கம்பு பயிரிடும் முறை..! Pearl millet cultivation in tamil..!
கம்பு சாகுபடி முறைகள் / cumbu cultivation:- சிறுதானிய பயிர்களில் மிகவும் அதிக சத்துக்கள் நிறைந்த பயிர் கம்பு பயிர் என்று சொல்லலாம். தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்ததாக பயிரிடப்படும் உணவு பயிர், கம்பு. கம்பு குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப் பொருள்களை பெற்றுள்ளது.
கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகச் சிறந்த தானியமாகும். எனேவ சந்தையில் அதிக வரவேற்கப்படும் இந்த கம்பினை விவசாயிகள் பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம்.
சரி இங்கு கம்பு பயிர் சாகுபடி / kambu vivasayam முறை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..! |
சிறுதானிய சாகுபடி / Pearl millet cultivation in tamil..!
கம்பு சாகுபடி முறைகள் – இரகங்கள்:
வீரியம், ஒட்டு ரகங்கள், கம்பு கோ (சியு) 9, கம்பு வீரிய ஒட்டு (சியு) 9 போன்ற இரகங்கள் இந்த கம்பு பயிர் சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.
பருவ காலங்கள்:-
கோ (சியு) 9 ரகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வீரிய ஒட்டு கம்பு கோ (சியு) 9 ஆகியவை ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும். மேலும் இந்த ரகங்கள் மானாவரியில் ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், இறைவையில் மாசிப் பட்டம், சித்திரைப் பட்டங்களிலும் பயிரிடலாம்.
விதையளவு:-
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடைமுறையில் உள்ளது.
கம்பு சாகுபடி முறைகள் – விதை நேர்த்தி:-
ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து பின்பு விதைக்க வேண்டும்.
விதைப்பு வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 15 செ. மீட்டர் இடைவெளியும் விட வேண்டும்.
கம்பு சாகுபடி முறைகள் – உர அளவு:-
மானாவாரியில் 12.5 டன், (ஒரு ஏக்கருக்கு), தழைச்சத்து 40 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, அனைத்தும் அடியுரமாக இட வேண்டும்.
மல்லிகை பூ சாகுபடி முறைகள்..! |
பயிர் களைப்பு:-
கம்பு விதைத்த 2-வது வாரத்தில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். பொதுவாக 15-வது, 30-வது நாளில் களை எடுக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
கம்பு சாகுபடி முறைகள் – பயிர் பாதுகாப்பு:-
குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும்.
கதிர் நாவாய் பூச்சி:-
கதிர் நாவாய் பூச்சிக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 25 கிலோ கார்பரில், 5 சதவீத மாலத்தியான் ஆகியவற்றை பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும்.
அடிச்சாம்பல் நோய்:-
அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப் தெளிக்க வேண்டும்.
துரு நோய்:-
துரு நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 10 தினங்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
செண்டு மல்லி பூ சாகுபடி முறை..! |
கம்பு சாகுபடி முறைகள் – அறுவடை:-
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.
ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டி நன்கு காயவைத்து பின்னர் சேமித்து வைக்க வேண்டும். இந்த முறையில் கம்பை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம்.
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Pasumai Vivasayam in Tamil |