பீன்ஸ் சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..!

Advertisement

பீன்ஸ் பயிரிடும் முறை (Beans Cultivation) மற்றும் அதன் பயன்கள்..!

பீன்ஸ் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். பீன்ஸ் மலை பிரதேசங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.மேலும் பீன்ஸில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் சந்தையில் அதிகளவு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்று.

சரி வாங்க பீன்ஸ் சாகுபடி (Beans Cultivation) முறையை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

பீன்ஸ் சாகுபடி முறை (Beans Cultivation) :

பீன்ஸ் சாகுபடி முறைக்கு ஏற்ற ரகங்கள்:

மலைப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் வளரும் வகையில் இரண்டு ரகங்கள் உள்ளது.

ஏற்காடு 1, ஊட்டி 1 ஆகிய ரகங்கள் மலை பிரதேசங்களில் வளரும் ரகங்கள் ஆகும்.

அர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் சமவெளி பகுதிகளில் பயிரிடப்படும் பீன்ஸ் ரகங்கள் ஆகும்.

பீன்ஸ் சாகுபடி (Beans Cultivation) முறைக்கு ஏற்ற பருவம்:

ஏற்காடு 1, ஊட்டி 1 ஆகிய ரகங்கள் விளைவதற்கு பிப்ரவரி – மார்ச் மாதம் ஏற்ற பருவம் ஆகும்.

அர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் விளைவதற்கு அக்டோபர் – நவம்பர் மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும். குளிர்ந்த சீதோஷண பருவத்தில் பீன்ஸ் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

மண்:

பீன்ஸ் சாகுபடி வண்டல் மண்ணில் அமோகமாக இருக்கும். மண்ணின் கார – அமில தன்மை 5 -6 ஆக இருக்க வேண்டும்.

நிலம் தயாரிப்பு:

பயிரிடும் நிலத்தை நன்கு உழுது அதில் தொழு உரத்தை இட்டு நிலத்தை சமன் படுத்த வேண்டும். பின்பு விதையை 30 செ.மீ இடைவெளியில் 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.

விதையளவு:

ஒரு ஏக்கருக்கு மலைப்பிரதேசங்களில் 80 கிலோ விதையும், சமவெளி பகுதிகளில் 50 கிலோ விதையும் பயன்படுத்தி பயிரிட வேண்டும்.

நீர் நிர்வாகம்:

பயிரிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள்:

அடிக்கடி தொழுஉரம் வைத்து தேவையற்ற களைகளை நீக்கி பராமரித்தாலே அதிக மகசூல் பெறலாம்.

பீன்ஸ் சாகுபடி – அறுவடை | Beans vivasayam:

100 நாட்களில் பீன்ஸ் அறுவடைக்கு தயாராகும். முதிர்ந்து விடாமல் இளசாக இருக்கும் பொழுது அறுவடை செய்வது நல்லது.

பீன்ஸ் பயன்கள் (Beans Health Benefits): 1

இந்த பீன்ஸ் வேகவைத்த நீரில் முகத்தை கழுவும் பொழுது முகம் பளபளக்கும்.

பீன்ஸ் பயன்கள் (Beans Health Benefits): 2

தொண்டைப்புண், இருமல் மற்றும் கைகால் நடுக்கத்தை கட்டுப்படுத்தும்.

பீன்ஸ் பயன்கள் (Beans Health Benefits): 3

நீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி பீன்ஸ்க்கு உண்டு.

பீன்ஸ் பயன்கள் (Beans Health Benefits): 4

இதய அடைப்பு மற்றும் தேவை இல்லாமல் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பை கரைக்கவும் பீன்ஸ் உதவுகிறது.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்
Advertisement