இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

Advertisement

இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

கால மாற்றத்தின் காரணமாக 50 ஆண்டுகளாக விவசாயிகள் ஆகிய நாம் தொடர்ந்து செய்து வரும் தவறு எது என்றால் விவசாயத்திற்கு அதிகளவு செயற்கை இரசாயனங்களை அதிகளவு பயன்படுத்துவது  தான். இந்த செயற்கை ரசாயனங்களை, பயிரிடும் நிலத்திற்கு அதிகளவு பயன்படுத்துகிறோம். அதேபோல் பூச்சி கொல்லியாக செடிகள் மீதும் தெளிக்க பயன்படுத்தி வருகிறோம். இரசாயனம் கலந்த விளைபயிர்களை வாங்கி நாம் உண்ணும்போது பல பின் விளைவுகளை சந்தித்து, தினமும் மருத்துவமனைக்கு சென்று வரிசையில் காத்திருக்கிறோம்.

இயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..!

 

அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பிறக்கும் 17% குழந்தைகளுக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் வருகின்றது. எனவே இனியாவது விவசாயிகள் ஆகிய நாம் விவசாயத்திற்கு செயற்கை இரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை இரசாயனங்களை பயன்படுத்தி, அதாவது இயற்கை முறையில் பூச்சி விரட்டி மருந்து தயாரித்து மண் வளத்தையும் காத்து உயிர் வளத்தையும் காப்போம்..!

இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை..!

இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. எருக்கன் இலை – ஒரு கிலோ
  2. ஆடாதோடை இலை – ஒரு கிலோ
  3. நொச்சி இலை – ஒரு கிலோ
  4. வேப்பிலை – ஒரு கிலோ
  5. நெய்வேலிகட்டாமணி இலை – ஒரு கிலோ
  6. வெல்லம் – 1/2 கிலோ
  7. தண்ணீர் – 2 மடங்கு
  8. மாட்டு கோமியம் – ஒரு லிட்டர்
  9. மாட்டு சாணம் – 2 கிலோ
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு பகுதி – 2

பூச்சி விரட்டி செய்முறை:-

மேல் கூறப்பட்டுள்ள இலைகளை நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை எடுத்து கொள்ளவும். அவற்றில் மாட்டு சாணத்தை மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

பிறகு இடித்து வைத்திருக்கும் இலைகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

பின்பு அரைகிலோ வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும். (வெல்லம் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது)

அவ்வளவுதான் இயற்கை பூச்சிக்கொல்லி தயார். இந்த கலவையை 7 நாட்கள் வரை தினமும் மூன்று வேளை ஒரு குச்சியால் கிளறி விட வேண்டும்.

7 நாட்களுக்கு பிறகு இந்த கலவையை வடிகட்டினால் பூச்சி விரட்டி தயார்.

இவற்றை அனைத்து வகைப் பயிர்களுக்கும், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய பூச்சி விரட்டியை கலந்து மாலை நேரம் தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.

பயன்கள்:

  • மண் வளத்தை பாதுகாக்கிறது.
  • கெட்ட பூச்சிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துகிறது.
  • பயிர் வளத்தை மேம்படுத்துகிறது.
  • குறிப்பாக இரசாயனம் இல்லாத இயற்கை பூச்சி விரட்டியாக விளங்குகிறது.


இயற்கை பூச்சி விரட்டி – வேம்பு புங்கன் கரைசல்:

வேம்பின் இலை முதல் காய் வரை அனைத்து பொருட்களும் விவசாயத்துக்கு பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே வேப்பெண்ணெயை கொண்டு இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. வேப்பெண்ணெயை – ஒரு லிட்டர்
  2. புங்கன் எண்ணெய் – ஒரு லிட்டர்
  3. மாட்டு கோமியம் (பழையது) – 10 லிட்டர்
  4. காதி சோப்பு கரைசல் – 1/2 லிட்டர்

இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை:

மேல்கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து வைத்து ஒரு நாள் கழித்து உபயோகிக்கலாம்,

இந்த பொருட்களை கலக்கும் போது வேம்பு குச்சி கொண்டு கலக்கினால் அதிக பயன் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை:

இவ்வாறு தயார் செய்த பூச்சி விரட்டியினை 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேம்பு புங்கன் கரைசலை கலந்து பயிர்களுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் பயன்படுத்தலாம்.

நன்மைகள்:

இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.

காதி சோப்பு சேர்க்கும் போது தாவரங்களின் மேல் ஓட்டும் பொருளாக பயன்படுகிறது.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம் 
Advertisement