மிளகு சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

மிளகு சாகுபடி

மிளகு சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

வாசனை பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களில் மிளகும் ஒன்று. இந்த மிளகு குளிர்ச்சி மிகுந்த மலைப் பகுதியில் மட்டுமே சாகுபடி செய்யப்படும். தற்போது வறட்சி நிறைந்த பகுதியில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது.

சரி இப்போது நாம் இந்த பகுதில் மிளகு சாகுபடி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

மிளகு சாகுபடி – இரங்கங்கள்:

கிரிமுண்டா, கொட்ட நாடன், சுபகாரா, பஞ்சமி, பெளர்ணமி, ஒட்டப்பிளாக்கல் 1, கல்லுவள்ளி, பாலன்கொட்டா, ஐஐஏஸ்ஆர் சக்தி, ஐஐஏஸ்ஆர்தேவம், ஐஐஏஸ்ஆர் மலபார் எக்செல், உதிரன் கொட்டா மற்றும் பன்னியூர் 1,2,3,4,5 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பன்னயூர் 5 இரகம் நிழலைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. இது பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது. பன்னயூர் 1 மற்றும் கிரிமுண்டா இரகங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

மிளகு சாகுபடி(black pepper cultivation)- பருவம்:

இந்த மிளகு சாகுபடி பொறுத்தவரை ஜூன் முதல் டிசம்பர் மாதங்கள் வரை மிளகு சாகுபடி செய்யலாம். மேலும் இதனை மானாவாரியாகவும் பயிர் செய்யலாம்.

மிளகு சாகுபடி – நிலம் :

இந்த மிளகு சாகுபடி பொறுத்தவரை நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்கு வளரும். களிமண் பூமியிலும், மணற்பாங்கான நிலங்களிலும் இப்பயிர் நன்கு வளராது.

மண்ணின் கார அமிலத் தன்மை 4.5 முதல் 6.6 வரை இருந்தால் நல்லது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் இப்பயிர் நன்கு வளரும்.

இதையும் படிக்கவும்  கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறவேண்டுமா ? -அருமையான டிப்ஸ்

மிளகு சாகுபடி (black pepper cultivation) விதைகள்:

மிளகு பயிர் கொடி துண்டுகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு கொடியினை தாய்ச்செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும்.

வேர் பிடித்த பின்பு இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம் அல்லது நாற்றங்கால் மூலம் நடவு செய்யலாம்.

நாற்றங்கால் தயாரித்தல்:

நல்ல நிழலுடன், தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் மற்றும் 5.6 மீட்டர் அளவு நீளமும் கொண்ட உயரப் பாத்திகள் அமைக்க வேண்டும்.

மண்ணை நன்கு கொத்தி, பின்பு ஒரு பாத்திக்கு 12 கிலோ தொழு உரம், 5 கிலோ மண்புழு உரம், 250 கிராம் உயிர் உரங்கள், 5 கிலோ மணல் மற்றும் 5 கிலோ செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான தாய் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட துண்டுகளின் அருகில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்க வேண்டும்.

பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஓடுகொடிகளை தாய்க் கொடியில் இருந்து வெட்டி நீக்க வேண்டும்.

பின்பு ஓடுகொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும், கீழ்ப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் தவிர்த்து விட்டு நடுப்பகுதியை தண்டுத்துண்டுகள் (Cuttings) தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். இளம் ஓடு கொடிகளையும், முதிர்ந்த ஓடு கொடிகளையும் தவிர்க்க வேண்டும்.

பின்னர் ஓடு கொடியிலிருந்து 2-3 கணுக்களை கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும்.

இத்தகைய தண்டுத் துண்டுகளின் அடிப்பகுதியை பஞ்சகாவ்யா 3 சதம் கரைசலில் 30 நிமிடம் நனைத்து பின்பு பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நட வேண்டும்.

பாலித்தீன் பைகளில் (7×5 அங்குல அளவு) ஒரு பாகம் வளமான மேல் மண், ஒரு பாகம் ஆற்று மணல், ஒரு பாகம் தொழுஉரம் மற்றும் ஒரு பாகம் மண்புழு உரம் கலந்த கலவையை நிரப்ப வேண்டும்.

அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றங்கால் பாத்திகளில் 250 கிராம் அசோஸ்பைரில்லம், 250 கிராம் பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை நன்கு கலக்க வேண்டும்.

உரக்கலவையை இடுவதற்கு முன்னரே தேவையான சிறிய துளைகளை பைகளில் இட வேண்டும்.

பாத்திகளிலும், பாலித்தீன் பைகளிலும் தண்டு துண்டுகளை நட்ட பின்னர் போதிய நீர் விட்டு நிழலில் வைக்க வேண்டும். இரு முறை தேவையான அளவு நீரை பூவாளியால் ஊற்ற வேண்டும்.

வளரும் சிறு பதியன்கள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யா என்ற அளவில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பந்தல் அல்லது மூங்கில் தப்பைகள், பாலித்தீன் உறைகளை கொண்டு கூடாராம் அமைத்து அதில் பாலித்தீன் பைகளை வரிசையாக அடுக்க வேண்டும்.

பாலித்தீன் பையில் நடப்பட்ட துண்டுகள் மூன்றாம் வாரத்தில் வேர்விடத் தொடங்கி நடுவதற்கு தயாராகிவிடும்.

இதையும் படிக்கவும்  சின்ன வெங்காயம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

நிலம் தயாரித்தல்:

இதற்கு நிழல் மிகவும் அவசியம். எனவே இதனை தனி பயிராக சாகுபடி செய்ய முடியாது. தென்னை, பாக்கு தோட்டங்களில் இதனை வளர்க்கலாம்.

ஆகவே இதற்கான நிலம் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிக்கவும்  லாபம் அள்ளி தரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com