அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!

சாமந்தி பூ சாகுபடி

சாமந்தி பூ சாகுபடி ..!

samanthi poo valarpu murai in tamil: விவசாயிகள் ஒவ்வொரு சாகுபடியிலும், எந்த பயிராக இருந்தாலும் அவற்றை விதைத்து, பராமரித்து அவற்றை அறுவடை செய்து முடித்தாலும். நல்ல விலையை தேடி செல்வதே மிகவும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

எனவே விவசாயிகளுக்கு ஒரே வழி உடனே கையில் பணம் கிடைக்கும் மலர் பயிர்களை அதாவது சாமந்தி பூ சாகுபடி செய்வதே. இந்த மலர்கள் சந்தைக்குச் சென்றவுடன் பணம் கைக்கு வந்துவிடுகிறது.

மலர்களை பொறுத்தவரை சந்தையில் அதிக வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி உடனே விற்ற மலர்களுக்கான பணமும் கிடைத்துவிடும். எனவே சாகுபடியில் மலர் பயிரிடுவது மிகவும் சிறந்த முடிவாகும். இவற்றில் நாம் சாமந்தி பூ சாகுபடி செய்வதை பற்றி பார்ப்போம்.

இதையும் படிக்கவும்  அதிக லாபம் தரும் வாடாமல்லி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள் !!!

சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள்:

சாமந்தி பூ சாகுபடி முறைக்கு பல ரகங்கள் உள்ளன. கோ1 எம்.டி, யூ 1, 2 ஆகியவை மஞ்சள் நிற பூக்களை கொடுக்கும்.

கோ.2 கரும்பழுப்பு நிறத்தில் பூக்களை கொடுக்கும். சந்தைக்கு ஏற்றப்படி இவைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

சாகுபடிக்கு ஏற்ற மண்:

சாமந்தி பூ சாகுபடி முறைக்கு ஏற்ற மண் வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலம் ஏற்றதல்ல.

நீர்த் தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு ஏற்றவை.

மண்ணின் காரா அமில தன்மை:

மண்ணின் கார அமிலத்தன்மை சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்கவேண்டும்.

சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை:

சாமந்தி ஒரு வெப்ப, மிதவெப்ப மண்டலப் பயிராகும். செடிகள் நீண்ட இரவு, குறுகிய பகல் கொண்ட பருவங்களில் பூக்கும்.

நிலம் நிர்வாகம்:

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்திய பிறகு கடைசி உழவின்போது ஏக்கருக்கு 25 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்கிவிட வேண்டும்.

நிலத்தை நன்கு சமன்படுத்திய பிறகு சுமார் ஒரு அடி இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

நடவு முறை:

சேர் பிடித்த இளம் தளிர்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் வரிசையாக செடிக்குச் செடி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு நடவேண்டும்.

நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறு வேர்ப்பாகம் அனைத்தும் மறையும்படி நடவேண்டும்.

இதையும் படிக்கவும்  ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

ஏற்ற பருவ காலம்:

சாமந்தி பூ சாகுபடி (samanthi poo sagupadi) பொறுத்தவரை ஜூன் – ஜூலை மாதங்களில் நடவேண்டும்.

பருவம் தவறி நடும்போது செடிகளில் பூக்கும் திறன் மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும்.

நடும் முன் வேர்பிடித்த தளிர்களை, எமிசான் கரைசலில் (ஒரு கிராம் ஒரு லிட்டர்) தண்ணீர் கலந்த கலவையில் முக்கி நடவேண்டும்.

ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 1,11,000 சாமந்திச் செடிகள் தேவைப்படும்.

உரமிடுதல்:

அடியுரமாக ஏக்கருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும்.

பின்னர் செடி நடும் முன்னர் 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை, பார்களின் அடிப்பகுதியில் இட்டு, லேசாகக் கிளறி மண்ணினுள் மூடவேண்டும்.

மேல் உரமாக 60 கிலோ தழைச்சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரத்தை நட்ட 30 நாள்கள் கழித்து இடவேண்டும்.

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்:

சாமந்தி பூ சாகுபடி (samanthi poo sagupadi) பொறுத்தவரை பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட, 30,45 மற்றும் 60ஆவது நாட்களில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் கரைசலைத் தெளிக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்:

சாமந்தி பூ சாகுபடி பொறுத்தவரை நடுவதற்கு முன்னர் ஒரு தண்ணீர் நட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்னர்  வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

களை நிர்வாகம்:

சாமந்தி பூ சாகுபடி (samanthi poo sagupadi) பொறுத்தவரை தேவைப்படும்போது களை எடுக்கவேண்டும். செடிகள் நட்ட ஆறு வாரங்களுக்குள் நுனிக்கிளையினை ஒடித்து பக்கக் கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும்.

சாமந்தி பூ சாகுபடி – பயிர் பாதுகாப்பு:

இலைப்பேன் மற்றும் அசுவினி புழு தாக்குதல்கள்:

சாமந்தி பூ செடி வளர்ப்பு முறையில் இலைப்பேன் மற்றும் அசுவினி புழு இவைகள் இலைகளில் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். கட்டுப்படுத்த மானோகுரோட்டாபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வேர் வாடல் நோய்:

சாமந்தி பூ செடி வளர்ப்பு முறையில் செடிகள் திடீரென வாடி காய்ந்து விடும். தாக்கப்பட்ட செடிகளின் வேர்கள் அழுகி காணப்படும். கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கரைத்து செடிகளைச் சுற்றி ஊற்றவேண்டும்.

இலைப்புள்ளி நோய்:

சாமந்தி பூ செடி வளர்ப்பு (samanthi poo sagupadi) முறையில் தாக்கப்பட்ட இலைகளில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி, இலைகள் வெளுத்துவிடும். இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படும். கட்டுப்படுத்த மேன்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

அறுவடை:

சாமந்தி பூ செடி வளர்ப்பு முறையில் நட்ட 3 மாதங்களில் சாமந்தி அறுவடைக்கு வரும், பூக்களை சூரிய வெப்பத்திற்கு முன்னர் காலை வேளைகளில் பறிக்கவேண்டும்.

மகசூல்:

சாமந்தி பூ செடி வளர்ப்பு (samanthi poo sagupadi) முறையில் ஏக்கருக்கு நடவுப் பயிரில் 20 டன் மலர்கள் கிடைக்கும்.

இதையும் படிக்கவியம்  மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil