வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தண்டு கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

Updated On: August 12, 2023 8:24 AM
Follow Us:
தண்டு கீரை சாகுபடி
---Advertisement---
Advertisement

தண்டு கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

இயற்கை விவசாயம் பகுதியில் இன்று நாம் தண்டு கீரை சாகுபடி செய்வது எப்படி என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க…

பருவகாலம்:-

சித்திரை, ஆடி, மார்கழி, மாசி போன்ற காலங்களில் தண்டு கீரை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

மண்:-

தண்டு கீரை சாகுபடி பொறுத்தவரை நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் உகந்தது. அதிக களிமண் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும்.

விதையளவு:-

தண்டு கீரை சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ விதைகள் போதுமானது.

நிலம் தயாரித்தல்:-

தண்டு கீரை சாகுபடி செய்ய தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவுகளில் பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைத்தல்:-

தண்டு கீரை சாகுபடி பொறுத்தவரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். அப்பொழுது தான் விதைகள் சீராக விழுந்து முளைக்கும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்:-

தண்டுக்கீரை சாகுபடி பொருத்தவாரை விதை விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

தண்ணீர் பாச்சும் போது விதைகள் ஒரு பக்கமாக அடித்து ஓடாமல் இருப்பதற்கு பூவாளியை கொண்டு தண்ணீர் தெளிக்கவும்.

உரங்கள்:-

ஜீவாமிர்தக் கரைசலை 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

பாதுகாப்பு முறைகள்:-

களை நிர்வாகம்:-

தண்டுக்கீரை சாகுபடி (thandu keerai) பொருத்தவாரை ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். களைகளால் கீரைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே 10 – 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:-

கீரைகளில் பூச்சிகள் தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி, பூண்டு கரைசலை தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதனால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.

அறுவடை:-

தண்டு கீரை சாகுபடி (thandu keerai) 35 முதல் 40 நாட்களில் நாட்களில் கீரைகள் அறுவடைக்கு தயார் ஆகிவிடும்.

தண்டு கீரை பயன்கள்: 1

இந்த தண்டு கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, நார்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன.

தண்டு கீரை பயன்கள்: 2

குடல் புண், அல்சர் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

தண்டு கீரை பயன்கள்: 3

பெண்களின் கர்பப்பை பிரச்சனைகளுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது.

தண்டு கீரை பயன்கள்: 4

இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. இதனை மூல நோய் உள்ளவர்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

உளுந்து சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம்..!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now