உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா? – பகுதி – 2

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள்

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் ..!

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் :- அனைவருக்குமே தங்களது வீட்டில் மாடித்தோட்டத்தில் காய்கறிகள், கீரைவகைகள், பூச்செடிகள் என்று அதிகமாக வளர்த்து அவற்றின் மூலம் தங்களது வீட்டிற்கு முடிந்தவரை தேவைகளை சரிசெய்ய முடியும் என்ற எண்ணம் தான்.

அதனால்தான் அனைவருமே மாடித்தோட்டம் போட ஆசைபடுகிறோம்.

உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா? – பகுதி – 1

நாம் மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் (maadi thottam amaikkum murai) மூலம் தங்களது வீட்டிற்கு பயனுள்ளதாக இருக்கிறது, அதுமட்டுமின்றி விளைச்சல் அதிகரித்தால் அதிக வருமானமும் கிடைக்கும்.

விவசாயம் என்பது கிராமத்தில் மட்டும்தான் செய்யமுடியும் என்ற எண்ணம் மாறி இப்போது நகரங்களிலும் மாடித்தோட்டம் என்ற பெயரில் தற்போது விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

அவற்றில் காய்கறிகள், கீரைவகைகள், பூச்செடிகள் ஆகியவற்றை வளர்த்து அதிக லாபம் பெறுகின்றனர்.

சரி வாங்க மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் (maadi thottam amaikkum murai) பற்றி படித்தறிவோம்..!

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் ..!

இடவசதி இல்லை என்ற கவலை வேண்டாம்.  மொட்டைமாடிகளில், ஜன்னல் ஓரங்களில், மாடி படிகளில் என்று அனைத்து இடங்களிலும் செடிகளை வளர்க்கலாம்.

மண் தயாரிப்பு:

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் (maadi thottam amaikkum murai):- விளைச்சல் நன்கு பெறவேண்டும் என்றால் வளமான மண்ணை தயாரிக்க வேண்டும்.

செடிகள், தேவையான சக்திகளை மண்ணிலிருந்து மற்றும் காற்றிலிருந்து பெற்றுகொள்கிறது.

மண்ணின் சக்தியை மேலும் அதிகரிப்பதற்காக செம்மண் மற்றும் மணல் கலவையோடு சுண்ணாம்புத்தூள் மற்றும் வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து தொட்டிகளில் மண்ணாக விடவேண்டும்.

மாடித்தோட்டம் வைக்க போறிங்களா இந்த 5 தவறு செய்யாதீங்க..!

விதை விதைக்கும் முறை:

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் :- ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும்.

வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.

உரமிடுதல்:

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் (maadi thottam amaikkum murai) :- மாடித்தோட்டத்தில் தாவரங்களை வளர்ப்பதற்கு தேவையான அளவு தொழுஉரமும், மண்புழு உரமும் போன்றவற்றை கட்டாயம்  இடவேண்டும். சரி வாங்க மண்புழு உரம், தொழு உரம் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

மண்புழு உரம் தயாரிப்பு முறை:

மாடி தோட்டம் டிப்ஸ் :- மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.

இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில், தொட்டியில், குழியில் போட்டு வைக்கவும்.

கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.

அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.

தொழுஉரம் தயாரிப்பது எப்படி?

மாடி தோட்டம் டிப்ஸ் :- ”காய்ஞ்ச நிலத்துல ஆறு அடி நீளம், ரெண்டரை அடி அகலம் கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து… அதுல தென்னமட்டைகளைப் பரப்பி வைக்கணும்.

அதுக்கு மேல காய்ஞ்ச இலை தழைகள பரப்பணும். அதுக்கு மேல மாட்டு சாணம், கோமியம் கலந்த கெட்டியான கரைசல பரவலா ஊத்தணும்.

அடுத்ததா, தண்ணியில 24 மணிநேரம் ஊற வெச்ச மரக்கரியைப் பரவலா போடணும்.
இது கார்பன் சத்துக்கு. அடுத்ததா, வேப்பிலை, ஆடு, மாடுகள் சாப்பிடாத பச்சை இலை, தழைகளைப் போடணும். இது நைட்ரஜன் சத்துக்காக.

அடுத்ததா, சாம்பல், சுண்ணாம்புத் தூள் ரெண்டையும் கலந்து போடணும். இது தாது சத்துக்களுக்காக. அதுக்கு மேல பச்சை தென்ன ஓலைகளை அடுக்கணும்.
இதுல தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும்.

25 நாள் கழிச்சு கம்பால கொத்தி கலக்கி விடணும். மூணு மாசத்துல மண்புழுக்கள் உருவாகி, நல்ல உரமா மாறிடும். இத நேரடியா நிலத்துல கொட்டலாம். விளைச்சல் சிறப்பா இருக்கும்”.

உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.