கொத்தமல்லி சாகுபடி செய்து 45 நாளில் 30 ஆயிரம் வரை லாபம் பெறலாம்..!

Advertisement

கொத்தமல்லி சாகுபடி முறை..!

கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation): இந்த கொத்தமல்லி பல்வேறு தன்மையுடைய மண் வகைகளிலும், வேறுபட்ட வானிலைகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதில் நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு நிலம் கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) செய்ய மிகவும் உகந்தது. இதற்கு மண்ணின் அமில கார நிலை 6 – 8 வரை இருக்க வேண்டும்.

மல்லி ஓரளவு களர் உவர் தாங்கி வளரக்கூடியது, காற்றின் சராசரி வெப்பநிலை 20 – 25 செல்சியஸ் இருத்தல் பயிரின் வளர்ச்சிக்கு உகந்தது. மல்லி பெரும்பாலும் மானாவாரிப் பயிராக கரிசல் மண் நிலத்தில் பயிரிடுவதால் மழை அளவு குறைவாகவும், சீராகவும் இல்லாத காலங்களில் இதன் விளைச்சல் குறைவாகவே உள்ளது. இவ்வாறு நீர் பற்றாக்குறை இருக்கும் காலங்களில் வறட்சியைத் தாங்கி விளைச்சலை அதிகரிக்க விதை நேர்த்தி முறை சிறந்தது.

முளைக்கீரையில் இத்தனை பயன்களா??? பயிரிடும் முறை மற்றும் பயன்கள்.

அரை ஏக்கரில் கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation):

 • நிலத்தில் கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர், பாத்திகள் அமைக்க வேண்டும்.
 • பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதை தெளித்து மூடவேண்டும்.
 • பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் கொத்தமல்லி முளைத்து விடும்.
 • நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும்.
 • மல்லிச்செடி முளைத்த 20-ஆம் நாள் 17:17:17 என்ற உரம், ஏக்கருக்கு 150 கிலோ தெளிக்க வேண்டும்.
 • இலை வழி உரமாக 19:19:19 என்ற உரம் 30-வது நாளில் தெளிக்க வேண்டும்.
 • விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலையாகவும் இருக்கும்.
 • பயிர் பாதுபாப்புக்கு பூச்சி கொள்ளி மருந்தை மிக கவனமாக பயன்ப்படுத்த வேண்டும்.
 • முறையாக பயிரிட்டால் அரை ஏக்கருக்கு 3 ஆயிரம் கிலோ கொத்தமல்லித் தழை கிடைக்கும்.
 • ஆண்டு முழுவதும் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம்.
 • அரை ஏக்கருக்கு 2 லட்சம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்.
 • கொத்தமல்லி கீரை 45 நாட்களில் அறுவடைக்கு வரும்.
 • நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும் போது விலை குறைந்துவிடும்.
 • ஆனால் 45 நாள் முதல் 50 நாட்கள் வரை அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும்.
 • நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும்.

கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) செய்யும் மாதங்கள்:

குளிர்கால கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) டிசம்பரில் தொடங்கலாம். மாசி, பங்குனியில் கோடைக்கால கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) செய்ய தொடங்கலாம். கரிசல் மண் நிலங்களில் பாசன பயிராக கொத்தமல்லி சாகுபடி செய்யலாம்.

கோழி எரு:

கொத்தமல்லி பயிரிடும் முறை: கோழி எருவை அடி உரமாக போட்டால் கொத்தமல்லி சாகுபடிக்கு (coriander cultivation) நல்ல விளைச்சல் கிடைக்கும். கோழி எரு போடும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கோழி எருதில் காரத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால் காற்றோட்டம் உள்ள இடத்தில் குவியலாக கொட்டி 45 நாட்களுக்கு பிறகு, கோழி எருவை அடி உரமாக பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி சாகுபடி
கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) 45 நாட்களில் வருமானம்:

 • மணல் கலந்த செம்மண் பூமியில் கொத்தமல்லி (coriander cultivation) நன்றாக விளையும்.
 • இதன் வயது 45 நாட்கள், அரை ஏக்கருக்கு இரண்டு டன் தொழுவுரம் அல்லது கோழி எரு 5 டன் அடியுரமாக இட்டு இரண்டு முறை உழ வேண்டும்.
 • மேலும் இடவசதிக்கு ஏற்ப சதுர பாத்திகளை அமைக்க வேண்டும்.
 • பாத்திகளில் சிறுசிறு கட்டிகள் மற்றும் கற்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
 • மண் சமமாக்கி விதை விதைக்க வேண்டும்.
 • அரை ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும், விதைக்கும் போது ஒரிடத்தில் அதிகமாகவும் ஒரிடத்தில் குறைவாகவும் விதைகள் விழுந்தால், விளைச்சல் சீராக இருக்காது. மற்றும் மண் நனையும் அளவுக்கு மட்டும் தான் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

Coriander Cultivation – வாரம் ஒரு முறை பாசனம்:

 • விதைத்த 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
 • அதன் பிறகு வரத்தில் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
 • விதைத்த 8-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்குள் முளைக்க தொடங்கும்.
 • 20 நாளில் களை எடுத்து. பயிர் வளர்ச்சிக்கு 25 கிலோ தழை – மணி – சாம்பல் சத்துக் கொண்ட உரத்தை பாசனத்தில் கலந்து விடவும்.
 • 30-ம் நாள் செடிகள் தளதளவென்று வளர்ந்து நிற்கும்.
 • இதன் வாசமும், நிறமும் பூச்சிகளை ஈர்க்கும். இதனை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற கணக்கில் தெளிக்க வேண்டும்.

கொத்தமல்லி சாகுபடி நிலை (Coriander Cultivation):

 • 45-ம் நாட்களில் செடிகள் பாத்திகள் தெரியாத அளவில் வளர்ந்து நிக்கும்.
 • அதுதான் அறுவடைக்கு ஏற்ற தருனமாகும். செடிகளை சரியான ஈரப்பதம் இருக்கும் நேரத்தில் செடிகளை வேருடன் பிடிங்கி இரண்டு கையளவு செடிகளை ஒரு கட்டுகளாக கட்டி விற்பனை செய்ய தொடங்கலாம்.

அரை ஏக்கரில் 30 ஆயிரம் லாபம் பெறலாம்:

அரை ஏக்கரில் 3 ஆயிரத்து 500 கிலோ மகசூல் கிடைக்கும் என்று கணக்கு போட்டு, கிலோ 12 ரூபாய் என்று விலை பேசி வியாபாரிகளிடம்  விக்கலாம். அதன் மூலம் 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்த செலவு 12 ஆயிரம் போக 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் அதுவும் 45 நாட்களில்.

உளுந்து சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம்..!

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement