அதிக சத்துகள் மற்றும் வருமானம் உள்ள சாத்துக்குடி சாகுபடி..!

Advertisement

சாத்துக்குடி சாகுபடி செய்து நல்ல லாபம் பெறுங்கள்:-

கிராமத்தில் இருப்பவர்கள் இந்த தொழிலை செய்தால் நல்ல இலாபம் காணமுடியும். சாத்துக்குடி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். சிலருக்கு அதை எப்படி பயிரிட்டு அறுவடை செய்வதென்று தெரிவதில்லை. அதனால் சாத்துக்குடி சாகுபடி செய்ய யாரும் முன்வருவதில்லை. இந்த பதிவு சாத்துக்குடி சாகுபடி செய்ய நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பதிவில் உரங்கள் பருவகாலம் ஆகியவற்றை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இரகங்கள்:-

ரங்காபுரி மற்றும் நாட்டு வகைகள் ஆகியவை சாத்துக்குடி சாகுபடி முறைக்கு ஏற்றவை.

பருவகாலம்:-

ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சாத்துக்குடி சாகுபடி செய்யலாம்.

மண்:-

தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரளைமண் நிலங்கள் சாத்துக்குடி சாகுபடி முறைக்கு ஏற்றவை. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

நிலம் தயாரிப்பு:-

 • சாத்துக்குடி சாகுபடி முறைக்கு ஏற்ற நிலத்தை நன்கு உழுது 20 அடிக்கு 20 அடி இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழத்தில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். குழியில் ஒரு கூடை எரு மற்றும் மேல்மண் ஆகியவற்றைக் கலந்து இட்டு 15 நாட்கள் ஆறப்போட வேண்டும். குருத்து ஒட்டு செய்த செடிகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
 • நாற்றின் ஒட்டுப்பகுதி தரைக்கு மேல் அரையடி உயரத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க நீளமானக் குச்சியை ஊன்றி செடியுடன் இணைத்துக் கட்ட வேண்டும்.

நீர் நிர்வாகம்:-

நட்டவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். செடியின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

உரங்கள்:-

இயற்கை உரமாக ஏக்கருக்கு  ஒரு டன் எரு, 300 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவை தலா 20 கிலோ இவற்றை ஒன்றாகக் கலந்து, ஆண்டுக்கு ஒரு முறை மழைக்காலத்துக்கு முன்பாகக் கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும்.

சாத்துக்குடி சாகுபடி – பாதுகாப்பு முறை:-

களை நிர்வாகம்:-

சாத்துக்குடி சாகுபடி பொறுத்தவரை செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மரத்தில் இடைஞ்சலாக இருக்கும் கிளைகளை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் களை அகற்ற வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறை:-

 • சாத்துக்குடி சாகுபடி பொறுத்தவரை நூற்புழுக்களின் தாக்குதல் இருந்தால் மரம் ஒன்றுக்கு சூடோமோனஸ் புளூரசன்ஸ் மருந்தை 20 கிராம் வீதம் மரத்திலிருந்து 50 செ.மீ தள்ளி 15 செ.மீ ஆழத்தில் இடவேண்டும்.
 • இலைச்சுருட்டுப் புழு தாக்குதல் காணப்பட்டால் பென்தியான் ஒரு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். வேப்பங்கொட்டைச்சாறு 6% அல்லது வேப்பெண்ணெய் 3% தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
 • சிற்றிலை நோய் காணப்பட்டால் 1% சிங்க் சல்பேட் மருந்தை, ஒரு மில்லி டீப்பாலுடன் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து புதிய தளிர்கள் விடும்போதும், பின்பு ஒரு மாதத்திற்குப் பிறகும், பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் தருணத்திலும் தெளிக்க வேண்டும்.

அறுவடை:-

 • சாத்துக்குடி சாகுபடி பொறுத்தவரை செடி நடவு செய்த 5-ம் ஆண்டில் பூவெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும்.
 • சாத்துக்குடியில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பூ எடுத்து, ஏப்ரல்-மே மாதங்களில் இடைப்பருவ மகசூலும் ஜூன்-ஜூலை மாதங்களில் பூ எடுத்து, செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் முழு மகசூலும் கிடைக்கும்.
 • ஒரு ஏக்கருக்கு 30 டன் சாத்துக்குடி பழங்கள் வரை மகசூலாக கிடைக்கும்.

சாத்துக்குடி பயன்கள் (Sweet Lemon Benefits) :-

 • உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் சத்துக்குடியில் அதிகம் அடங்கியிருக்கின்றது.
 • வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன.
 • சாத்துக்குடி மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன.
 • நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

                   கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

இது போன்ற விவசாயம் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள இந்த லின்க்கை க்ளிக் செய்து பாருங்கள்.  விவசாயம் சார்ந்த தகவல்கள் 
Advertisement