Work From Home Business Ideas in Tamil
ஹாய் ப்ரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் பலவகையான பதிவுகளை பதிவு செய்து வருகின்றோம். அந்த பதிவுகளில் ஒன்று தான் பிசினஸ் ஐடியா.. அதாவது சொந்தகமாக தொழில் செய்ய விரும்பும் அனைவருக்குமே நமது பொதுநலம்.காம் பதிவில் பலவகையான பிசினஸ் ஐடியாக்களை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருந்த பாடிய வேலை செய்து கை நிறைய பணம் சம்பாதிக்க சில தொழில் வாய்ப்புகளை பற்றி பகிர உள்ளோம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால் கீழ் கூறப்பட்டுள்ள business ஐடியாவில் தங்களுக்கு பிடித்த ஐடியாவை தேர்வு செய்து வீட்டில் இருந்தபடியே சம்பாதியுங்கள்.
Home Made Tiffin Service:
நீங்கள் ஒரு இல்லாதாரியாக இருக்கிறீர்.. வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்ய முடியாத ஒரு சூழ்நிலை. ஆனால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உங்களால் முடித்த உதவியை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் என்றால். இந்த Home Made Tiffin Service உங்களுக்கு ஒரு சிறந்த தொழிலாகும். இப்போது உள்ள கால கட்டத்தில் ஆண் பெண் இருவருமே வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். ஆகவே அவர்கள் உணவு முறையில் அதிகம் அக்கறைசெலுத்த நேரம் இல்லாத காரணத்தால். கடைகளில் வாங்கி சாப்பிடுகின்றன. ஆகவே நீங்கள் ஆரோக்கியமான முறையில் வீட்டில் இருந்தபடியே சமைத்து கொடுத்தால். உங்கள் வியாபாரம் நன்றாக ஓடும். இருப்பினும் முதலில் ஆர்டர் பெறுவதுதான் கொஞ்சம் சிரமாக இருக்கும். தினமும் 10 நபர்களிடம் ஆர்டர் பெற்றுவிட்டிர்கள் என்றாலே போதும். உங்களுக்கு இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
Home Made Herbal Products:
உங்களுக்கு சமையல் செய்வதில் அவ்வளவு பெரிதாக இன்ரேட்ஸ் இல்லை என்றாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போல்லாம் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சார் அவர்கள் பயன்படுத்தும் பொருள்களில் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல். முழுக்க முழுக்க ஹெர்பல் ப்ராடக்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஆகவே நாங்க வீட்டிலேயே மூலிகை பொருட்களை பயன்படுத்தி கூந்தல் எண்ணெய், குளியல் பவுடர், குளியல் சோப்பு, ஷாம்பு, கிரீம், ஹெல்த் ட்ரிங் என்று தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒன்றை தயார் செய்து விற்பனை செய்யலாம். இத்தகைய பொருட்கள் அனைத்திற்குமே மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. ஆகவே தயக்கம் இல்லாமல் நீங்கள் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்து நல்ல வருமானம் பெறலாம்.
இட்லி மாவு தயார் செய்து விற்பனை செய்யலாம்:
பெண்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழில் என்று இதனை சொல்லலாம். இப்போல்லாம் வீட்டில் இட்லி மாவு அரைக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. காரணம் வீட்டில் இருக்கும் ஆண், பெண் இருவருமே வேலைக்கு செல்வதுதான். இதன் காரணமாக பெண்களுக்கு இட்லி மாவு அரைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. இதன் காரணமாக நீங்கள் இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.
இந்த இட்லி மாவு தயாரிப்பு தொழில் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → இட்லி மாவு பாக்கெட் வியாபாரம்..!
மசாலா பொடி தயார் செய்து விற்பனை செய்யலாம்:
பெரும்பாலோனோருக்கு வீட்டில் மசாலா பொடி சரியாக அரைக்க தெரியாது. அதனால் கடைகளில் விற்கப்படும் மசாலா பொருளை வாங்கி சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இருப்பினும் இப்பொழுது கடைகளில் விற்கப்படும் மசாலா பொருட்கள் அவ்வளவு சுவையாக இருப்பதில்லை. ஆகவே உங்களுக்கு மசாலா பொருட்களை நல்ல பக்குவமாக அரைக்க தெரியும் என்றால். நீங்கள் மசாலா பொருட்களை அரைத்து விற்பனை செய்யலாம். அதாவது சாம்பார் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், குழம்பு மசாலா தூள் இது போன்று பலவகையான மசாலா பொடிகளை தயார் செய்து சந்தைகளில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல வருமானமும் பெறமுடியும்.
ஊறுகாய் தயாரிப்பு:
ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வது ஒரு சிறந்த தொழில் தான். ஊறுகாயை விருப்பதவர்கள் அதிகபட்சம் யாரும் இருக்க முடியாது. சாப்பிடும் உணவிற்கு சைடிஷ் எதுவும் இல்லையென்றாலும் கூட. உடனே ஊறுகாயை வாங்கி சைடிஷாக தொட்டு கொள்வார்கள். ஆகவே நீங்கள் ஊறுகாய் தயாரித்து சிறிய பாக்கெட் முதல் பாட்டில்களில் அடைத்து கூட நீங்கள் சந்தையில் விற்பனை செய்யலாம். இருப்பினும் பக்குவம் நன்றாக இருக்க வேண்டும். உங்களது பக்குவம் மக்களுக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டாள் பிறகு உங்களிடமே ஊறுகாய் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |