பச்சை மிளகாய் சாகுபடி முறை..!
பச்சை மிளகாய் பொதுவாக அன்றாட உணவுகளில் அதிகளவு பயன்படக்கூடிய ஒரு பொருள். இந்த பச்சை மிளகாய் சைவம் மற்றும் அசைவ உணவுகள் என்று இரண்டுக்கும் அதிகளவு பயன்படக்கூடிய பயிர். எனவே நாம் இயற்கை விவசாயத்தில் பயிரிடும்போது அதிக வருமானம் பெற இயலும். குறிப்பாக பச்சை மிளகாய் சாகுபடி பொறுத்தவரை நன்கு விவசாயம் தெரிந்தவராக இருந்தால் அனைத்து காலகட்டத்திலும் விவசாயம் செய்ய முடியும்.
சரி வாங்க இப்போது பச்சை மிளகாய் சாகுபடி பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
நிலம்:
மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் பச்சை மிளகாய் முக்கியப் பயிராகும். ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் மானாவாரியாக சாகுபடியாகிறது. இதில் சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம்.
இருப்பினும் நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் சாகுபடி செய்ய ஏற்றது. பச்சை மிளகாய் சாகுபடியில் ஆரம்ப கால விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியனவற்றில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவையும் முக்கியப் பிரச்னைகளாகும்.
சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி முறை..!
இரகங்கள்:
பச்சை மிளகாய் இரகங்களைப் பொருத்தவரை கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பச்சை மிளகாய் சாகுபடி செய்ய ஏற்ற இரகங்களாகும்.
பருவகாலங்கள்:
ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள். ஆனால் அனுபவம் வாய்ந்த விவசாயிகள், பச்சை மிளகாய் எல்லா காலங்களிலும் உறுதி செய்ய ஏற்றவை என்று கூறுகிறார்கள், மண் நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாடு கொண்ட 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் மிளகாய்க்கு ஏற்றது.
விதையளவு:
ஏக்கருக்கு விதை அளவு 400 கிராம் போதுமானதாகும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிர் உரத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைத்த பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தூவ வேண்டும்.
அடியுரம்:
அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் ஆகியன இட வேண்டும்.
நிலம் தயாரிப்பு:
நன்கு பொடிபட உழுது தயார் செய்யப்பட்ட நிலங்களில் புழுதியில் விதைகளை கைவிதைப்பாக, வரிசையில் பருவ மழைக்கு முன்னர் விதைக்க வேண்டும்.
மேலும், நடவு சாகுபடி முறையில் சிபாரிசு செய்யப்படும் உர அளவில் பாதி மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும்.
களை நிர்வாகம்:
பயிர் முளைத்து 45 ஆம் நாள் களை எடுக்கும்போது மேலுரமாக 43 கிலோ யூரியா இட வேண்டும்.
மேலுரம் இடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும்.
பயிர் முளைத்த 30 ஆம் நாள் களை எடுக்க வேண்டும்.
பச்சை மிளகாய் சாகுபடி முறையில் பயிர் பாதுகாப்புக்கு:
பூக்கள் கொட்டுவதைக் குறைக்கவும், பிஞ்சுகள் உதிர்வதைத் தவிர்க்கவும், பச்சை மிளகாய் சாகுபடி செய்த 90 மற்றும் 120 ஆம் நாளில் பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் நீருக்கு 1 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மேல் படும்படி தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்க மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருக்கக் கூடாது. நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.
களை நிர்வாகத்தைப் பொருத்தவரை மிளகாய் விதை விதைத்து முதல் மழை கிடைத்தவுடன் ஏக்கருக்கு 1.0 லிட்டர் ப்ளுக்ளோரலின் அல்லது 3.3 லிட்டர் பெண்டிமித்தலின் ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றை 500 லிட்டர் நீரில் கலந்து முளைக்கும் முன் இடவேண்டிய களைக்கொல்லியாகத் தெளிக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தில் இன்று குடைமிளகாய் சாகுபடி முறை..!
பூச்சிகளின் வகைகள்:-
இலைப்பேன்:
இவை இலையைச் சுருட்டி சாற்றை உறிஞ்சி விடும். இவற்றை கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. தெளிக்கலாம்.
அசுவினி:
இவை கூட்டமாக இலையின் மேல் குருத்துக்களில் பூ மொட்டுகளில் மற்றும் காய்களில் காணப்படும்.
அசுவினியைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசிப்பேட் 200 கிராம் அல்லது மாலத்தியான் 200 மி.லி. தெளிக்கலாம்.
காய்ப் புழு:
புரடீனியா மற்றும் பச்சைக் காய்ப் புழுக்கள் இலைகளையும், காய்களையும் தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்திட ஆமணக்குச் செடியை வரப்பு ஓரத்தில் பொறிப் பயிராக விளைவித்து புரடீனியா பூச்சியின் முட்டைக் குவியல்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
வேப்ப எண்ணெய் 3% அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 % சோப்பு போன்ற ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும்.
பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பட்சத்தில் கீழே குறிப்பிடும் ரசாயனப் பூச்சி மருந்துக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்.
இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!
மிளகாய் மொசை நோய்:
அசுவினியைக் கட்டுப்படுத்த வேண்டும். அசுவினி இலைப்பேனைக் கட்டுப்படுத்திட மெதில் டெம்ட்டான் 25 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மூன்று முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
பச்சை மிளகாய் சாகுபடி முறையில் அறுவடை காலம்:
பச்சை மிளகாய் சாகுபடி செய்த 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை அறுவடை செய்யலாம்.
மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும் அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.
மகசூல்:
மகசூலைப் பொருத்தவரை 210-240 நாட்களில் ஏக்கருக்கு 10-15 டன் பச்சை காய்களும், 2-3 டன் காய்ந்த மிளகாய் வற்றல் மகசூலாகக் கிடைக்கும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.