ஆடியில் மக்காச்சோளம் சாகுபடி!!!

மக்காசோளம் சாகுபடி

மக்காச்சோளம் சாகுபடி முறை..!

ஆடிமாதத்திற்கு சிறந்த சாகுபடி என்றால் மக்காச்சோளம் சாகுபடி தான், இந்த சாகுபடியை மற்ற சாகுபடியுடன் ஒப்பிடுகையில் மக்காச்சோளம் சாகுபடி மிகவும் குறைந்த வேலையுடனும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறைவு. எனவே இந்தியாவில் அதிகமான அளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் அதிக விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

வாழையில் இவ்வளவு வருமானமா? பயிரிடும் முறை விளக்கத்துடன்.

சரி இப்போது மக்காசோளம் சாகுபடி முறை (baby corn cultivation) பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

தொழு உரம் இடுதல்:

மக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 4 பாக்கெட் (800 கிராம்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.

நிலம் நிர்வாகம்:

மக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை முதலில் நிலத்தை ட்ராக்ட்டர் மூலம் சட்டிக் கலப்பையால் ஒருமுறை உழவு செய்யவும்.

பின்பு தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பைக் கொண்டு இருமுறை நன்கு உழவு செய்யவும். 60 செ.மீ இடைவெளியில் 6 மீட்டர் நீளத்தில் பார்கள் அமைக்கவும். பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்கவும். செலவினைக் குறைக்க ட்ராக்ட்டர் மூலம் பார் அமைக்கும் கருவிகளை பயன்படுத்தலாம்.

பருவ காலம்:

மக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை, தமிழகத்தில் ஆடி மற்றும் புரட்டாசிப் மதங்களிலும், இறைவைப் பயிராக தை மற்றும் சித்திரைப் மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.

விதையளவு:

மக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை நல்ல தரமான விதைகளை நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

விதையளவு ஏக்கருக்கு 8 கிலோ (ரகம்) மற்றும் 6 கிலோ (வீரிய ஒட்டு ரகம்) என்ற அளவில் பின்பற்றவும்.

இடைவெளி:

மக்காசோளம் சாகுபடி ( sweet corn cultivation) பொறுத்தவரை ஒரு செடிக்கும், மற்றொரு செடிக்கும் இடையே 20 செ.மீ (ரகம்) 25 செ.மீ (வீரிய ஒட்டு ரகம்) இடைவெளியும், வரிசைக்கு வரிசை 60 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

விதைத்தல்:

மக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை  கரிசல் மண்ணில் விதையை ஆழமாக விதைக்கக் கூடாது. குறைந்த ஆழத்தில் அதாவது 2 செ.மீட்டரில் விதைக்க வேண்டும்.

செம்மண் பாங்கான பூமியில் விதையை சற்று ஆழமாக விதைப்பு செய்ய வேண்டும். அதாவது 3 செ.மீட்டரிலிருந்து 4 செ.மீட்டரில் விதைக்க வேண்டும்.

பயிர் எண்ணிக்கை பராமரித்தல்:

மக்காசோளம் சாகுபடி (sweet corn cultivation) பொறுத்தவரை பயிரின் விளைச்சலை நிர்ணகிப்பதில் செடிகளின் எண்ணிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

விதைப்பு செய்த 7-8 ஆம் நாளில் நல்ல, தரமான நாற்றுகளை விட்டுவிட்டு தேவையற்ற மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும்.

வெதுவெதுப்பான சுடுநீரில் மக்காச்சோள விதைகளை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி பின்னர் விடுபட்ட இடத்தில் விதைப்பு செய்தால் விதைகள் நன்கு முளைப்பதோடு மட்டுமல்லாமல் குருத்துப்பூச்சி தாக்குதலும் குறையும்.

உரமிடுதல்:

மக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும்.

இல்லையெனில், பொதுப் பரிந்துரையான 54:24:20 கிலோ ஏக்கர் (117:150:33 கிலோ ஏக்கர் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) அளவில் ரகங்களுக்கும், 100:30:30 கிலோ ஏக்கர் (217:188:50 கிலோ ஏக்கர் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) அளவில் வீரிய ஒட்டு ரகங்களுக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்க வேண்டும்.

அடியுரமாக பாதியளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் பாதியளவு சாம்பல் சத்துக்களை இட வேண்டும்.

மீதமுள்ள தழை மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டு முறையே, அதாவது ஆறாவது கணுநிலை மற்றும் ஒன்பதாவது கணு நிலையில் இட வேண்டும்.

ஏக்கருக்கு 3 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நுண்ணூட்டக் கலவையை 30 கிலோ தொழு உரத்துடன் தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைத்து வயலில் இட வேண்டும்.

களை நிர்வாகம்:

மக்காசோளம் சாகுபடி (sweet corn cultivation) பொறுத்தவரை களை முளைக்கும் முன் பயன்படுத்தப்படும் அட்ரசின் (அட்ராப்) என்னும் களைக் கொல்லியை ஏக்கருக்கு 500 கிராமை, 200 லிட்டர் தண்ணீர் கலந்து விசிறி நாசில்லினைப் பயன்படுத்தி விதைப்பு செய்த மூன்றாம் நாளில் தெளிக்க வேண்டும். அல்லது ஊடுபயிராக பயிறுவகை பயிர்களை பயிர் செய்தால் பெண்டிமெத்தலின் என்ற களைக் கொல்லியை 1.2 லிட்டருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து விதைப்பு செய்த மூன்றாவது நாள் தெளிக்க வேண்டும்.

மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்போதே களைக் கொல்லியைப் பயன்படுத்தவும். பின்னர் 30-லிருந்து 35 நாளில் களை எடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்:

மக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை பயிர் அதிக வறட்சியையும், அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.

அறுவடை:

மக்காசோளம் சாகுபடி (sweet corn cultivation) பொறுத்தவரை முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதலும், மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும்.

கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்து விடும். விதைகள் கடினமாகவும்,காய்ந்தும் காணப்படும் இப்பருவம் அறுவடைக்கேற்றது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.