்கள் ஏதாவது ஒரு சுயதொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன சுயதொழில் தொடங்குவது என்பதில் தான் அவர்களுக்கு குழப்பமாக இருக்கும்.

அதனால் தான் அவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Wood Pellet தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் சேமிப்பை அதிகரித்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Wood Pellet Manufacturing Business Plan in Tamil:

Wood Pellet Manufacturing Business Plan in Tamil

இன்றைய கால கட்டத்தில் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்து கொண்டே போகின்றது என்பதால் இதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் Rocket Stove-வின் மீது பெரும்பாலான மக்களின் பார்வை திரும்பி உள்ளது.

அதனால் இந்த Rocket Stove எரிய உதவும் முக்கிய மூலப்பொருளான Wood Pellets-யை நீங்கள் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவைப்படும் முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மரத்தூள், காய்ந்த மாட்டுச்சாணம், Wood Pellet Making Machine, அட்டைப்பெட்டிகள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Wood Pellet Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 55,000 ரூபாய் ஆகும். இந்த மெஷினை பயன்படுத்தி ஒரு மணி நேரத்துக்கு நீங்கள் 80 கிலோ Wood Pellets-களை தயாரித்து விடலாம்.

அதனால் ஒரு நாளைக்கு 1 டன் Wood Pellets-களை தயாரித்து விடலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே வாரத்தில் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய அருமையான தொழில்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரிக்கும் Wood Pellets-களை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதை தவிர Factory License மற்றும் Trade mark License ஆகியவை தேவைப்படும்.

இந்த தொழில் தொடங்குவதற்கு  நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Wood Pellet Making Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள மரத்தூள் மற்றும் காய்ந்த மாட்டுச்சாணம் ஆகியவற்றை Wood Pellet Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான Wood Pellets-களை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை நாம் வாங்கி வைத்துள்ள அட்டைப்பெட்டிகளில் Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழில் செய்வதற்கு 1 ரூபாய் கூட முதலீடு தேவையில்லை ஆனால் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Wood Pellets-களை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தோராயமாக 1 கிலோ Wood Pellets-ன் விலை 17 ரூபாய் எனில் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 1 டன் Wood Pellets-களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 17,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு வாரத்திற்கு 1,19,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் Wood Pellets-களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே ஒரு கிலோ விற்றாலே போதும் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil